சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

பெரிய கருந்துளை கண்டுபிடிப்பு

Added : டிச 12, 2019 | கருத்துகள் (1)
Advertisement
 பெரிய கருந்துளை கண்டுபிடிப்பு

ஜெர்மனியிலுள்ள மேக்ஸ் பிளாங்க் விண் இயற்பியல் நிலையம் மற்றும் மியூனிச் பல்கலைக்கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், ஒரு மிகப் பெரிய கருந்துளையை கண்டறிந்துள்ளனர்.

பூமியிலிருந்து, 70 கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் இந்தக் கருந்துளை அமைந்துள்ளது. விண் தொலைநோக்கிகள் மூலம் பெறப்பட்ட போட்டோமெட்ரி மற்றும் அலைக்கற்றை தகவல்களை ஆராய்ந்து, இந்த மிகப் பெரிய கருந்துளையை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இக் கருந்துளை, நம் சூரியனைவிட, 40 பில்லியன் மடங்கு நிறை கொண்டது என விஞ்ஞானிகள் அளவிட்டுள்ளனர். 'அபேல் -85' என்ற நட்சத்திரப் பெருந்திரளில் இப் பெரிய கருந்துளை அமைந்து உள்ளது.

முதல் முதலாக, 1971ல்தான் கருந்துளை ஒன்று கண்டறியப்பட்டது. இதுவரை கண்டறியப்பட்டதிலேயே மிகச் சிறிய கருந்துளையின் நிறை வெறும் 22 மைக்ரோ கிராம்தான். மியூனிச் விஞ்ஞானிகள் அண்மையில் கண்டறிந்த கருந்துளை மிகப் பெரியவைகளுள் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. கருந்துளைகள், எரிபொருள் தீர்ந்து, உள்நோக்கி சுருங்க ஆரம்பித்த நட்சத்திரங்களாகும். அவை சுருங்கும்போது, அருகே உள்ள கோள்கள், நட்சத்திரங்கள் என்று எவற்றையும் தன்னுள் கபளீகரம் செய்யதபடியே இருக்கும்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
15-டிச-201902:18:25 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் இந்திய தகவல் அறியும் உரிமை சட்டத்துக்கு அடுத்தபடியாக இந்த கருந்துளை தான் பெரிது. என்ன போட்டாலும் திரும்ப விஷயம் வராது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X