சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குழந்தைகள் ஆபாச படம் 'பேஸ்புக்'கில் பதிவிட்டவர் கைது

Added : டிச 13, 2019
Share
Advertisement
திருச்சி: சமூக வலைதளத்தில், குழந்தைகள் ஆபாச படம் பதிவேற்றம் செய்தவரை, திருச்சி போலீசார் கைது செய்துள்ளனர்.குழந்தைகள் தொடர்பான ஆபாச, 'வீடியோ'க்களை, இணையத்தில் பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம் செய்வோர் மீது, 'போக்சோ' மற்றும் தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்திய பிரிவிலும் வழக்குபதிவு செய்யப்படும் என, தமிழக போலீசார் எச்சரித்துள்ளனர். 'நிலவன் நிலவன்' என்ற

திருச்சி: சமூக வலைதளத்தில், குழந்தைகள் ஆபாச படம் பதிவேற்றம் செய்தவரை, திருச்சி போலீசார் கைது செய்துள்ளனர்.
குழந்தைகள் தொடர்பான ஆபாச, 'வீடியோ'க்களை, இணையத்தில் பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம் செய்வோர் மீது, 'போக்சோ' மற்றும் தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்திய பிரிவிலும் வழக்குபதிவு செய்யப்படும் என, தமிழக போலீசார் எச்சரித்துள்ளனர். 'நிலவன் நிலவன்' என்ற பெயரில் துவங்கப்பட்ட, 'பேஸ்புக்' கணக்கில், குழந்தைகள் ஆபாச படங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பது, திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள, சமூக ஊடக கண்காணிப்பு பிரிவு போலீசாரின் கவனத்திற்கு வந்தது. போலீசார் விசாரணையில், திருச்சி பாலக்கரை, காஜாபேட்டை பகுதியைச் சேர்ந்த, கிறிஸ்டோபர் அல்போன்ஸ், 42, என்பவர் சிக்கினார். திருமணமான இவருக்கு, குழந்தை இல்லை என்பதும், நான்கு ஆண்டுகளாக, பேஸ்புக் பக்கத்தில், குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை பதிவு செய்து வந்ததும், தெரிய வந்தது. தொடர்ந்து, கிறிஸ்டோபர் அல்போன்ஸை நேற்று கைது செய்த மகளிர் போலீசார், மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை, 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்கும்படி, நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்தியாவிலேயே முதல் முறையாக, குழந்தைகள் ஆபாச படங்கள் பதிவேற்றம் செய்தவர், திருச்சியில் கைது செய்யப்பட்டுள்ளதாக, போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X