அசாம் மக்கள் கவலைப்பட வேண்டாம் : மோடி

Updated : டிச 12, 2019 | Added : டிச 12, 2019 | கருத்துகள் (18)
Share
Advertisement

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி : குடியுரிமை மசோதா குறித்து அசாம் மக்கள் கவலைப்பட தேவையில்லை என பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.



latest tamil news



குடியுரிமை திருத்த மசோதா பார்லி.,யின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. சட்ட ரீதியாக இதனை எதிர்கொள்ள, கோர்ட்டில் முறையிட திட்டமிட்டுள்ளன. இந்நிலையில் இந்த மசோதா குறித்து பிரதமர் மோடி டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.


latest tamil news



அதில், குடியுரிமை மசோதா நிறைவேற்றப்பட்டது குறித்து அசாமில் உள்ள சகோதர,சகோதரிகள் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை என உறுதி அளிக்கிறேன். உங்களின் உரிமைகள், தனிப்பட்ட அடையாளம், அழகிய கலாச்சாரம் ஆகியவற்றை யாரும் பறிக்க முடியாது . அது உங்களின் வளம் மற்றும் வளர்ச்சியை தொடர செய்யும்.

பிரிவு 6 அடிப்படையில் அசாம் மக்களின் அரசியல், மொழியியல், கலாச்சார மற்றும் நில உரிமைகள் அரசியலமைப்பின் அடிப்படையில் பாதுகாக்க நானும் மத்திய அரசும் உறுதி பூண்டுள்ளோம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
12-டிச-201920:02:22 IST Report Abuse
ஆப்பு அடுத்து பிரிவு 6 ரத்து செய்யப்படாமலே ரத்தாகிவிடும்.போலிருக்கு.
Rate this:
Cancel
M.SHANMUGA SUNDARAM - TUTICORIN,இந்தியா
12-டிச-201914:15:56 IST Report Abuse
M.SHANMUGA SUNDARAM அசாம் மக்கள் கவலைப்பட வேண்டாம் என்றால் யார் கவலை படணும். பார்லியமென்டில் அசாம் மக்கள் விரோத சட்டம். வெளியே இப்படி பேச்சு. பத்தொன்பது லட்சம் மக்கள் தெருவில் நிற்கிறார்கள். நாற்பது வருடங்களுக்கு மேலாக இருப்பவர்கள் குடியுரிமை கிடையாது. நான்கு வருடம் முன்பு வந்தவர்களுக்கு குடியுரிமை உண்டு. நல்ல சட்டம். நாடு முழுவதும் நடை முறை படுத்தும் போது நமக்கு இதன் வலி தெரியும்.
Rate this:
Thirumal Kumaresan - singapore,இந்தியா
12-டிச-201914:34:30 IST Report Abuse
Thirumal Kumaresanஏன் தெருவில் நிக்கிறார்கள். அதற்க்கு யாரு காரணம்.யோசிக்கவும்...
Rate this:
வல்வில் ஓரி - தயிர் வடை,தத்தி சுடலை ,இந்தியா
12-டிச-201916:53:15 IST Report Abuse
வல்வில் ஓரிஅவனுங்க அஸ்ஸாம் மக்கள் ன்னா ஏன் தெருல நிக்கணும் ? அகதிகள் ன்னாதான் தெருவுல நிக்கணும். அப்புறம் ஒரு விஷயம்...அது என்ன நாடு முழுவதும்? உனக்கு இந்த சட்டம் பத்தி ஒன்னும் தேரிலேன்னா புறணி கெளப்பாம உன் பிஜேபி அரிப்பை அந்த நாலுமாவடி லாசரஸ் கிட்ட போயி தீர்த்துக்க.....
Rate this:
Cancel
Ashanmugam - kuppamma,இந்தியா
12-டிச-201913:01:36 IST Report Abuse
Ashanmugam அசாம் மக்கள் எதற்கும் கவலைப்படவேண்டாம். உண்ண உணவுக்கும், உடுக்க உடைக்கும், இருக்க இடத்திற்கும் மோடிஜி அவர்கள் எந்த குறையும் வைக்கமாட்டார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X