கன்னிப் பேச்சில் கண்டிக்கப்பட்ட திமுக., எம்.பி.,

Updated : டிச 14, 2019 | Added : டிச 12, 2019 | கருத்துகள் (67)
Share
Advertisement
dmk,MP,Kathir_Anand,Durai Murugan,Vellore,திமுக,எம்பி,கதிர்_ஆனந்த்

தன் கட்சித் தலைவர்களை மட்டுமல்லாது தன் அம்மா, அப்பா என பலரையும் புகழ்ந்து அவர்களுக்கு நன்றி சொல்லியதால் தி.மு.க. எம்.பி. கதிர் ஆனந்த் சபாநாயகரால் கண்டிக்கப்பட்டார்.

தமிழக சட்டசபையில் மறைந்த முதல்வர்களான கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரை எம்.எல்.ஏ.க்கள் புகழ் பாடி போற்றுவது வழக்கம். ஆனால் பார்லிமென்ட்டில் தனிநபர் துதிபாடலுக்கு இடமில்லை. இருந்தும் 2014 -- 19 நாடாளுமன்ற கூட்டத் தொடர்களின்போது அ.தி.மு.க. எம்.பி.க்கள் தங்கள் தலைவி ஜெயலலிதாவை 'அம்மா' என வாழ்த்திப் பாடாத நாளே இல்லை. சபை அலுவல்களில் பல நிமிடங்கள் வீணாகிறதே என பலரது கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளானாலும் அம்மா துதி பாடல் நின்றதே இல்லை.

தற்போது அ.தி.மு.க. போய் தி.மு.க. வந்துள்ள நிலையில் வசன உச்சரிப்புகள் மாறியுள்ளனவே தவிர காட்சிகள் மாறவில்லை. தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தினமும் ஓரிரு முறையாவது சபையில் வார்த்தை வடிவில் ஆஜர் ஆகிறார். இளம் எம்.பி.க்கள் சிலர் உதயநிதி பெயரையும் குறிப்பிட தவறுவதில்லை. இந்நிலையில் வேலூர் எம்.பி. கதிர் ஆனந்த் துதி பாடும் கலாசாரத்தில் புதிய பாதை போட்டுள்ளார். இந்தியாவின் சர்வதேச நிதிச் சேவை மைய ஒழுங்குமுறை மசோதா குறித்து பேசிய அவர் தனக்கு ஒதுக்கப்பட்ட மூன்றில் ஒரு பங்கு நேரத்தில் சுயபுராணம், தனிநபர் துதி பாடல் என கலந்து கட்டி அடித்தார்.

நன்றி சொல்வதாக கூறி மறைந்த தலைவர்களில் ஆரம்பித்த அவர் ''என்னை எம்.பி.யாக்க ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே கருணாநிதி விரும்பியதை 'தளபதி' என அன்போடு அழைக்கப்படும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் நிறைவேற்றினார்'' என்றார்.

அவரது கன்னிப் பேச்சில் அவர் பேசியதாவது: என் அம்மா சாந்தா குமாரிக்கு நான் நன்றி கூறவில்லை எனில் சபிக்கப்பட்டவனாகிவிடுவேன். என் குரு, வழிகாட்டி, அறிஞர், தந்தை, தமிழக சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவர், தி.மு.க. பொருளாளர், காட்பாடி தொகுதியின் 11 முறை எம்.எல்.ஏ.வான துரை முருகனுக்கும் நன்றி. அரசியல் சூழ்நிலையை துல்லியமாக கணிக்கவும் பிரச்னைகளுக்கு சரியான தீர்வுகளை சொல்லகூடிய அறிவாளியுமான அவர் தற்போது பார்வையாளர் மாடத்தில்தான் அமர்ந்து உள்ளார். என் உரையை பெருமையுடன் கவனித்துக் கொண்டிருக்கிறார். இவ்வாறு அவர் பேசிக் கொண்டே போனார்.

உடனே அவையில் பலத்த சலசலப்பு உருவாகி பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து வழி நடத்திக் கொண்டிருந்த ககோலிகோஷ் தஸ்திதர் எரிச்சலாகி அவர் ''இது முறையல்ல. இதுபோன்ற பேச்செல்லாம் இங்கு கூடாது. மசோதா மீது பேசுவதென்றால் பேசுங்கள். இல்லையெனில் விட்டுவிடுங்கள்'' என கண்டித்தார்.

