சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிறார் ஆபாச வீடியோ பரப்பியவர்; திருச்சியில் முதல் கைது

Updated : டிச 12, 2019 | Added : டிச 12, 2019 | கருத்துகள் (70)
Advertisement
Child, Porn, Video, Thiruchirapalli, Arrest, திருச்சி, ஆபாசவீடியோ, சிறார்ஆபாசம், குழந்தைகள்ஆபாசம், வீடியோ, கைது

இந்த செய்தியை கேட்க

சென்னை: சிறார்களின் ஆபாச வீடியோ பகிர்ந்ததற்காக இந்தியாவிலேயே முதன்முறையாக திருச்சியில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சமீபகாலமாக பெண்கள், சிறார்களின் மீதான பாலியல் வன்கொடுமை அதிகரித்து வருகிறது. இதற்கு ஆபாச வீடியோ பார்ப்பதும் ஒரு காரணியாக இருப்பதாக கருத்து நிலவுகிறது. இதனை தடுக்கும் விதமாக ஆபாச இணையதளங்களை தடை செய்யப்பட்டது. ஆனாலும், சில இணைய டெக்னிக்களை பயன்படுத்தி ஆபாச படங்களை பார்ப்பதும், பகிர்வதும் தொடர்ந்து வந்தன.
இந்நிலையில், பெண்கள் மற்றும் சிறார்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் டி.ஜி.பி., ரவி, ''சிறார்கள் தொடர்பான ஆபாச படம் மற்றும் வீடியோ பார்த்தவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. அவர்கள், விரைவில் கைது செய்யப்படுவர்,'' எனக் கூறினார்.

சிறார்களின் ஆபாச படங்களை பகிர்ந்ததாக, இந்தியாவில் முதல் முறையாக, திருச்சியை சேர்ந்த கிறிஸ்டோபர் என்பவன், கைது செய்யப்பட்டான். இவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க, திருச்சி மகளிர் நீதிமன்ற நீதிபதி வனிதா உத்தரவிட்டார்.







'நிலவன் நிலவன்', 'ஆதவன் ஆதவன்'



இதனையடுத்து, சமூக வலைதளங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தன. சிறார்களின் ஆபாச படங்களை பகிர்ந்ததாக இந்தியாவிலேயே முதல் முறையாக திருச்சியை சேர்ந்த கிறிஸ்டோபர் அல்போன்ஸ் ராஜ், என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். திருச்சி, காஜாபேட் தெருவில் வசிக்கும் கிறிஸ்டோபர், ஐடிஐ ஏசி மெக்கானிக் படித்து, நாகர்கோவிலில் பணியாற்றி வந்துள்ளார்.

'நிலவன் நிலவன்', 'ஆதவன் ஆதவன்' உள்ளிட்ட பெயர்களில் போலி பேஸ்புக் கணக்கில் 2 ஆண்டுகளாக தொடர்ந்து ஆபாச படங்களை பதிவேற்றியுள்ளார். மேலும், பேஸ்புக் மெஸஞ்சர் மூலமாக சுமார் 15 பேருக்கு சிறார்களின் ஆபாச படங்களை அனுப்பியதாக இன்று (டிச.,12) கைது செய்யப்பட்டார். இவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க திருச்சி மகளிர் நீதிமன்ற நீதிபதி வனிதா உத்தரவிட்டார்.





இது குறித்து ஏ.டி.ஜி.பி., ரவி கூறுகையில்;
கிறிஸ்டோபர், 15 பேருக்கு ஆபாச படங்களை பேஸ்புக்கில் அனுப்பிய 15 பேரிடமும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளோம். கிறிஸ்டோபர் மீது போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தப்படும். குற்றம் நிரூபிக்கப்பட்டால் 7 முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். தெரியாமல் சமூக வலைதளங்களில் ஆபாச படங்களை பார்த்தவர்கள் பயப்பட வேண்டாம். வேண்டுமென்றே இது போன்ற படங்களை பகிர்பவர்கள் தான் கைது செய்யப்படுவர்.
இவ்வாறு ரவி கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (70)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muruga Vel - Mumbai,இந்தியா
15-டிச-201905:50:13 IST Report Abuse
 Muruga Vel எந்த இணைய தளம்னு கண்டு பிடிச்சு தேடறது பெரிய விஷயமே இல்லை … காமெடி போலீஸ் ..
Rate this:
Share this comment
Cancel
elakkumanan - Naifaru,மாலத்தீவு
12-டிச-201921:02:55 IST Report Abuse
elakkumanan பெரியார் மண். சைக்கோ, குருமா, சைமன் போன்ற தியாக துருவங்கள் வசிக்கும் மண். கட்டுமரமும் குடும்பமும் தழைத்தோங்கி வளர்ந்த மண்ணுங்கோவ். விதைப்புக்கேற்ற விளைச்சல். நம்ம லயோலா கல்லூரியில் ஒரு நேர்காணலுக்கு இந்த ஆளை ஏற்பாடு பண்ணனும். செய்யுமா? அப்பொறம், அந்த 49 வெட்டிக் காவல் தெய்வங்கள் இந்த நிகழ்வை கண்டித்து மோடிக்கு ஒரு கடுதாசி எழுத்துவானுவலா? சோசப்பு அம்மா சோசப்புக்கு கடுதாசி எழுதி, பத்திரிகைக்கு கொடுப்பாங்க. மோடிக்கு யாராவது கடுதாசி எழுதனுமே. ப்ளீஸ் யாராவது எழுதுங்கோவ்.................................மோடிக்கு கடுதாசி................ப்ளீஸ்.............................
Rate this:
Share this comment
Cancel
thulakol - coimbatore,இந்தியா
12-டிச-201920:47:20 IST Report Abuse
thulakol இவனுக எல்லாம் இந்துக்கள் பெயரை வைத்து கொண்டு எல்லோரையும் ஏமாற்றி ஹிந்து களுக்கு கேட்ட பெயர் திட்டமிட்டு உண்டாக்குகிறார்களோ
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X