வெற்றி யாருக்கு? : துவங்கியது பிரிட்டன் தேர்தல்

Updated : டிச 12, 2019 | Added : டிச 12, 2019
Advertisement

இந்த செய்தியை கேட்க

லண்டன் : பிரிட்டனில் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே பொதுத் தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு இன்று (டிச.,12) நடந்து வருகிறது.





இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்காட்லாந்து, வடக்கு அயர்லாந்தில் 650 தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. 5 ஆண்டுகளில் மூன்றாவது முறையாக நடைபெறும் இந்த தேர்தலில் 650 எம்.பி.,க்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். உள்நாட்டு நேரப்படி காலை 7 மணிக்கு தொடங்கி இரவு 10 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறும். 4.6 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 40 ஆயிரம் வாக்குப் பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.





இந்த தேர்தலில் ஆளும் கன்சர்வேடிவ் கட்சிக்கும், லேபர் கட்சிக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. வாக்குப் பதிவு முடிந்தவுடன் வாக்கு எண்ணிக்கை தொடங்கி, நாளை காலை முடிவுகள் அறிவிக்கப்படும். 326 தொகுதிகளில் வெற்றிபெறும் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். போரிஸ் ஜான்சன் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சி வெற்றி பெறுவதற்கு வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இந்த தேர்தல் முடிவு மூலம், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறும் பிரெக்சிட் திட்டத்திற்கு முட்டுக்கட்டை நீங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X