திவால் சட்ட திருத்த மசோதா தாக்கல்

Updated : டிச 13, 2019 | Added : டிச 13, 2019 | கருத்துகள் (13)
Advertisement
திவால் சட்டம், திருத்த மசோதா ,

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: திவால் சட்ட திருத்த மசோதாவை, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், லோக்சபாவில் நேற்று தாக்கல் செய்தார்.

திவால் நிலைக்கு செல்லும் நிறுவனங்களின் பிரச்னைக்கு விரைந்து தீர்வு காணும் திவால் மசோதா, 2016ம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்தது. இதற்கு பின், மூன்று முறை, இந்த சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது.




கடன் மூலம் வீடு வாங்குவோருக்கு, கட்டுமான நிறுவனங்களிடமிருந்து பாதுகாப்பு கிடைக்கும் வகையில் சட்ட திருத்தம் செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த சட்டத்தில் உள்ள மேலும் பல சிக்கல்களுக்கு தீர்வு காணும் வகையில், புதிய சட்ட திருத்த மசோதாவை, மத்திய நிதி அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான நிர்மலா சீதாராமன், நேற்று லோக்சபாவில் தாக்கல் செய்தார்.

அப்போது, அவர் பேசியதாவது:இந்த மசோதாவில், ஏற்கனவே ஜூலையில் சில திருத்தங்கள் செய்யப்பட்டன. தற்போது மேலும் சில திருத்தங்களை மேற்கொள்வதற்காக இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சிறிய வீடுகளை வாங்குவோரின் மனதில், ஏராளமான சந்தேகங்கள் உள்ளன. அவற்றை தீர்க்கும் வகையில், இந்த சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படுகிறது.இவ்வாறு, அவர் பேசினார்.


Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Suri - Chennai,இந்தியா
13-டிச-201914:31:02 IST Report Abuse
Suri நீங்கள் எப்பொழுது பதவியை ராஜூனாம செய்வீர்கள்?? இன்னும் எத்தனை குடும்பங்களை நடுத்தெருவுக்கு கொண்டுவந்தால் உங்கள் பரீட்சார்த்த முயற்சிகளை கைவிடுவீர்கள்?? இன்னும் எத்தனை நிறுவனங்களை நடுத்தெருவுக்கு இழுப்பீர்கள்?? உங்கள் FISCAL பாலிசி இப்படி பல்லிளிக்கும் தார்மீக பொறுப்பேற்று விலகினால் உங்கள் மானம் காப்பாற்றப்படும். இல்லை அசிங்கமாக அதவியில் இருந்து துரத்தப்படுவீர்கள்.
Rate this:
Share this comment
Cancel
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
13-டிச-201914:07:59 IST Report Abuse
Tamilan இது பலதரப்பட்ட குண்டர்கள் இந்திய வீதிகளில் காலம் காலமாக மற்றவர்களை மிரட்டி பறிக்கும் செயலுக்கு சமம். இந்தியாவில் காலம் காலமாக நடக்கும் அக்கிரமங்களையெல்லாம், அந்நிய நாடுகள் சட்டமாக வைத்திருக்கின்றன. அதையே உலகமயமாக்கல் என்ற பெயரில் இந்தியாவும் காப்பியடிக்க ஆரம்பித்துவிட்டு. கண்ணை பிடதியில் வைத்துக்கொண்டு உலக நாடுகளின் தரம் , மதிப்பு நிர்ணயிக்கப்படுகிறது. அரசியல் சட்ட அரசுகள் கடைசியில் பல தெருக்களில் காலம் காலமாக கட்டவிழ்த்துவிடும் குன்டர்களின் அடிமைகளாக, மிகைப்படுத்தினால் அவர்களின் ஏஜெண்டுகளாக தான் செயல்படுகின்றன . இதுதான் உலகமயமாக்கலாம் . உலகத்தரம்வாய்ந்ததாம் .
Rate this:
Share this comment
Cancel
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
13-டிச-201914:06:27 IST Report Abuse
Tamilan திருத்தத்தில் திவாலாகும் விகிதத்தையும் சேர்க்கவேண்டும், பணமதிப்பிலும், எண்ணிக்கையிலும். இதே இரண்டும் ஏறிக்கொண்டே சென்றால் வளர்ந்த நாடுகள் சென்ற இனியொரு 2008 க்கு மீண்டும் போகுமுன் அந்நிய ரீதியிலான பொருளாதார நடவடிக்கைகளை அரசே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முடக்கிவிடலாம். அதாவது ஒரு வரப்போகும் எமெர்ஜெண்சி போல. அதற்கான அறிகுறிகள் வெளிப்படையாக தெரிகிறது. கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனா கதையாக, பல லச்சம் கோடிகள் உண்மையான பணம் ஆயிரம் கோடிகளாக மாறிக்கொண்டு இருக்கிறது . மேலும் தற்போதுள்ள திவால் சட்டங்கள், ஒருவரிடமுள்ள சொத்தை இன்னொருவருக்கு சொற்ப விலையில் மாற்றிக்கொடுக்கும் ஏஜெண்டாக மட்டுமே உள்ளது. உலகம் ஏற்றுக்கொண்டது என்பதற்காக அதை இந்தியாவில் புகுத்த வேண்டும் என்றில்லை .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X