அப்போதும் விடாத கதிர் ஆனந்த் ''இது என் கன்னிப்பேச்சு. என்னை பேச அனுமதிக்க வேண்டும். அறிவும் ஆற்றலும் பண்பும் மிக்க என் கட்சி சகாக்களான பாலு, கனிமொழி, ராஜா, ஜெகத்ரட்சகன், தயாநிதி ஆகியோருக்கும் நன்றி. இளைஞர் அணி தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கும் நன்றி'' என கூறியதும் சபை பொறுமையிழந்தது. பிற கட்சி எம்.பி.க் களும் சபாநாயகரும் மசோதா குறித்து பேசும்படி மீண்டும் நெருக்கடி தரவே வேறு வழியின்றி புகழ்ச்சி உரையை முடித்துக் கொண்டு மசோதா குறித்து பேசினார் கதிர் ஆனந்த்.


'சர்வதேச விமானங்களை இயக்குங்கள்'

நீலகிரி எம்.பி., ராஜா பேசியதாவது: துபாய், கோலாலம்பூர், பாங்காங் நகரங்களுக்கு, கோயம்புத்தூரிலிருந்து, நேரடியாக சர்வதேச விமானங்களை இயக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும். 'ப்ளை துபாய்' என்ற விமான நிறுவனம், அனுமதி கேட்டும், தரப்படவில்லை. பெரும் தொழில் நகரமான கோயம்புத்தூருக்கு, சர்வதேச விமானங்களை இயக்க நடவடிக்கை எடுத்தால், மத்திய அரசுக்கு அந்நிய செலாவணியும் அதிகரிக்கும்.


'சாலைப் பணியை விரைந்து முடியுங்கள்'

திருவண்ணாமலை எம்.பி., அண்ணாதுரை பேசியதாவது: உலகப்புகழ்பெற்ற திருவண்ணாலை சிவஸ்தலத்துக்கு, லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து போகின்றனர். இந்நகருக்கு போக்குவரத்து இணைப்பு மிக அவசியம். ஆனால். கடந்த 2012ல் துவங்கப்பட்ட, திண்டிவனம்- கிருஷ்ணகிரி இடையிலான தேசிய நெடுஞ்சாலைப்பகுதி பணிகள், இன்னும் முடிக்கப்படவில்லை. இதை நிறைவு செய்ய, விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.


'எச்சில் கலங்களை அகற்றுங்கள்'

தர்மபுரி எம்.பி., செந்தில்குமார் பேசியதாவது: மனித கழிவுகளை, மனிதனே அள்ளும் அவலம் இன்னமும் தொடர்கிறது. இது, தேசிய அவமானம். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க, இயந்திரங்கள் மூலம் கழிவுகளை அகற்ற, நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு முன்னுதாரணமாக, பார்லிமென்ட்டில் வைக்கப்பட்டுள்ள, மனிதர்களால் சுத்தம் செய்யப்படும், எச்சில் துப்பும் கலங்களை அகற்ற வேண்டும்.

- நமது டில்லி நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (67)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
16-டிச-201911:04:41 IST Report Abuse
Sampath Kumar அவர் தமிழ் மறுபடி தான் பேசி உள்ளார் அது வட நாட்டுக்காரன்களுக்கு புரியாது
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
16-டிச-201900:05:55 IST Report Abuse
Vena Suna அவை அறிந்து பேசி அமர்க...
Rate this:
Cancel
Ramesh R - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
15-டிச-201914:39:01 IST Report Abuse
Ramesh R இவரை தேர்ந்தெடுத்த மக்கள் பாவம்
Rate this:
Rajesh - Chennai,இந்தியா
20-டிச-201902:07:09 IST Report Abuse
Rajeshமக்களா????? பிரியாணியும், மதுவும், பணமும்தான் தேர்ந்தெடுத்தது...
Rate this:
Rajesh - Chennai,இந்தியா
20-டிச-201902:10:06 IST Report Abuse
Rajeshதேர்ந்தெடுத்த மக்கள் அவர்களுக்கு அவர்களே அடித்துக் கொள்ளுங்கள்.......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X