பொது செய்தி

இந்தியா

இந்தியா -ஜப்பான் மாநாடு அசாமிலிருந்து டில்லிக்கு மாற்றம்?

Updated : டிச 13, 2019 | Added : டிச 13, 2019 | கருத்துகள் (5)
Advertisement
இந்தியா - ஜப்பான் மாநாடு அசாம்,டில்லி,மாற்றம்?

புதுடில்லி: அசாமில் நடக்கும் வன்முறை காரணமாக, இந்தியா - ஜப்பான் நாடுகளுக்கு இடையே, வரும், 15 - 17 தேதிகளில், அங்கு நடக்க திட்டமிட்டிருந்த மாநாடு, டில்லிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.





வட கிழக்கு மாநிலமான அசாமின் கவுஹாத்தியில், இந்தியா மற்றும் கிழக்காசிய நாடான ஜப்பானுக்கு இடையே, வரும், 15ம் தேதி துவங்கி, 17 வரை மாநாடு நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
இதில், பிரதமர் மோடி, ஜப்பான் பிரதமர் ஷின்சு அபே பங்கேற்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அசாமில் பெரும் வன்முறை நடந்து வருகிறது. விமான சேவையும் முடங்கியுள்ளது.


நம்பிக்கை



இதையடுத்து, இந்தியா - ஜப்பான் இடையேயான மாநாடு, கவுஹாத்தியிலிருந்து டில்லிக்கு மாற்றப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனாலும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு, இன்னும் வெளியாகவில்லை. இது குறித்து, வெளியுறவுச் செய்தி தொடர்பாளர் ரவீஸ் குமார் கூறியதாவது:இந்தியா - ஜப்பான் இடையேயான மாநாட்டை, கவுஹாத்தியிலிருந்து வேறு இடத்துக்கு மாற்றுவது குறித்து, இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

இதற்கிடையே, வரும், 18ம் தேதி, அமெரிக்க அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன், நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர், இரு தரப்பு உறவு, பாதுகாப்பு குறித்து பேச்சு நடத்தஉள்ளனர்.குடியுரிமை சட்ட திருத்த மசோதா குறித்து, அமெரிக்கா மற்றும் பிற நாடுகளுக்கு விளக்கம் அளிக்கப்படும். மசோதாவுக்கான அவசியம் குறித்து, அவர்கள் புரிந்து கொள்வர் என்ற நம்பிக்கை உள்ளது. வங்கதேச வெளியுறவு அமைச்சர், தன் இந்திய பயணத்தை ரத்து செய்தது குறித்து கேட்கப்படுகிறது. வங்கதேசத்தில் சிறுபான்மையினர் துன்புறுத்துவதாக, நாங்கள் எப்போதுமே கூறியது இல்லை.


தகவல்


பாக்., பிரதமர் இம்ரான் கான், நம் நாட்டில் நிறைவேற்றப்பட்ட தேசிய குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை கடுமையாக விமர்சித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இம்ரான் கான், மற்ற நாடுகளின் விஷயத்தில் தலையிடுவதை தவிர்த்து, தங்கள் நாட்டில் சிறுபான்மையினருக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.


Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
13-டிச-201912:44:53 IST Report Abuse
ஆப்பு ஜப்பான் பிரதமரே பயணத்தை ரத்து செய்யலாம்னு சேதி வந்திருச்சு.
Rate this:
Share this comment
Cancel
13-டிச-201909:04:00 IST Report Abuse
Vadivelu Shanmugam இலக்கணப்படி "சிறுபான்மையினர் துன்புறுத்தப்படுவதாக" என்று இருக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
ashak - jubail,சவுதி அரேபியா
13-டிச-201908:10:22 IST Report Abuse
ashak பயந்திட்டியா குமாரு
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X