மஹா., அமைச்சர்களுக்கு இலாகா: சிவசேனாவிடம் உள்துறை

Updated : டிச 12, 2019 | Added : டிச 12, 2019 | கருத்துகள் (8)
Share
Advertisement
மஹாராஷ்டிரா, அமைச்சரவை, இலாகா, ஒதுக்கீடு, உத்தவ் தாக்கரே

இந்த செய்தியை கேட்க

மும்பை: மஹாராஷ்டிராவில் புதிய அரசு பதவியேற்ற இரண்டு வாரங்களுக்கு பின்னர், அமைச்சர்களின் இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த நவ., 28 ல் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தலைமையில் மஹாராஷ்டிரா விகாஸ் அகாடி கூட்டணி அரசு பதவியேற்றது. புதிய அரசு பதவியேற்று இரண்டு வாரங்கள் ஆகிய நிலையில், அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு செய்யப்படாமல் இருந்தது.

இந்நிலையில், முதல்வர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், சிவசேனா அமைச்சரவை சேர்ந்த அமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவிடம், உள்துறை, நகர்ப்புற வளர்ச்சி, வனம், சுற்றுச்சூழல், குடிநீர் சப்ளை, விநியோகம், சுற்றுலா, பார்லி விவகாரத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.


latest tamil newsசிவசேனாவை சேர்ந்த மற்றொரு அமைச்சர் சுபாஷ் தேசாயிடம், தொழில்துறை, உயர்நிலை மற்றும் தொழில்நுட்ப கல்வித்துறை, விளையாட்டு மற்றும் இளைஞர் நலன், போக்குவரத்து, மராத்தி மொழி, கலாசாரத்துறை, துறைமுகம் ஆகிய துறைகளும் ஒதுக்கப்பட்டன.

தேசியவாத காங்கிரசின் ஜெயந்த் பாட்டீலுக்கு, நிதி, திட்டம், வீட்டுவசதி, பொது சுகாதாரம், கூட்டுறவு, உணவு, சிவில் சப்ளை, தொழிலாளர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையும், தேசியவாத காங்கிரசை சேர்ந்த சகன் புஜ்பாலுக்கு சுற்றுநீர்ப்பாசனம், கிராமப்புற வளர்ச்சி, சமூக நீதி, சுங்கம் , தனிநபர் வளர்ச்சித்துறையும், காங்கிரசின் பாலாசாஹிப் தோரட்டிடடம், வருவாய், எரிசக்தி, மருத்துவ அறிவியல், பள்ளி கல்வி, கால்நடை, பால்வளம், மீன்வளத்துறைகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.

நிதின் ராவத்திற்கு, பொதுப்பணித்துறை, பழங்குடியினர் நலத்துறை, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலம், ஜவுளி, மீட்பு மற்றும் மறுசீரமைப்புத்துறை, ஒபிசி, சிறப்பு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

அமைச்சர்களுக்கு ஒதுக்கப்படாத துறைகள் முதல்வர் உத்தவ் தாக்கரே வசம் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மஹா., சட்டசபை தொடர் வரும் 21ம் தேதி துவங்குகிறது. இதன் பிறகு, அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
B.s. Pillai - MUMBAI,இந்தியா
13-டிச-201907:14:00 IST Report Abuse
B.s. Pillai What is " Special backward class ministry " work to the Congress ? Is it a modern pathway for 5% to the minority community job allocation ? So Uddhavji has surrendered SS founder Balasaheb main and only principle of Hindutva , at the feet of congress Soniyaji to pave the way for " Minority secular " idea ?
Rate this:
Cancel
Rajan - Alloliya,இந்தியா
12-டிச-201921:57:48 IST Report Abuse
Rajan யாரிந்த பெயரில்லாத மூர்க்க tholiruppavan, அடிமை, ஸ்ரீலங்கா ல ஈஸ்டர் தினம் குண்டு வைக்க திட்டம் தீட்டிய மூர்க்க 🤫
Rate this:
Cancel
R KUMAR - Oregon,யூ.எஸ்.ஏ
12-டிச-201919:54:57 IST Report Abuse
R KUMAR கூடிய விரைவில் கர்நாடகாவில் நடந்தது போன்ற நிகழ்வினை மஹாராஷ்டிராவில் காணலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X