நிர்பயா குற்றவாளியின் சீராய்வு மனு; டிச.,17ல் விசாரணை

Updated : டிச 12, 2019 | Added : டிச 12, 2019 | கருத்துகள் (15)
Advertisement
Nirbhaya, ReviewPlea, AkshaySingh, SupremeCourt, நிர்பயா, குற்றவாளி, தூக்கு, தண்டனை, சீராய்வு, மனு, விசாரணை,

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: டில்லியில் நடந்த நிர்பயா பலாத்கார வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 4 பேருக்கு இன்னும் சில நாட்களில் தூக்கு போட இருக்கும் நிலையில், அக் ஷய் சிங்கின் சீராய்வு மனு மீதான விசாரணை டிச.,17ல் நடைபெறும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

கடந்த 2012 டிசம்பர் மாதம் ஓடும் பஸ்சில் மாணவி நிர்பயா 6 பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டு மருத்துவமனையில் சேர்ந்து பின் இறந்தார். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடு முழுவதும், பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். குற்றவாளிகள் விகேஷ்சிங், வினய்சர்மா, அக் ஷய் சிங், பவன்குமார் குப்தா ஆகிய 4 பேருக்கு சுப்ரீம் கோர்ட் மரணத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. குற்றவாளிகள் 4 பேரில் வினய்சர்மா அளித்த கருணை மனு தள்ளுபடி ஆகிவிட்டது. ஏனைய 3 பேர் கருணை மனு தாக்கல் செய்யவில்லை.





இதனால் தூாக்கு போட போவதாக வாரண்ட்டும் வழங்கப்பட்டு விட்டது. சட்டப்படி கருணைமனு நிராகரிக்கப்பட்ட 14 நாட்களுக்குள் தூக்கு தண்டனை நிறைவேற்ற வேண்டும். இதனால் 4 பேரும் டிச.,16 ம் தேதி தூக்கிலிடப்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் அக் ஷய் சிங், உச்சநீதிமன்றத்தில், தனக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீது டிச.,17ல் மூன்று பேர் கொண்ட அமர்வு விசாரிக்கும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. இதனால், தூக்கு தண்டனை மேலும் தள்ளிப்போகிறது.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
blocked user - blocked,மயோட்
13-டிச-201906:29:00 IST Report Abuse
blocked user ஜானதிபதி நிராகரித்த பின்னரும் ஏன் நீதிமன்றம் குழப்பம் விளைவிக்கவேண்டும்? மன்னிப்பு கொடுப்பதற்கு ஜனாதிபதியை விட நீதிமன்றத்துக்கு அதிகாரம் ஒன்றும் இல்லை.
Rate this:
Share this comment
Cancel
13-டிச-201906:20:32 IST Report Abuse
ஆப்பு வருஷத்தை சொல்லலியே? டிசம்பர் 17, 2050 க்குளேயாவது கேசை முடிங்க.
Rate this:
Share this comment
Cancel
ashak - jubail,சவுதி அரேபியா
12-டிச-201922:05:14 IST Report Abuse
ashak நம்பிக்கையின் அடிப்படையில் தீர்ப்பு சொல்வாங்க போல
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X