பொது செய்தி

தமிழ்நாடு

நடிகர்கள் நாடாளக்கூடாதா..?

Updated : டிச 14, 2019 | Added : டிச 13, 2019 | கருத்துகள் (37)
Advertisement
rajini,kamal,ரஜினி,கமல்,politisc,TN,TamilNadu,தமிழகம்,தமிழ்நாடு,அரசியல்,கட்சி

நடிகர்கள் ரஜினி, கமல் ஆகியோர் திராவிட கட்சிகளை சமாளிப்பரா என்பது என் கேள்வி. அந்த அளவுக்கு எதிர்ப்பு அதிகம் உள்ளது. இருவரும் மக்களின் உள்ளத்தில் குடி கொண்ட நடிகர்கள். அரசியல் பிழைப்பு நடத்தும் சில தலைவர்கள் இவர்களை பார்த்து நாகரிகமற்ற முறையில் விமர்சிப்பது அவர்களின் கோபத்தை காட்டுகிறது.

எம்.ஜி.ஆர்., நடிகராக இருந்த போது அவர் முகத்தை காட்டி அண்ணாதுரை ஓட்டு பெற்று ஆட்சி அமைத்தார். அவருக்கு பின் கருணாநிதி ஆட்சிக்கு வந்து எல்லாம் தான் என்று நினைத்து எம்.ஜி.ஆரை ஓரம் கட்டினார். இதன் விளைவு ஆட்சியை இழந்தார். கட்சி, ஆட்சியை நடத்துவது எளிதல்ல. நேர்மையாக ஆட்சி நடத்த அதிகாரிகள், கான்ட்ராக்டர்கள், தால் தன் நிலைமையை மாற்றிக் கொண்டார். அதுபோல அரசின் எல்லா துறைகளிலும் தன் கட்சியினரை புகுத்தி கட்சி நிதியை திரட்டினார்.


மருத்துவ கல்லுாரிகள்:


சாராய சாம்ராஜ்ய சக்கரவர்த்தி களாக இருந்த இரு கர்நாடக மாநிலத்தவரை ஓரம் கட்டி சாராய வினியோக உரிமையை கட்சியின் மூத்த மாவட்ட நிர்வாகிகளுக்கு கொடுத்தார். இவ்வாறாக, வட்டம், மாவட்டம், பஞ்சாயத்து என எல்லா கட்டமைப்பில் உள்ள கட்சியினருக்கும் சாராய வினியோக உரிமை அளித்து பணக்காரர்கள் ஆக்கினார். சென்னையில் இருந்தோர் தொழிலதிபர்கள் ஆயினர். தன் கட்சியின் பிரமுகர்கள் மூன்று பேருக்கு மருத்துவ கல்லுாரி துவக்க அனுமதி கொடுத்தார். எல்லா கிராமங்களிலும், மாவட்டங்களிலும் கட்சி பதவிகளை வாரி வழங்கினார். கட்சி பதவிகளை கொடுப்பதற்காக ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு அமைப்பை ஏற்படுத்தினார்.

கட்சியினரின் அனுமதியும், கண்காணிப்பும் இல்லாமல் எந்த நலத்திட்டங்களையும் வழங்க முடியாது. அரசு வழங்கும் நிதி இந்த நிர்வாகிகள் மூலமாக பகிர்ந்து கொடுக்கப்படும். அதில் பாதி கட்சி நிர்வாகிகளின் குடும்பத்தினர், உறவினர், நண்பர்களுக்கு போய் விடும்; ஏழை, எளியவர்கள் ஏமாந்தனர். இந்த முறைகேடுகளில் இரண்டு திராவிட கட்சிகளுக்கும் பங்கு உண்டு. நகரங்களில், வார்டுகளில் பொறுப்பில் உள்ள கட்சியினர் தான் கவுன்சிலராக வருவர்; கமிஷனுக்கு தயார் ஆவர். கட்சியின் மாவட்ட தலைவர்களுக்கும், மாவட்ட அமைச்சர் களுக்கும் சம அதிகாரம் பகிர்ந்து கொடுக்கப்பட்டது. அரசிடமிருந்து மாவட்டத்திற்கு வரும் நிதி இந்த இருவர் சொல்லும் ஒப்பந்தக்காரர்களுக்குதான் போகும்.

