சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : டிச 13, 2019 | கருத்துகள் (1)
Advertisement
 'டவுட்' தனபாலு

தே,மு.தி.க., பொருளாளர் பிரேமலதா: உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட, விஜயகாந்தின் தீவிர விசுவாசிகளுக்கு தான் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்; அவர்களையே வேட்பாளர்களாக நிறுத்த வேண்டும். அதே நேரத்தில் அவர், எதிரணி வேட்பாளர்களை எதிர்க்கும் அளவுக்கு, பண பலம் பெற்றிருக்க வேண்டும்.

'டவுட்' தனபாலு: நீங்கள் சொல்வதுபடி பார்த்தால், விஜயகாந்த் படங்களை, முன் இருக்கையில் அமர்ந்து பார்த்து, காட்சிகளை மனப்பாடம் செய்து வைத்து, வசனம் பேசுபவர்களுக்குத் தான், உள்ளாட்சி தேர்தலில் முன்னுரிமை கொடுக்கப் போவது போல தெரிகிறது. அத்தகைய, 'விசிலடிச்சான் குஞ்சுகள்' எப்படி, பண பலம் பொருந்தியவர்களாக இருக்க முடியும் என்ற, 'டவுட்' ஏற்படுகிறதே!

***

அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன்: ஜெ.,யின் உண்மை தொண்டர்களால், அ.ம.மு.க., உருவாக்கப்பட்டது. அதிகார வர்க்கத்தின் இடையூறுகளைத் தாண்டி, தேர்தல் ஆணையம், எங்கள் கட்சியை, பதிவு பெற்ற கட்சியாக அங்கீகரித்துள்ளது. இதனால், எங்கள் கட்சியினர் உற்சாகத்துடன் தேர்தலை சந்திப்பர்.

'டவுட்' தனபாலு: உங்கள் கட்சியில் இருப்போர் தான், ஜெ.,யின் உண்மை தொண்டர்கள் என்றால், எம்.ஜி.ஆரால் துவக்கப்பட்டு, ஜெ.,வால் வளர்க்கப்பட்ட, அ.தி.மு.க., உண்மையான கட்சி இல்லையா என்ற, 'டவுட்' ஏற்படுகிறதே. தேர்தல் ஆணையம் உங்கள் கட்சியை பதிவு செய்தாலும், பொதுவான சின்னம் கிடைக்காத நிலையில், இந்த பெருமை அவசியமா என்ற, 'டவுட்'டும் எழுகிறதே!

***
பத்திரிகை செய்தி: தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில், மொத்தமுள்ள, 15 மாநகராட்சிகளில், எட்டு மாநகராட்சிகளின் பதவியிடங்கள், பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

'டவுட்' தனபாலு: எட்டு மாநகராட்சி மேயர் பதவியிடங்கள், மகளிருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி தான். எனினும், சாதாரண பஞ்சாயத்து தலைவர் பதவி துவங்கி, மேயர் பதவியில் பெண்கள் இருந்தாலும், அவர்களை நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆட்டுவிப்பது, அவரவர் கணவர்மார்களே என்ற குற்றச்சாட்டும் உள்ளதே... அதை சரி பண்ண, ஏதேனும் சட்டம் பிறப்பிக்கப்படுமோ என்ற, 'டவுட்' ஏற்படுகிறதே!

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
13-டிச-201906:05:30 IST Report Abuse
D.Ambujavalli குற்றச்சாட்டு என்ன, மனைவிமார் கூட்டத்துக்குப் போவதும், பேசுவதும் கூட ‘his master ‘s voice ‘ என்பது உலகமறிந்ததுதானே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X