குடியுரிமை மசோதா : சுப்ரீம் கோர்ட்டில் முறையிட எதிர்க்கட்சிகள் முடிவு

Updated : டிச 12, 2019 | Added : டிச 12, 2019 | கருத்துகள் (28)
Share
Advertisement

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி : பார்லி.,யில் நிறைவேற்றப்பட்டுள்ள குடியுரிமை மசோதாவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்ய எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.



latest tamil news



ஏறக்குறைய 9 மணி நேர விவாதம் மற்றும் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பிற்கு இடையே ராஜ்யசபாவில் நேற்று குடியுரிமை மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதாவால் சிறுபான்மையினர் எந்த விதத்திலும் பாதிக்கப்பட மாட்டார்கள் என மத்திய அரசு விளக்கமும், உறுதி அளித்த பிறகும் அதனை ஏற்க எதிர்க்கட்சிகள் மறுத்து விட்டன. இதனால் சட்ட ரீதியாக இந்த மசோதாவை எதிர்க்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இதற்காக இன்று சுப்ரீம் கோர்ட்டை நாட திட்டமிட்டுள்ளன.


latest tamil news



குடியுரிமை மசோதாவை எதிர்த்து இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி, சுப்ரீம் கோர்ட்டில் இன்று (டிச.,12) ரிட் மனு தாக்கல் செய்தது. இதை சட்ட ரீதியாக எதிர்க்க போவதாக ராஜ்யசபாவில் நேற்று பேசிய போது காங்., மூத்த எம்.பி.,யான சிதம்பரமும் கூறி இருந்தார். இதனால் காங்., உள்ளிட்ட கட்சிகளும் இன்று சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.


ரிட் மனு என்பது என்ன?


ஒரு மனுவை அவசர வழக்காக எடுத்து விரைந்து விசாரணையை முடிப்பதற்காக தாக்கல் செய்யப்படுவது தான் ரிட் மனு.

Advertisement




வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
chenar - paris,பிரான்ஸ்
13-டிச-201914:29:23 IST Report Abuse
chenar மொழி அடிப்படையில் அகதிகள் ..., எப்போது?
Rate this:
Cancel
Tamilachi - crawley,யுனைடெட் கிங்டம்
12-டிச-201918:41:06 IST Report Abuse
Tamilachi பிணத்தை அடக்கம் செய்ய இடம் வேண்டும்னு ஒரு கேஸ்....370 நீக்குணத்துக்கு ஒரு கேஸ்...அவங்களுக்கு இன்டர்நெட் கெடைக்கலன்னு ஒரு கேஸ்...அவங்க நீதி மன்றம் போக முடில...வழியெல்லாம் ஒரே முள்ளா இருக்கு அத கொஞ்சம் பாத்து சொல்லுங்கன்னு ஒரு கேஸ்...தலாக் செல்லதுன்னு ஒரு கேஸ்..காஷ்மீர்ல வீட்டுகாவல்ல இருக்கறவங்கள பாக்க முடிலன்னு ஒரு கேஸ்...நான் என்னோட பிரெண்ட பாக்க முடிலன்னு ஒரு கேஸ்.இப்போ குடியுரிமை சட்டத்தை எதிர்த்து ஒரு கேஸ்....அவங்களுக்கும் நல்லா தெரியும் இரு அவைகளிலும் ஒப்புதல் பெட்ரா ஜனாதிப்பதி ஒப்புதல் பெட்ரா சட்டம்...நீதிமன்றம் தலை இட முடியாதுன்னு..இருந்தாலும் நாங்க இத அப்படியே ஏத்துக்கிட்டோம் ஒன்னும் பண்ண முடியலன்னு ஒரு பேச்சு வர கூடாதில்லயா...அதுக்குதான் இந்த கேஸ்...
Rate this:
Cancel
Tamilachi - crawley,யுனைடெட் கிங்டம்
12-டிச-201917:48:38 IST Report Abuse
Tamilachi போற போக்க பாத்தா இனிமே இந்த எதிரி உதிரி கட்சிங்க பிஜேபி மேல போன்ற கேச மட்டும் தான் நீதிமன்றம் நடத்தணும் போல...சாதாரண குடிமகன் காசெல்லாம் இனிமே நீதிமன்றத்துல எடுக்க கூட மாட்டாங்கன்னு நினைக்கறேன்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X