பொது செய்தி

தமிழ்நாடு

டில்லி காற்று மாசுக்கு சென்னை ஐ.ஐ.டி., தீர்வு

Updated : டிச 14, 2019 | Added : டிச 13, 2019 | கருத்துகள் (6)
Advertisement
delhi,air_pollution,pollution,IIT,Madras_IIT,டில்லி,காற்று மாசு,சென்னை,ஐஐடி,தீர்வு

சென்னை: டில்லி காற்று மாசுக்கு தீர்வு காண பஞ்சாபில் வைக்கோலை எரித்து அனல் மின் நிலையம் துவங்க தனியார் நிறுவனத்துடன் சென்னை ஐ.ஐ.டி. ஒப்பந்தம் செய்துள்ளது.

டில்லியில் ஒவ்வொரு ஆண்டும் நவ. - டிச. மாதங்களில் காற்று மாசு மிகவும் உச்சகட்டத்தை அடையும். இந்த பிரச்னைக்கு பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் வைக்கோல் போன்ற பயிர் கழிவுகளை எரிப்பதே காரணம். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க சென்னை ஐ.ஐ.டி.யுடன் பஞ்சாபை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.

இதன்படி பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் பயிர் கழிவுகள் மற்றும் வைக்கோல் கட்டுகளை இனி எரிக்காமல் மின் உற்பத்திக்கு பயன்படுத்த முடிவு செய்யப் பட்டுள்ளது. உயிரிக் கழிவை பயன்படுத்தி மின் உற்பத்தி செய்யும் தொழில்நுட்பத்தில் இந்த அனல் மின் நிலையத்தை அமைக்க ஒப்பந்தத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை ஐ.ஐ.டி.தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jagan - Chennai,இந்தியா
13-டிச-201918:28:35 IST Report Abuse
jagan IIT மெட்ராஸ் ? சென்னையில் ரோட்டில் இருந்து 5 அடி உயரத்தில் கழிவு நீர் வாய்க்கால் கட்டிய அதே குரூப்பா? சூப்பர்
Rate this:
Share this comment
Cancel
Parthasarathy - delhi,இந்தியா
13-டிச-201909:28:20 IST Report Abuse
Parthasarathy பயிர் கழிவுகளை எரித்து மின்சாரம் எடுக்கும் இரண்டு கொதிக்கலன்கள் ,குருச்சேத்திர ,காய்தல் என இரண்டு இடங்களில் எங்களது நிறுவனம் (ISGEC-BWSC) கட்டுமான பணிகளை செய்து வருகிறது . இன்னும் சில மாதங்களில் பயன் பாட்டுக்கு வரவிருக்கிறது , மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அனுமதியுடன் மட்டுமே எந்த ஒரு தொழிற்சாலை அமைக்கமுடியும் . BAGFILTER,ESP ,FGD , போன்ற தொழில்நுற்பங்களை பயன்படுத்தி மாசுவெளியேறாமல் தடுக்கமுடியும்.
Rate this:
Share this comment
Cancel
vasumathi - Sindhathari Pettai ,இந்தியா
13-டிச-201908:38:14 IST Report Abuse
vasumathi நம்ம ஊர் கிராமங்களில் வைக்கோல் மாடு சாப்பிட்டது போக, அவை மக்கும் உரங்களாக சாணியுடன் சேர்ந்து மக்கும். ஆஸ்திரேலியாவில் , அவை mulch ஆக மூட்டை கட்டி நகரத்தில் விற்க படுகிறது. நிறைய இயற்கை வழிகள் உள்ளன, எரிக்காதீர்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X