பொது செய்தி

தமிழ்நாடு

டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்த ரஜினி பிறந்தநாள்

Updated : டிச 12, 2019 | Added : டிச 12, 2019 | கருத்துகள் (18)
Share
Advertisement
புதுடில்லி : பிரபல சமூக வலைதளமான டுவிட்டரில் இந்திய அளவில் டிரெண்டிங் ஆன விஷயங்களில் நடிகர் ரஜினியின் பிறந்தநாள் முதலிடம் பிடித்துள்ளது.நடிகர் ரஜினியின் 69 வது பிறந்தநாள் இன்று (டிச.,12) கொண்டாடப்படுகிறது. ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் கோயில்களில் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடத்தி வருகின்றனர். பிறந்தநாளன்று தான் ஊரில் இருக்க மாட்டேன் என

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி : பிரபல சமூக வலைதளமான டுவிட்டரில் இந்திய அளவில் டிரெண்டிங் ஆன விஷயங்களில் நடிகர் ரஜினியின் பிறந்தநாள் முதலிடம் பிடித்துள்ளது.latest tamil newsநடிகர் ரஜினியின் 69 வது பிறந்தநாள் இன்று (டிச.,12) கொண்டாடப்படுகிறது. ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் கோயில்களில் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடத்தி வருகின்றனர். பிறந்தநாளன்று தான் ஊரில் இருக்க மாட்டேன் என ரஜினி ஏற்கனவே அறிவித்திருந்தாலும், அவருக்கு வாழ்த்து கூற இரவு முதலே ரசிகர்கள், போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டின் முன் குவிந்து வருகின்றனர். இது தவிர சமூக வலைதளங்களிலும் ரஜினிக்கு பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.


latest tamil news


இந்நிலையில் டுவிட்டரில் இந்திய அளவில் டிரெண்டிங் ஆன விஷயங்களில் ரஜினியின் பிறந்தநாள் முதலிடம் பிடித்துள்ளது. இதற்காக #HBDThalaivarSuperstarRAJINI என்ற ஹேஷ்டாக் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இதுவரை 2.54 லட்சம் பேர் கருத்து பதிவிட்டுள்ளனர். ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து, ரஜினியின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் குறித்த தகவல்கள் இதில் பதிவிடப்பட்டு வருகின்றன.

Advertisement
வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
swega -  ( Posted via: Dinamalar Android App )
12-டிச-201917:28:04 IST Report Abuse
swega நீடுழி வாழ்க!
Rate this:
Cancel
periasamy - Doha,கத்தார்
12-டிச-201915:23:34 IST Report Abuse
periasamy பிறந்த நாள் வாழ்த்துக்கள் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களுக்கு ஆனால் நீங்கள் தமிழனை ஆளவேண்டும் நினைத்தால் அது உங்களின் கேட்ட நேரம் தொடங்கிவிட்டது என்றுதான் பொருள்கொள்ளவேண்டும்
Rate this:
SURESH - kovai,இந்தியா
12-டிச-201919:36:00 IST Report Abuse
SURESHதமிழர்கள் ஒரு குடும்ப மன்னர் ஆட்சியை தான் விரும்புவார்கள்...
Rate this:
Cancel
R Sanjay - Chennai,இந்தியா
12-டிச-201914:12:40 IST Report Abuse
R Sanjay ஒரு சுயநலவாதியை நம்பி பல பயித்தியங்கள் இங்கு பித்து பிடித்து திரிகின்றன நாடு இது போன்ற கூத்தாடிகளையெல்லாம் நம்பினால் நாடு நாசமாக போகும், இந்த ரசிகை/ரசிகர்களுக்கு அடுத்த முதலமைச்சர் நயன்தாரா மற்றும் ஓவியா என்று கூறினாலும் தலையில் எடுத்து வைத்து கொண்டாடுவார்கள். இந்த நடிகர் நடிகைகளின் பின்னால் சுற்றும் அற்பப்பதர்கள் எல்லோரும் இந்த மாதம் ஒழுங்காக வேலைக்கு செய்யவில்லை என்றால் அடுத்த மாதம் வீட்டு வாடகை, EMI கடன்கள் எல்லாம் இவர்களின் நடிகர்கள் வந்து கட்டுவார்களா? உழைத்து சம்பாத்தித்த பணத்தில் இந்த நடிகர் நடிகைகளின் படங்களை பார்த்து விரயம் செய்கிறார்கள்? என்றாவது ஒரு நாள் இந்த நடிகர்கள்/நடிகைகள் தன் ரசிகனுக்காக தியேட்டர் கட்டண கொள்ளையை தடுத்து நிறுத்தி இருக்கிறார்களா? குறைந்த பட்சம் தியேட்டருக்கு வருபர்களின் பார்க்கின் கட்டணத்தையாவது ரத்து செய்யவேண்டும் என்று போராடி இருக்கிறார்களா? எந்த ஒரு பணக்கார நடிகனா அல்லது நடிகையோ ஒரு ஏழையை வாழ்க்கை துணைவியாக ஏற்று இருக்கிறார்களா? இல்லை தன் பிள்ளைகளுக்காவது ஒரு ஏழை அல்லது நடுத்தர குடும்பத்தில் இருந்து ஒரு வரனை தேர்ந்தெடுத்து இருக்கிறார்களா? ஒன்றுமே இல்லை. எல்லாம் உங்களிடம் உள்ள பணத்தை பிடுங்குவதற்கு உங்களை பயன்படுத்தி கொள்கிறார்கள், ஒரு மண்ணும் செய்யாத இவர்கள் எங்கு நாட்டை காப்பாற்ற போகிறார்கள்? சினிமாவை நம்பி கடந்த அரை நூற்றாண்டை வீணடித்துவிட்டோம் இதற்க்கு மேலாவது சுதாரிக்கவில்லையெனில் கோமணம் கூட மிஞ்சாது, சிந்தியுங்கள் ரசிக ரசிகர்களே, போங்க போயி உங்களின் மற்றும் உங்கள் பிள்ளைகளின் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு அடுத்து என்ன செய்வது என்று யோசித்து அதற்க்கு தக்க முயற்சிகளை எடுங்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X