பொது செய்தி

இந்தியா

பலாத்கார குற்றத்தில் 21 நாளில் தூக்கு: ஜெகன் அதிரடி

Updated : டிச 12, 2019 | Added : டிச 12, 2019 | கருத்துகள் (31)
Advertisement

இந்த செய்தியை கேட்க

அமராவதி : பாலியல் பலாத்கார குற்றங்களுக்கு 21 நாட்களில் துாக்கு தண்டனை வழங்கும் சட்ட மசோதாவை தாக்கல் செய்ய ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆந்திர அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.





ஐதராபாத்தில் பெண் டாக்டர் 4 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, எரித்து கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து குற்றவாளிகள் 4 பேரும் விசாரணைக்காக சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்ற போது, போலீசாரை தாக்கி விட்டு, தப்பி ஓட முயன்ற போது என்கவுன்டர் செய்யப்பட்டனர். இதற்கு பொது மக்கள் ஆதரவு தெரிவித்தாலும், மனிதஉரிமை கமிஷன் உள்ளிட்ட சில அமைப்புக்களும், பிரபலங்கள் சிலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.





இந்நிலையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான கொடூர தண்டனைகளுக்கு 21 நாட்களுக்குள் தண்டனை வழங்கும் சட்ட மசோதாவை ஆந்திர சட்டசபையில் தாக்கல் செய்ய முதல்வர் ஜெகன் மோகன் தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.
ஐதராபாத் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்னை குறிக்கும் விதமாக "திஷா" என்ற பெயரில் பெண்களை பாதுகாக்கும் இந்த சட்ட மசோதாவுக்கு மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஐதராபாத் பெண் டாக்டரின் அடையாளத்தை பாதுகாப்பதற்காக திஷா என்ற பெயரிலேயே போலீசார் அந்த வழக்கை குறிப்பிடுகின்றனர். இதனால் அந்த சட்டத்திற்கும் திஷா என பெயரிடப்பட்டுள்ளது.
இது பற்றி உள்துறை அமைச்சர் சுசாரிதா கூறுகையில், இந்த சட்ட மசோதாவின் படி பெண்கள் மற்றும் சிறாருக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகளில் ஒரு வாரத்தில் போலீஸ் விசாரணை நடத்தி முடிக்கப்படும். வழக்கு விசாரணை 2 வாரங்களில் முடிக்கப்பட்டு, 21 நாட்களுக்குள் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என்றார்.
தண்டனைகள் நிறைவேற்ற தாமதிக்கப்படுவதால் குற்றங்கள் அதிகரிப்பதாகவும், தவறு செய்பவர்களுக்கு தண்டனைகள் மீதான பயம் குறைந்து விடுவதாகவும் ஜெகன் மோகன் ரெட்டி, சட்டசபையில் ஏற்கனவே கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
இந்தியன் kumar - chennai,இந்தியா
17-டிச-201913:17:13 IST Report Abuse
இந்தியன் kumar நல்ல விஷயங்கள் அனைவராலும் வரவேற்கப்பட வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
oce - kadappa,இந்தியா
13-டிச-201909:16:22 IST Report Abuse
oce வெரி குட் தம்பி.
Rate this:
Share this comment
Cancel
Murugan - Boissy- saint- leger,பிரான்ஸ்
12-டிச-201917:52:51 IST Report Abuse
Murugan சபாஷ்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X