பொது செய்தி

இந்தியா

நான் தமிழரின் பிள்ளை: ஆங்கிலேய கோடீஸ்வரர் ஆச்சரியம்

Updated : டிச 12, 2019 | Added : டிச 12, 2019 | கருத்துகள் (46)
Advertisement
RichardBranson, TamilDNA, Virgin, HyperLoop, ரிச்சர்ட்பிரான்ஸன், விர்ஜின், ஹைப்பர்லூப், டிஎன்ஏ, தமிழர், மும்பை,

இந்த செய்தியை கேட்க

மும்பை: எனது டி.என்.ஏ., தமிழகத்தை சேர்ந்தது,, நான் தமிழரின் பிள்ளை என லண்டனை சேர்ந்த பெரிய கோடீஸ்வரரும், தொழிலதிபருமான ரிச்சர்ட் பிரான்சன் தெரிவித்துள்ளார்.

லண்டனை சேர்ந்த ரிச்சர்ட் பிரான்ஸன், 69, மிகப் பெரிய கோடீஸ்வரர். விர்ஜின் குழுமத்தின் நிறுவனரான இவர், ஏர்லைன்ஸ், டெலிகாம் உள்ளிட்ட 400 கம்பெனிகளை நடத்தி வருகிறார். இந்தியாவில் மும்பை முதல் புனே வரையிலான ஹைப்பர்லூப் திட்டத்திற்கு உதவி புரிந்து வருகிறார். இதற்காக மஹாராஷ்டிரா மாநிலத்தில் தேவேந்திர பட்னவிஸ் முதல்வராக இருந்தபோது ஒப்பந்தம் போடப்பட்டு, பணிகள் தொடங்கின. தற்போது உத்தவ் தாக்கரே முதல்வராக பொறுப்பேற்றதும், இத்திட்டத்தை கைவிடும் முடிவில் இருக்கிறார்.
இது தொடர்பாக உத்தவ் தாக்கரேவை சந்திக்க மும்பை வந்துள்ளளார் பிரான்சன். அப்போது நிருபர்களிடம் பிரான்ஸன் கூறியதாவது: ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக என்னுடைய டி.என்.ஏ.,வை பரிசோதனை செய்தனர். அதில், எனது, டிஎன்ஏ தமிழகத்தை சேர்ந்தது என தெரியவந்தது.

என் மூதாதையர் தமிழகத்தின் கடலூரில் 1793ம் ஆண்டு முதல் நான்கு தலைமுறைகளாக வாழ்ந்து வந்துள்ளனர். அப்போது மூதாதையரில் ஒருவர், தமிழக பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனால் நான் இந்தியா வரும்போதெல்லாம், என்னை சந்திப்பவர்களிடம் நாம் உறவினர்களாக கூட இருக்கலாம் என கூறுவதுண்டு. இவ்வாறு பிரான்ஸன் கூறினார்.
Advertisement
வாசகர் கருத்து (46)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamil - chennai,இந்தியா
17-டிச-201909:58:27 IST Report Abuse
Tamil இன்று தோன்றிய உலகத்திற்கு முன்பு மிகவும் அறிவில் முன்னேறிய உலகம் அழிந்து இருக்க வாய்ப்பு உண்டு. கோவில் இருக்கும் நவகிரகம் இதற்கு சாட்சி. சூரியன் நடுவிலும் சுற்றி மற்ற கிரகங்கள் இருந்தது தொகைநோக்கி இன்றி எப்படி அமைக்க முடிந்தது. குச்சி வைத்து நிலத்தில் தோண்டாமல் நீர் கண்டுபிடிக்கும் முறை மற்றும் சூரியனை பார்த்து மணி சொல்லும் முறை இவை அனைத்தும் அழிந்து போன முன்னேறிய நகரியத்தில் இருந்து வந்தது. அந்த அளவிற்க்கு தற்போதைய அறிவியல் இன்னும் வளரவில்லை. அது வளர்ந்தால் தான் இதற்கு முன்னாள் அழிந்து போன அறிவியலை தெரியவரும். தற்பொழுது நடக்கும் அறிவியல் வியாபாரத்திற்கான கலப்பட அறிவியல்.அதில் உண்மையும் பொய்ம் கலந்து மக்களுக்கு சொல்லப்படுகிறது. தூய அறிவியல் மூலம் research செய்தல் மட்டுமே பல விடைகள் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.
Rate this:
Share this comment
Cancel
Asagh busagh - Munich,ஜெர்மனி
15-டிச-201916:25:54 IST Report Abuse
Asagh busagh போச்சுடா எதை தின்னால் பித்தம் தெளியும்னு அலையுற சபரீசன் மற்றும் பிரசாந்த் கிஷோர் கூட்டம் பிரான்ஸனை சுடலை பிரச்சாரத்துக்கு இழுக்க முயற்சி மேற்கொள்வானுங்க.
Rate this:
Share this comment
Cancel
K.Ramesh - goa,இந்தியா
15-டிச-201905:12:00 IST Report Abuse
K.Ramesh Athanal enna ithu oru periya vishayamae illai. Indu sanathana darmathil solluvathae ulaga makkal anaivarim orae "vasudeva kudumbam" sarthavargal.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X