காங்கிரசில் படித்தவர்கள் குறைவா?: சுப்ரமணிய சுவாமி கேள்வி

Updated : டிச 12, 2019 | Added : டிச 12, 2019 | கருத்துகள் (88)
Advertisement
illiteracy, Congress, Subramanian Swamy, RS debate, Citizenship Bill, காங்கிரஸ், சுப்ரமணிய சுவாமி, பா.ஜ.,

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி : '' காங்கிரசில் உள்ள படிக்காதவர்களின் எண்ணிக்கையை நம்பமுடியவில்லை'' என குடியுரிமை சட்ட திருத்த மசோதா மீதான விவாதத்தின் போது பா.ஜ., எம்.பி., சுப்ரமணிய சுவாமி கூறியுள்ளார்.
ராஜ்யசபாவில் சுப்ரமணிய சுவாமி பேசியதாவது : குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கும், தேசிய குடிமக்கள் பதிவிற்கும் காங்கிரசுக்கு வித்தியாசம் தெரியாததால், இந்த அவையை தவறாக வழிநடத்துகிறது. கடந்த 1947 நவ.,25 ல், பாகிஸ்தானில் இருந்து வந்த '' முஸ்லிம் அல்லாத '' அகதிகளுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றிய காங்கிரஸ் இப்போது, எதிர்க்கிறது.


காங்கிரஸ் இவ்வளவு அறிவில்லாம இருக்றத என்னால நம்பவே முடியல..னு சொல்றார் பிஜேபி தலைவர் சுப்ரமணியம் சுவாமி.

அமித்ஷாவை பாராட்ட வேண்டும்

பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கனில் ஹிந்துக்களுக்கு எதிராக தினமும் வன்முறை நடக்கிறது.பாகிஸ்தானிலிருந்து வந்துள்ள ஹிந்துக்கள் அல்லாத பல்வேறு சிறுபான்மையினத்தவருடன் விரிவாக ஆலோசனைக்கு பிறகே, இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளில், இனப்படுகொலை காரணமாக சிறுபான்மையினரின் எண்ணிக்கை குறைந்துள்ளது. பல ஆண்டு காத்திருப்பிற்கு பிறகு இந்த மசோதாவை கொண்டு வந்ததற்காக அமித்ஷாவை பாராட்ட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்


ஏற்க முடியாது


சட்டப்பிரிவு 14 தொடர்பாக, சுப்ரமணிய சாமியை சில காங்கிரஸ் எம்.பி.,க்கள் கிண்டல் செய்தனர். அப்போது அவர் கூறுகையில், காங்கிரஸ் கட்சியில் இருக்கும் படிக்காதவர்களின் எண்ணிக்கையை என்னால் நம்ப முடியவில்லை. குடியுரிமை சட்ட திருத்த மசோதாவில் சில முக்கிய அம்சங்களை மன்மோகன் சிங் ஆதரித்துள்ளார். இந்த மசோதாவில், முஸ்லிம்களையும் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்க முடியாது. பாகிஸ்தான் முஸ்லிம்கள் இந்தியாவில் வந்து தங்க விரும்புவது இல்லை. அவர்களுக்கு என, இஸ்லாமிய கொள்கைகளை கொண்ட நாடு உள்ளது எனவும் கூறினார்.


சிதம்பரத்திற்கு பதில்


குடியுரிமை மசோதாவில் அஹமதியர்களை சேர்க்காதது ஏன் என முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் பேசிய சுப்பிரமணிய சுவாமி, அஹமதியர்கள், ஷியா பிரிவினர், ஈரானுக்கோ, ஷியா பிரிவு மக்கள் அதிகம் வசிக்கும் நாட்டிற்கோ, அல்லது பஹ்ரைனுக்கோ செல்வதை தான் விரும்புவார்கள். அங்கு அஹமதியர்களை முஸ்லிம்களாக ஏற்றுகொள்வார்கள் என்றார்.

சுவாமியின் பேச்சு, காங்கிரசில் அறிவானோர் குறைவாக இருப்பதையே காட்டுகிறது என அரசியல் நோக்கர்கள் தெரிவித்தனர்.


குடியுரிமை


ராஜ்யசபாவில் பேசுவதற்கு முன்னதாக சுப்ரமணிய சுவாமி டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், முஸ்லிம் படையெடுப்பாளர்கள் மற்றும் அவர்களின் சந்ததியினரின் கைகளில் ஹிந்துக்கள் அனுபவித்த கொடூரங்களை ஒதுக்கி விடுங்கள். பாரத மாதாவின் மூன்றில் ஒரு பகுதியை துண்டாடினோம். இதனால், எந்தவொரு முஸ்லிம் அகதிகளை நிராகரிக்க நமக்கு உரிமை உண்டு. இதற்கு தாரா பதா மற்றும் தஸ்லிமா நஸ்ருதீன் ஆகியோருக்கு விதிவிலக்கு உண்டு. குறிப்பிட்ட திருத்தத்திற்கு அரசியல்சாசன சட்டப்பிரிவு 14 எந்த தடையும் விதிக்கவில்லை எனக்கூறியிருந்தார்.


நிறைவேற்றம்


2014 டிச.,31க்கு முன்னர், பாகிஸ்தான், ஆப்கன் மற்றும் வங்கதேசத்தில் இருந்து இந்தியாவிற்குள் அகதிகளாக வந்த ஹிந்துக்கள், கிறிஸ்துவர்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர் ஆகியோருக்கு, குடியுரிமை அளிப்பதை, குடியுரிமை சட்ட திருத்த மசோதா உறுதி செய்கிறது. இந்த மசோதாவிற்கு, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திரிணமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. கடந்த திங்கட்கிழமை லோக்சபாவில், நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா, நேற்று (டிச.,11) ராஜ்யசபாவிலும் நிறைவேறியது.

Advertisement
வாசகர் கருத்து (88)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
16-டிச-201919:31:41 IST Report Abuse
Sampath Kumar அய்யா உங்களுக்கு அறிவு கூடுதல் தான் அதுனாலே தான் உங்க மந்திர ஆலோசனை எடுபடுது ??/ என்ன செயய நடப்பது உங்க ஆட்சி ???
Rate this:
Share this comment
Cancel
Ramalingam Shanmugam - mysore,இந்தியா
14-டிச-201913:00:04 IST Report Abuse
Ramalingam Shanmugam இந்தியாவில் ஒரு புத்தி சாலி கூட இல்லை அதனால் தான் இத்தாலியில் இருந்து இறக்குமதி செய்தோம்
Rate this:
Share this comment
Cancel
ராஜவேலு ஏழுமலை - Gummidipoondi,இந்தியா
13-டிச-201912:23:32 IST Report Abuse
ராஜவேலு ஏழுமலை காங்கிரஸில் பண்புள்ளவர்கள் அதிகம். பிஜேபியில அது குறைவு.
Rate this:
Share this comment
sankar - Nellai,இந்தியா
13-டிச-201914:38:52 IST Report Abuse
sankarவஞ்சப்புகழ்ச்சி?...
Rate this:
Share this comment
ashak - jubail,சவுதி அரேபியா
14-டிச-201902:44:00 IST Report Abuse
ashakஉன்னாவ் சம்பவம் அதற்க்கு எடுத்து காட்டு...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X