சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ.10 ஆயிரத்திற்கு சிறுமிகள் விற்பனை; பாட்டி செயலால் அதிர்ச்சி

Added : டிச 13, 2019
Share
Advertisement
thiruvarur, police, girlsold, police, TNPolice, திருவாரூர், சிறுமிகள், விற்பனை, பாட்டி, போலீஸ்,  இடைத்தரகர்கள,

திருவாரூர் : திருவாரூரில், இரண்டு சிறுமிகளை ரூ.10 ஆயிரத்திற்கு, அவர்களது பாட்டியே விற்பனை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


latest tamil news


திருவாரூர் குடவாசல் பகுதியை சேர்ந்த விஜயலட்சுமி என்ற பெண், தனது இரண்டு பேத்திகளை விற்பனை செய்ததாக, அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரணையில், இரண்டு சிறுமிகளும் ரூ.10 ஆயிரத்திற்கு விற்பனை செய்துள்ளதாகவும், அவர்கள், கோவை - ஈரோடு எல்லையில் உள்ள புஞ்சம்பட்டியில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் வேலை பார்த்து வருவதும் தெரியவந்துள்ளது. இந்த விவகாரத்தில் இடைத்தரகர்களாக செயல்பட்ட கனகம், சகுந்தலா ஆகியோரை மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. சிறுமிகளை மீட்க திருவாரூர் சிறப்பு போலீசார், பின்னலாடை நிறுவனத்திற்கு விரைந்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X