பொது செய்தி

இந்தியா

ஜனாதிபதி ஒப்புதல்: குடியுரிமை திருத்த சட்டம் அமல்

Updated : டிச 13, 2019 | Added : டிச 13, 2019 | கருத்துகள் (27)
Advertisement
Amendment,President,RamNathKovind,Citizenship_Act,குடியுரிமை சட்ட திருத்த மசோதா,ஜனாதிபதி ஒப்புதல்

புதுடில்லி: ஜனாதிபதி ஒப்புதல் அளித்ததையடுத்து, பார்லி.,யின் இரு அவைகளிலும் நிறைவேறிய குடியுரிமை சட்ட திருத்த மசோதா உடனடியாக அமலுக்கு வந்தது.

பாக்., வங்கதேசம், ஆப்கானிஸ்தான் போன்ற அண்டை நாடுகளில் சிறுபான்மையினராக இருந்து, இந்தியாவுக்கு அகதிகளாக வந்துள்ள ஹிந்து, சீக்கியர் உள்ளிட்டோருக்கு இந்தியக் குடியுரிமை அளிக்கும் வகையில், குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை, மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. 'இந்த மசோதா முஸ்லிம்களுக்கு எதிரானது' என, பரவலாக விமர்சிக்கப்படுகிறது. மேலும் இதை எதிர்த்து, காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. வட கிழக்கு மாநிலங்களிலும் போராட்டங்கள் நடந்து வருகின்றன.






இந்த மசோதா கடந்த சில நாட்களுக்கு முன் லோக்சபாவில் நிறைவேறியது. தொடர்ந்து ராஜ்யசபாவிலும், குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை மத்திய அமைச்சர் அமித்ஷா கொண்டு வந்தார். பின்னர் நடந்த ஒட்டெடுப்பில் மசோதாவுக்கு ஆதரவாக, 125 ஓட்டுகளும், எதிராக, 105 ஓட்டுகளும் பதிவாகின.

இந்நிலையில் இரு அவைகளிலும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட மசோதா ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தார். இதையடுத்து இந்த சட்டம் உடனடியாக அமலுக்கு வருகிறது.

Advertisement




வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
chenar - paris,பிரான்ஸ்
13-டிச-201914:12:08 IST Report Abuse
chenar நாளை பண்டிட்களாக இருந்துவிட்டால் ....?
Rate this:
Share this comment
Cancel
வெற்றிக்கொடி கட்டு - TAMIL NADU,இந்தியா
13-டிச-201912:07:35 IST Report Abuse
வெற்றிக்கொடி கட்டு இதற்க்கு உடனே ஜனாதிபதி ஒப்புதல் வாழ்த்துக்கள்
Rate this:
Share this comment
Cancel
தாண்டவக்கோன் - Kolhapur Circle, Belgaum,இந்தியா
13-டிச-201910:11:28 IST Report Abuse
தாண்டவக்கோன் அஞ்ஜர வருசத்துல இவுனுங்க எதுனா "ஒரு " நல்ல காரியத்தெ செஞ்ஜூருக்கானுங்களா 🤔🤔🤔😖😖😖👎👎👎
Rate this:
Share this comment
வல்வில் ஓரி - Koodal,இந்தியா
13-டிச-201910:32:26 IST Report Abuse
வல்வில் ஓரி இவன் நம்மாளு 😂😂😂 இவன் பிஜேபியை ஓட்டுறாமாதிரி கேட்டு நம்ம கிட்டேயிருந்து ஆதரவான கோஷத்தை எதிர்பார்க்கிறான்😜😜😜...
Rate this:
Share this comment
KavikumarRam - Chennai,இந்தியா
13-டிச-201911:51:42 IST Report Abuse
KavikumarRamப.சி யை ஜெயில்ல போட்டது ஒரு மாபெரும் நல்ல காரியம் இல்லையா???...
Rate this:
Share this comment
வெற்றிக்கொடி கட்டு - TAMIL NADU,இந்தியா
13-டிச-201912:23:57 IST Report Abuse
வெற்றிக்கொடி கட்டு அஞ்ஜர வருசத்துல விடுங்கள் ஆறே மாதத்தில் வங்கியில் 96000 கோடி சுவாகா என்று திவால் மந்திரி அம்மணி சொல்லி இருகாங்க ஏர் இந்தியா விற்கப்படும் போடு போட்டாச்சு அடுத்து ஒரு பெட்ரோல் கம்பெனி விலைக்கு வருது இதற்க்கு தான் அம்பானி ரிலையன்ஸ் பெற்றோ ஷேர் ஐ விற்று ரெடியா உள்ளான் இது போதாத கடைசியில் பாரதம் விற்கப்படும்...
Rate this:
Share this comment
வல்வில் ஓரி - Koodal,இந்தியா
13-டிச-201913:30:16 IST Report Abuse
வல்வில் ஓரி ஒரு குறிப்பிட்ட குரூப்பு கதறினா நாடு நல்ல திசையில் போயிகிட்டு இருக்குன்னு அர்த்தம்......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X