பெரும்பான்மை ஒப்பந்த தாரர்கள் அமைச்சர், மாவட்ட தலைவர், செயலரின் 'பினாமி'யாக இருப்பர். மக்கள் நலனுக்காக அரசு வழங்கிய நிதியில் எவ்வளவு பணம் கொள்ளையடிக்கப்படுகிறது என்பது இவர்களுக்குதான் தெரியும். பல ஆண்டுகளுக்கு முன் ஒரு மாவட்டத்தின் நேர்மையான அமைச்சர் இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அவர் என்னிடம் கூறியவை இது: 'ஒரு மாவட்ட தலைவர் தண்ணீர் போர்டு தலைவராக இருந்த போது வறட்சி காலத்தில் மக்களுக்கு தண்ணீர் சப்ளை செய்ததாக 2,000 லாரிகளுக்கு பணம் கொடுக்க பில் போட்டு அரசுக்கு அனுப்பினார். ஆனால் 200 லாரிகள் தான் தண்ணீர் சப்ளை செய்தன'.

இப்படிப்பட்ட இந்த இரண்டு திராவிட கட்சியினரால்தான் தனியார் கல்லுாரிகள் நடத்தப்படுகின்றன. 20க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லுாரிகள், 500க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங், பாலிடெக்னிக் கல்லுாரிகளை நடத்துகின்றனர். நடிகர் விஜயகாந்த் நல்லவர். அவரை வளர விடாமல் இரு திராவிட கட்சிகளின் தலைவர்களும் தடுத்து நிறுத்தி கட்சிக்காரர்களை விலைக்கு வாங்கி அவரை 'குடிகாரர்' என பட்டமும் சூட்டி விட்டனர். இப்போது நடிகர் விஜயகாந்த் நிலை குலைந்து இருக்கிறார்.


கல்வித்தந்தை:


20 ஆண்டுகளுக்கு முன் திராவிட கட்சியின் இளைஞரணி தலைவர் ஒருவர் மயிலாப்பூர் குளக்கரை அருகே ஒரு வேலையை முடிப்பதற்காக என்னிடம் ரூ.50 ஆயிரம் 'அட்வான்ஸ்' பெற்று அந்த வேலையை முடித்து தரவில்லை. நானும் போகிறது என விட்டு விட்டேன். ஆனால் இன்று அவர் கல்வித்தந்தை என புகழப்படுகிறார். இப்படி ஊழல் நிறைந்த கட்சி அமைப்பு; தரகர் நிறைந்த அரசியல் அமைப்பு; சாராய விற்பனை கூடத்தை நடத்தும் அரசு; சாராய ஆலைகளை நடத்தும் கட்சி பிரபலங்கள், அவர்களின் 'பினாமி'களை வளர்த்து விட்டதுதான் திராவிட கட்சிகளின் கைங்கர்யம்.

பல விதங்களில் முறைகேடாக சம்பாதித்த பணத்தை வைத்துள்ள கட்சிகள்தான் 'கட் - அவுட்' கலாசாரம், போஸ்டர், ஊர்வலம், கூட்டத்திற்கு பல லட்சம் செலவழிப்பது, தேர்தல் நேரத்தில் ஓட்டுக்கு ரூ.1,000 - 2,000 கொடுத்து ஓட்டு வாங்குவது என செயல்படுகின்றன. நாட்டில் பாதி மக்களுக்கு தெரியாத அமைச்சர்கள் தான் தமிழகத்தில் அதிகம் உள்ளனர். நடிகர்கள் கமல் மற்றும் ரஜினி இருவரும் 40 ஆண்டுகள் திரை உலகில் புகழ் பெற்றவர்கள். அவர்களைப் பார்த்து திராவிட கட்சியினர் கிண்டல் செய்வது சூரியனை பார்த்து எதுவோ கூப்பாடு போடுவது போன்றதே!





