சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அடங்கமாட்டேங்கிறாங்க.. லஞ்சம் - கைது

Updated : டிச 12, 2019 | Added : டிச 12, 2019 | கருத்துகள் (5)
Share
Advertisement
Bribery,லஞ்சம்,கைது

திருநெல்வேலி: ஒப்பந்ததாரரிடம் ரூ 15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி ஒன்றிய இன்ஜினியர் கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி மாவட்டம் குருவிகுளம் அருகே அன்னபூரணாபுரத்தை சேர்ந்தவர் விஜயராஜ். கட்டுமான ஒப்பந்ததாரர்.இவர் குருவிகுளம் பஞ்சாயத்து யூனியனில், 6 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் மதிப்பில் ஆழ்குழாய் கிணறு ஏற்படுத்தி குடிநீர் வழங்கும் பணிக்கு டெண்டர் எடுத்திருந்தார். பணி ஒதுக்கீடு செய்த நாளில் இருந்தே, குருவிகுளம் பஞ்.,யூனியன் இன்ஜினியர் அப்பாத்துரை, விஜயராஜிடம் 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.

லஞ்சம் தர விரும்பாததால் இதுகுறித்து திருநெல்வேலி லஞ்சஒழிப்பு போலீசில் புகார் செய்தார். டி.எஸ்.பி.,எஸ்கால் தலைமையிலான போலீசாரின் ஆலோசனையின் பேரில் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகள் 15 ஆயிரத்தை இன்று(டிச.,12) மாலை விஜயராஜ் கொடுத்தார். பஞ்சாயத்து யூனியன் அலுவலகம் அருகே சாதாரண உடையில் மறைந்திருந்த போலீசார் இன்ஜினியரை கையும் களவுமாக கைது செய்தனர். அவரது வீட்டிலும் சோதனை மேற்கொண்டனர்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
இந்தியன் kumar - chennai,இந்தியா
13-டிச-201915:16:52 IST Report Abuse
இந்தியன் kumar கடுமையான சட்டங்கள் போட்டு செயல் படுத்தினால் லஞ்சத்தை ஒழிக்க முடியும்.
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
12-டிச-201921:09:21 IST Report Abuse
RajanRajan லஞ்சம் வாங்குபவர்களுக்கு எவனானாலும் தூக்கு தண்டனை என்று சட்டம் போடுங்கள். அப்புறம் என்னவாகுதுன்னு பார்க்கலாம்.
Rate this:
Cancel
Krishna - bangalore,இந்தியா
12-டிச-201920:40:46 IST Report Abuse
Krishna GovtStaffNotSatisfiedWithVVFatPay-Perks.AbolishAllGovtPosts-FillUpOnlyOnMinmWagesTillEndIfWorkingEfficientlyAsPerPeoplesFeedback
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X