மோடியின் டுவிட்டர் பதிவு: காங்., கிண்டல்

Updated : டிச 12, 2019 | Added : டிச 12, 2019 | கருத்துகள் (46)
Advertisement
CAB, Congress, Modi, Twitter, Assam, மோடி, காங்கிரஸ், டுவிட்டர், கிண்டல், அசாம், குடியுரிமை, மசோதா

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: குடியுரிமை மசோதா நிறைவேற்றப்பட்டதை எதிர்த்து அசாமில் போராட்டம் நடந்து வருகிறது. இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்ட டுவிட்டர் பதிவை, காங்., கட்சி கிண்டலடித்து பதிவிட்டுள்ளது.
குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து அசாமில் வன்முறை தீவிரமடைந்துள்ளது. அம்மாநிலம் முழுவதும் இணையம் துண்டிக்கப்பட்டது. கவுகாத்தியில் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. பாதுகாப்புக்காக, துணை ராணுவப்படையினரும் ஈடுபட்டு வருகின்றனர்.






இது குறித்து, பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், அசாமில் உள்ள சகோதர, சகோதரிகள் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை என உறுதி அளிக்கிறேன். உங்களின் உரிமைகள், தனிப்பட்ட அடையாளம், அழகிய கலாச்சாரம் ஆகியவற்றை யாரும் பறிக்க முடியாது. இவ்வாறு மோடி பதிவிட்டிருந்தார்.




மோடியின் இந்த டுவிட்டை மேற்கோள் காட்டிய காங்கிரஸ், தனது டுவிட்டர் பக்கத்தில் கிண்டல் அடித்துள்ளது. காங்.,கின் பதிவு: அசாமில் உள்ள எங்கள் சகோதர, சகோதரிகள் உங்கள் 'உறுதியளிக்கும்' செய்தியைப் படிக்க முடியாது. மோடி அவர்களே, அவர்களின் இணையம் துண்டிக்கப்பட்டதை நீங்கள் மறந்திருக்கலாம், என கிண்டல் செய்து பதிவிட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (46)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ravi -  ( Posted via: Dinamalar Android App )
13-டிச-201905:48:12 IST Report Abuse
Ravi Twitter a பார்க்க internet வேணுமா என்ன.??இதையெல்லாம் வச்சிகிட்டு... என்னத்த சொல்ல...
Rate this:
Share this comment
Cancel
வால்டர் - Chennai,இந்தியா
12-டிச-201920:45:49 IST Report Abuse
வால்டர் டீ கடைக்காரான்னு கேவலமா பேசறதை நிறுத்திட்டானுவோ. ஆபிரகாம் லிங்கனை பெருமையா பேசுவானுங்க, நம்ம ஊருல பிரதமர் முதலமைச்சர்னு ஆயிட்டா கேவலமா பேசுவானுவோ. சுடலையின் சரித்திரம் கூட எல்லோருக்கும் தெரியும். ஆனா அந்த ஊபிஸ் கூட டீ கடைக்காரன் அப்படி இப்படின்னு கலாய்ச்சானுங்க. அகில இந்தியா மற்றும் தமிழகம் இரண்டிலும் மீண்டுமொருமுறை ஆட்சி கட்டிலேறி சாதனை படைத்துவிட்டனர். சுடலைக்கு ஐஸ்கிரீம் ஒன்னு பார்சல்.
Rate this:
Share this comment
Cancel
12-டிச-201919:58:14 IST Report Abuse
ஆப்பு அஸ்ஸாமிய மொழியில் புறநானூறு, திருக்குறள் ஏதாவது இருந்தா அடிச்சு உட வேண்டியதுதானே... சீன அதிபரின் அடுத்த வருகையை கவுஹாத்தியில் நடத்தி அசத்தலாம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X