சமஸ்கிருதத்தில் பேசினால் சர்க்கரை நோய் வராது : பா.ஜ., எம்.பி.,

Updated : டிச 13, 2019 | Added : டிச 13, 2019 | கருத்துகள் (143)
Advertisement

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி : சமஸ்கிருதத்தில் பேசினால் சர்க்கரை நோய், கொழுப்புசத்து அதிகரிப்பு ஆகியவற்றை தடுக்க முடியும் என அமெரிக்க ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பா.ஜ., எம்.பி., பேசி உள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.





பார்லி.,யில் சமஸ்கிருத பல்கலை.,கள் மசோதா மீதான விவாதம் நேற்று நடைபெற்றது. அப்போது பேசிய பா.ஜ., எம்.பி., கணேஷ் சிங், தினமும் சமஸ்கிருதத்தில் பேசினால் நரம்பு மண்டலம் பலப்படும் எனவும், சர்க்கரை நோய், கொழுப்பு கட்டுக்குள் இருக்கும் எனவும் அமெரிக்காவை சேர்ந்த கல்வி நிறுவனம் நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. கம்ப்யூட்டர் புரோகிராமிங் சமஸ்கித மொழியில் செய்யப்பட்டால் எவ்வித குறைபாடுகளும் ஏற்படாமல் மிகச் சரியாக இருப்பதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. உலகில் உள்ள, சில இஸ்லாமிய மொழிகள் உட்பட 97 சதவீதத்திற்கும் அதிகமான மொழிகள் சமஸ்கிருதத்தை அடிப்படையாக கொண்டு உருவானவை என தெரிவித்தார்.





தொடர்ந்து மத்திய அமைச்சர் பிரதாப் சந்திர சாரங்கி பேசுகையில், சமஸ்கிருத மொழி மிகவும் நெளிவு சுழிவுகள் நிறைந்த மொழி. ஒரே வாக்கியத்தை பல வழிகளில் பேச முடியும். Brother, Cow போன்ற பல ஆங்கில வார்த்தைகள் சமஸ்கிருதத்தில் இருந்து தோன்றியவையாகும். இந்த மிக தொன்மையான மொழி வேறு எந்த மொழியின் தாக்கத்தாலும் ஏற்பட்டது அல்ல என தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (143)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
14-டிச-201915:37:11 IST Report Abuse
pradeesh parthasarathy அப்போ கோமியம் குடிச்சா இதொண்ணும் வராமல் பாதுகாக்க முடியாதா ..?
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
14-டிச-201908:22:28 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் எதை படிக்க வெச்சா இவனுங்க பைத்தியம் தெளியும்னு தெரியலை.
Rate this:
Share this comment
Cancel
chenar - paris,பிரான்ஸ்
14-டிச-201904:24:10 IST Report Abuse
chenar அடி இல்லைப்பா அது வைத்தியம் மதுரைக்கு போனீங்கன்னா வயித்திலேயே அடிப்பாங்க பேஸ் கிளியராயிடும் திண்டுக்கல் போனீங்கன்னா காலிலேயே அடிப்பாய்ங்க ... முட்டு வலி சரியாயிடும் டெல்லிக்கு போனீங்கன்னா சமஸ்கிருதம் படிக்க சொல்லுவாங்க சக்கரவியாதி சரியாயிடும் .....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X