- டாக்டர் எஸ்.அர்த்தநாரி, எம்.டி., சென்னை.
prabhuraj.artganaree@gmail.com

Advertisement




வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
elakkumanan - Naifaru,மாலத்தீவு
13-டிச-201921:19:54 IST Report Abuse
elakkumanan இது சனநாயக நாடு..யாரு வேணும்னாலும் நாடாளலாம்........................நல்லவராக இருக்கவேண்டும்.திறமை உடையவராக இருக்கவேண்டும்........தேச பக்தி இருக்க வேண்டும்...........அவ்வளவே.........தனிப்பட்ட வாழ்வு என்பது நல்லபடி இருந்தால் , நல்லது.........ஒட்டு போடும்போது, இந்த காரணங்களின் அடிப்படையில் ஓட்டளித்தால், கட்டுமரம் (மொத்த கூட்டமும், உதயநிதியும் சேர்த்துதான் )சித்தாளு வேளைக்கு தான் போகணும்...அ இ தி மு க வில், இன்று இந்த காரணங்கள் படி, ஒன்றிரண்டு தேறலாம். காண் கிராஸ் வாஷ் அவுட்..கம்மிஸ்................கெளம்பவேண்டியதுதான் சீனாவுக்கு..........மீதி கொஞ்சம் பெரு இருப்பாங்க..............அதுல பெரும்பாலும் பி ஜெ பி யினர் தான் இருப்பார்கள்........................இந்த டீல் ஓகேவா வாசகர்களே...................நான் உங்கள் கருத்தை ஏற்கிறேன்...................ஆம், நடிகர்கள் , நாடாளக்கூடாது........................நீங்கள், என்னுடைய இந்த கருத்தை உண்மையாக ஏற்கமுடியுமா? முடியாது உங்களால் , என்பது எனக்கு தெரியும்.........இந்த மாதிரி தத்துவங்களின் பின்னால், தி மு கவின் எச்ச காசு கூட்டம் இருக்கிறது.............உங்கள் பயம் கண்களில் தெரிகிறது..............தி மு க வின் முடிவுரை ஆரம்பம்................நடிகர்கள் நாடாள்வதும், நாசமாக போவதும்.............மக்களின் ஓட்டுதான் முடிவு செய்யும்..காசு வாங்கீட்டு ஒட்டு போடும் நமக்கு, இந்த கேள்வியை எழுப்பும் அதிகாரமே இல்லை வாசகர்களே...................தவறு , நம் பக்கம்..................தேசத்தைவிட , வேறெதுவும் முக்கியமில்லை..ஒட்டு விற்கும் கூட்டம் நாம்..நமக்கு, வாய்த்தது ஜாமீன் கூட்டம்தான்.நாம் அந்த அளவுக்குத்தான் ஒர்த்.ப்ளீஸ், சொந்த முதுகை சுத்தம் செய்வோம்..
Rate this:
Share this comment
Cancel
13-டிச-201920:04:46 IST Report Abuse
ஆப்பு நீங்க நாடாள்வது இருக்கட்டும். முதல்ல பா.ஜ வுல சேருங்க... இல்லேன்னா உங்க தாத்தா, பாட்டி யோட பிறப்பு சான்றிதழை ரெடி பண்ணி வெச்சுக்கோங்க. நீங்க இந்தியரா இல்லியான்னு சந்தேகம் வந்துரும். மும்பை கோர்ட்டுல வழக்குப் போட்டு நாடு கடத்திருவாங்க.
Rate this:
Share this comment
Cancel
Ramakrishnan Natesan - BANGALORE,,இந்தியா
13-டிச-201919:57:15 IST Report Abuse
Ramakrishnan Natesan தனிமனித ஒழுக்கம் அற்ற நீங்கள் எப்படி நாடாள முடியும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X