சமஸ்கிருத மத்திய பல்கலை. மசோதா நிறைவேற்றம்

Added : டிச 13, 2019 | கருத்துகள் (14)
Advertisement
 சமஸ்கிருத மத்திய பல்கலை. மசோதா நிறைவேற்றம்

புதுடில்லி:இந்தியா முழுவதும் 40-க்கும் மேற்பட்ட மத்திய பல்கலைக்கழகங்கள் இயங்கி வருகின்றன. அவற்றில் சில மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை இயக்கி வருகிறது. இதற்கிடையே நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களாக இயங்கி வரும் மூன்று சமஸ்கிருதப் பல்கலை.களை மத்தியப் பல்கலைக்கழகங்களாக மாற்ற, கடந்த 4-ம் தேதி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
இதன்படி மூன்று சமஸ்கிருத நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களை மத்திய பல்கலை.களாக மாற்றுவதற்கான மசோதா 2019-ஐ, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் லோக்சபாவில் தாக்கல் செய்தார். இந்த மசோதா நிறைவேற்றப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
13-டிச-201916:16:11 IST Report Abuse
மலரின் மகள் பத்து வருடங்களுக்கு முன்பிருந்தே அதாவது MS I & II காலம் தொட்டே சமஸ்க்ருத மொழியை கற்பிக்க பல்வேறு கல்வி நிறுவனங்கள் மத்திய அரசுடன் புரிந்துணர்ப்பு ஒப்பந்தங்கள் செய்துள்ளன. இதில் பழம்பெரும் காங்கிரஸ் காரர்களால் நிர்வகிக்கப்படுகின்ற நிகர்நிலை பல்கலைகள் கூட அடக்கம். சம்ஸ்கிருத பண்டிட்கள் வந்து ஆசிரியர் மாணவர்களுக்கு வாரமிருமுறை மாலை வேளைகளில் பாடம் சொல்லித்தருவார். எழுத படிக்க பேச என்று எளிய நடையில். அவருக்கான ஊதியம் போக்குவரத்து மத்திய அரசும் அவருக்கு வேண்டிய உள்ளூர் வசதிகளை விடுதி போன்றது கல்வி நிறுவனமும் செய்து தரவேண்டும் என்பது ஒப்பந்தம். இது முழுதும் விருப்பத்தின் பாலானதே. கட்டாயம் என்பது கொஞ்சமும் இல்லை. எந்த நிறுவனங்கள் விரும்பினாலும் அவர்கள் அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டு இதை செய்யலாம். உதாரணமாக சொல்வதென்றால் ஆந்திராவில் கீதம் என்று அழைக்கப்படும் GITAM , விசாகப்பட்டினத்தில் இருக்கிறது, ஆந்திராவின் மிகசிறந்த நிறுவனம், காங்கிரஸ் எம் பி ஆல் நிர்வகிக்கப்படுகிறது. சிறந்த கல்வியாளர். ஆந்திராவில் மிகவு பிரசித்தி பெட்ரா மிக உயர்ந்த நிறுவனம். அதில் இரண்டாயிரம் ஆண்டின் துவக்கத்தில் இருந்தே சமஸ்க்ருத வகுப்புக்கள் நடத்தப்படுகின்றன. என்னை கேட்டால் தமிழ் பல்கலையும் சமஸ்கிரது பல்கலையும் இணைந்து செயல்பட்டு கல்வி கலாச்சார நோக்கில் பல்வேறு பண்டைய நமது நாகரிகத்தை வெளிக்கொணரவும் அவற்றை உலகிற்கு பறைசாற்றவும் முயலவேண்டும் என்பேன்.
Rate this:
Share this comment
Cancel
chenar - paris,பிரான்ஸ்
13-டிச-201914:08:46 IST Report Abuse
chenar செத்து சுண்ணாம்பான மொழிக்கு பலகலை கழகம்? நடத்துங்கள் உங்களுக்கு வாக்களித்த இந்த நாட்டின் தொல்குடி மக்களுக்கு புத்தி வரும்வரை உங்கள் ஆட்டத்தை தடுக்க முடியாதுதான்
Rate this:
Share this comment
Cancel
chenar - paris,பிரான்ஸ்
13-டிச-201914:07:04 IST Report Abuse
chenar சமஸ்கிருதம் தேவ பாஷை என்றால் என் தமிழ் சாத்தான் பாஷையா? நீங்கள்தான் எல்லா கோவில்களிலும் பிராமணர்கள் இல்லை என்கிறீர்கள் இப்போது இந்தியா முழுவதும் கோவில்களில் சமஸ்கிருதம் உள்ளது என்கிறீர்கள் பிரமணரில்லா பூசாரிகள் சமஸ்கிருதம் கற்றுக்கொண்டு பூசை செய்கிறார்களா ? என்ன செய்வது உங்களுக்கு இருக்கும் மொழி பற்று எங்கள் தமிழருக்கு இருந்தால் நீங்கள் எங்கள் நாட்டில் புகுந்து கொண்டு எங்கள் மொழியில் பிழைத்துக்கொண்டு எங்கள் மொழியை விட உங்கள் மொழி உயர்ந்தது என்றும் உங்கள் மொழி தேவ ப்பாஷை என்றும் சொல்வீர்களா ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X