அயோத்தி தீர்ப்பு: எதிரான 18 சீராய்வு மனுக்களும் தள்ளுபடி

Updated : டிச 14, 2019 | Added : டிச 13, 2019 | கருத்துகள் (7+ 25)
Advertisement
ayodhya,judgement,verdict,SC,Supreme_Court,plea,dismisses,அயோத்தி,தீர்ப்பு,சீராய்வு_மனு,தள்ளுபடி

புதுடில்லி: அயோத்தி தீர்ப்பை சீராய்வு செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட 18 மனுக்களையும் உச்ச நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.

உத்தர பிரதேசத்தில் உள்ள அயோத்தியில், சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு கடந்த மாதம் 9ம் தேதி தீர்ப்பு அளித்தது. 'சர்ச்சைக்குரிய நிலத்தில் ஹிந்துக் கடவுள் ராமருக்கு கோவில் கட்டலாம். மசூதி கட்டுவதற்காக அயோத்தியின் முக்கிய இடத்தில் முஸ்லிம்களுக்கு 5 ஏக்கர் நிலத்தை மத்திய அரசு வழங்க வேண்டும்' என தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த தீர்ப்புக்கு எதிராக 18 சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதில் ஒன்பது மனுக்கள் முந்தைய வழக்கில் மனுதாரர்களாக இருந்தவர்கள் தாக்கல் செய்தவை. மற்ற ஒன்பது மனுக்கள் புதியவர்களால் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

முதல் சீராய்வு மனுவை சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பாக முதன்முதலில் வழக்கு தொடர்ந்த சித்திகி என்பவர் சார்பில் அவருடைய வாரிசான மவுலானா சையது ஆஷாத் ரஷீத் தாக்கல் செய்தார். இவர் ஜமாஉத் - உலேமா -இ - ஹிந்த் அமைப்பின் முக்கியப் பொறுப்பிலும் உள்ளார். இவர் தாக்கல் செய்த மனுவில் 'இந்த வழக்கின் முக்கிய பிரச்னையே கோவிலை இடித்து மசூதி கட்டப்பட்டதா என்பது தான். அதற்கான ஆதாரம் இல்லை என நீதிமன்றம் கூறியுள்ளது. 'அப்படியிருக்கையில் முஸ்லிம்கள் தரப்புக்கே நிலத்தின் உரிமை இருப்பது உறுதியாகிறது. ஆனால் தீர்ப்பு மாறுபட்டு உள்ளது' என கூறியிருந்தார்.

தீர்ப்புக்கு எதிராக மவுலானா முப்தி ஹஸ்புல்லா, மவுலானா மக்புசூர் ரஹ்மான், மிஷ்பாஹுத்தீன் முகமது உமர், ஹாஜி நஹூப், முகமது அயூப் ஆகியோர் தனித்தனியாக சீராய்வு மனுக்களைத் தாக்கல் செய்தனர். இவர்கள் அனைவருக்கும் முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் ஆதரவு அளித்தது. முஸ்லிம்கள் மசூதி கட்டுவதற்கு 5 ஏக்கர் நிலம் வழங்குவதை எதிர்த்து அகில பாரத ஹிந்து மகா சபா சார்பில் சீராய்வு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இது தவிர வரலாற்று வல்லுனர் இர்பான் ஹபிப், பொருளாதார வல்லுநர் பிரபாத் பட்நாயக், சமூக ஆர்வலர்கள் ஹர்ஸ் மந்தர், நந்தினி சுந்தர், ஜான் தயால் உள்ளிட்ட 40 பேர் சேர்ந்து சீராய்வு மனு தாக்கல் செய்தனர்.

இவர்கள் தங்கள் மனுவில் 'உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது. இது ஒரு நிலத்தின் உரிமை சம்பந்தப்பட்ட பிரச்னை மட்டும் அல்ல. இந்திய அரசியல் சட்டம் குடிமக்களுக்கு சம உரிமை மதச்சார்பின்மை நீதி சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றுக்கு எதிரான வழக்கு. 'அதனால் தீர்ப்பை சீராய்வு செய்ய கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீது உச்ச நீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரணை நடத்த வேண்டும்' என கூறியிருந்தனர். இவர்களை தவிர வேறு சிலரும் சீராய்வு மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுக்கள் அனைத்தும் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி அறையில் தலைமை நீதிபதி பாப்டே தலைமையிலான நீதிபதிகள் சந்திரசூட், அசோக் பூஷண், நசீர், சஞ்சீவ் கன்னா அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. 'இந்த மனுக்கள் எதுவுமே விசாரணைக்கு ஏற்றது அல்ல' என கூறி 18 சீராய்வு மனுக்களையும் நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (7+ 25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mohamed Hameeth - ajman,ஐக்கிய அரபு நாடுகள்
13-டிச-201921:25:28 IST Report Abuse
Mohamed Hameeth இன்று இல்லா விட்ட்டாலும் .ஒரு நாள் நீதி வெல்லும்
Rate this:
Share this comment
Cancel
Anand - chennai,இந்தியா
13-டிச-201916:09:43 IST Report Abuse
Anand சீராய்வு மனு தாக்கல் செய்த அனைவரும் தலா 10 கோடி அபராதம் கட்டவேண்டும் அல்லது பத்து ஆண்டுகள் கடும் சிறை தண்டனை பெறவேண்டும் என அறிவிக்கவேண்டும் யுவர் ஹானர்.
Rate this:
Share this comment
Cancel
வெற்றிக்கொடி கட்டு - TAMIL NADU,இந்தியா
13-டிச-201913:21:57 IST Report Abuse
வெற்றிக்கொடி கட்டு நல்லது சார் இல்லை எனில் இதை வைத்து கொண்டு மீண்டும் ராமரை காப்போம் மீட்போம் என்று இறங்கி வேலை காட்டுவார்கள் அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்ததிற்கு கோடானு கோடி நன்றி
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X