பொது செய்தி

தமிழ்நாடு

சிறார் ஆபாச வீடியோ : தொடரும் போலீசாரின் அதிரடி

Updated : டிச 13, 2019 | Added : டிச 13, 2019 | கருத்துகள் (11)
Advertisement

திருச்சி : சிறார் ஆபாச வீடியோ விவகாரம் தொடர்பாக நேற்று திருச்சியில் கிறிஸ்டோபர் கைது செய்யப்பட்ட நிலையில், ஐபி முகவரிகளை கொண்டு மேலும் 30 பேரிடம் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.





சிறார் ஆபாச வீடியோவை பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்ததாக திருச்சியை சேர்ந்த கிறிஸ்டோபர் என்பவரை போலீசார் நேற்று (டிச.,12) கைது செய்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு 15 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் கிறிஸ்டோபர் குழுவை சேர்ந்த 30 பேரிடம் திருச்சி போலீசார் இன்று (டிச.,13) விசாரணை நடத்த உள்ளனர். ஐதராபாத், உன்னாவ் பாலியல் பலாத்கார சம்பவங்கள் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், நாட்டிலேயே முதல் முறையாக ஆபாச வீடியோ விவகாரம் தொடர்பாக திருச்சியில் முதல் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.





திருச்சியை தொடர்ந்து மற்ற மாவட்டங்களிலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் நடவடிக்கையில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். சென்னை, செங்கல்பட்டு, கோவை, திருச்சி ஆகிய 4 மாவட்டங்களில் ஆபாச வீடியோ பதிவிட்ட மற்றும் பகிர்ந்த பலரிடம் விசாரணையை துவக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். ஐபி முகவரிகளை கொண்டு ரகசியமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஐபி முகவரிகளின் அடிப்படையில் ஆபாச வீடியோகளை பதிவிட்டவர்கள் கண்டுபிடிக்கப்படும் பட்சத்தில், கைது நடவடிக்கை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Swamidoss - Florida,யூ.எஸ்.ஏ
14-டிச-201902:10:45 IST Report Abuse
Swamidoss அட போங்கடா
Rate this:
Share this comment
TamilArasan - Nellai,இந்தியா
14-டிச-201920:52:35 IST Report Abuse
TamilArasanசீனாவில் ஆபாச வலைத்தளங்கள் மொத்தமாக தடை செய்யப்பட்டுள்ளது மேலும் உலகின் முன்னணி நாடுகள் அனைத்திலும் சிறார் ஆபாச வீடியோ என்பது மிக பெரிய குற்றம் சமீபத்தில் இந்தியர் ஒருவரை சிறார் ஆபாச வீடியோ காரணமாய் விமானத்தில் வைத்து கைது செய்தது அமெரிக்காவின் உளவு நிறுவனம் FBI ......
Rate this:
Share this comment
Cancel
Thirumurugan - Kuala Lumpur,மலேஷியா
13-டிச-201919:11:43 IST Report Abuse
Thirumurugan தமிழ் நாட்டில் உள்ள அனைத்து காவல்துறை அதிகாரிகள் அணைவரும் இதுவரை ஆபாச படம் பார்த்ததில்லை, பார்க்கவும் போவதில்லை என்று சென்னை காந்தி சமாதியில் சத்தியம் பிரமாணம் செய்ய முடியும்மா? சொல்லுங்க பார்ப்போம். சத்தியமான உண்மை ......தான் முதுகில் ஒரு வண்டி அழுக்கை வைத்துக்கொண்டு அடுத்தவர்களை கைது பண்ணுகிறார்களாம்.... காலக்கொடுமை
Rate this:
Share this comment
Cancel
Sri,India - India,இந்தியா
13-டிச-201910:53:30 IST Report Abuse
 Sri,India இந்தப்படங்கள் உள்நாட்டு படங்கள் என்றால் இந்தியாவில் எந்த மூலையில் தயாரித்து வெளியிட்டு இருந்தாலும் அவர்களை கைது செய்து சிறையில் தள்ள வேண்டும் .அப்போதாவது ஜென்மங்கள் திருந்தட்டும் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X