நல்லவேளையாக அமித்ஷா நீதிபதியல்ல: கபில்சிபல்

Updated : டிச 13, 2019 | Added : டிச 13, 2019 | கருத்துகள் (58)
Advertisement

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி : நல்ல வேளையாக அமித்ஷா சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக இல்லை. இருந்திருந்தால் அரசியலமைப்பின்படி செல்லாத குடியுரிமை சட்டத்தை செல்லும் என உத்தரவு பிறப்பித்திருப்பார் என காங்., தலைவர்களில் ஒருவரான கபில் சிபல் தெரிவித்துள்ளார்.






குடியுரிமை திருத்த மசோதா பற்றி கருத்து தெரிவித்துள்ள கபில் சிபல், குடியுரிமை மசோதா, அரசியல் அமைப்பிற்கு எதிரானது. அந்த சட்ட திருத்த மசோதா செல்லுமா, செல்லாதா என்பதை கோர்ட் முடிவு செய்யட்டும். உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்த மசோதாவை செல்லும் என கூறினால், நல்ல வேளையாக அவர் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக இல்லை. ஒரு வேளை நீதிபதியாக இருந்திருந்தால் செல்லாத இந்த மசோதாவை செல்லும் என கூறி இருப்பார்.




மஹாராஷ்டிராவில் குறைந்தபட்ச பொது திட்டத்தின் அடிப்படையிலேயே சிவசேனாவுடன் கூட்டணி வைத்துள்ளோம். எங்களின் கொள்கைகளை ஏற்றுக் கொள்ள வேண்டும் என நாங்கள் அவர்களை வற்புறுத்தவில்லை. இந்த மசோதாவை சிவசேனா ஆதரிக்கவில்லை. ஓட்டெடுப்பின் போது ராஜ்யசபாவில் அவர்கள் இல்லை. ஒருவேளை அவர்கள் இருந்திருந்து அதனை எதிர்ப்பதற்கும், வெளிநடப்பு செய்வதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை.





அசாம் தேசிய குடியுரிமை பதிவில் இருந்து இந்துக்கள் அல்லாத 19 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர். இதனை பா.ஜ., புரிந்து கொள்ளவில்லை. அவர்கள் இஸ்லாமியர்களாக இருந்தால் இந்த மசோதா கொண்டு வரப்பட்டிருக்காது. அசாம் தேசிய குடியுரிமை பதிவு மற்றும் மசோதா விவகாரத்தில் இவர்களின் நிலைப்பாடு குழப்பமாக உள்ளது. இது தான் இப்போது பிரச்னையாக உள்ளது என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (58)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
14-டிச-201910:55:37 IST Report Abuse
Malick Raja மூக்கினுள் சென்று வரும் காற்று .. இருக்கும்வரைதான் ஒவ்வொருமனிதனுக்கும் தனித்தனி பெயர்கள் ,அதிகாரங்கள் அனைத்தும் .. காற்று சென்று வருவது நின்றால் அணைத்து மனிதர்களுக்கும் ஒரே பெயர் பிணம் ... அறிவுசார் மானிட இனம் இப்படி நிரந்தரமற்ற உலகவாழ்வை நிரந்தரம் என்று நினைத்து அறிவிழந்திருப்பதை வெளிக்கொணர்கிறது என்பது மட்டும் உண்மை
Rate this:
Share this comment
Cancel
spr - chennai,இந்தியா
14-டிச-201906:25:51 IST Report Abuse
spr "நல்ல வேளையாக அவர் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக இல்லை. ஒரு வேளை நீதிபதியாக இருந்திருந்தால் செல்லாத இந்த மசோதாவை செல்லும் என கூறி இருப்பார்." இது தவறான கருத்து. குற்றவாளியாகவே இருந்தாலும், அவர் நீதிபதி என்ற பதவியில் அமர்ந்தால், அவர் தவறு செய்ய மாட்டார்' அவர் சொல்வதில் நியாயம் இருக்கும் என்று நம்புவதே நம் மனப்பான்மை இவர் இப்படிச் சொல்வதன் மூலம், நம் நீதிபதிகள் தவறான தீர்ப்பையே சொல்வதாக குறிப்பிடுகிறாரா? இது நீதிமன்ற அவமதிப்பு இல்லையா?
Rate this:
Share this comment
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
14-டிச-201905:40:50 IST Report Abuse
skv srinivasankrishnaveni ஐயா சிப்பாளாரே லாயரா இருக்கீங்க ஆனால் வாய்திறந்தாலோ லையாராவே (பொய்களே பேசும் சந்த்ரஹரியாவே இருக்கீங்களே)எதனால் சோனியாக்கி வலதுகரமா இருக்கரதாவையே தானா அவ அவப்பொண்ணுப்பிள்ளைகள் எல்லோரும் வாய்திறந்தால் பொய்களாவேதான் கொட்டும் என்பது யுனிவர்சல் ரகசியமாச்சே நன்நாபொய்பேசத்தெரிஞ்சவாதான் லாயர் ஆகவே லாயக்கு என்பது பழைய காலம் மொழி வக்கீலா அப்போ பொய்களேதான் பேசுவான் என்று குக்கிராமங்கள்லேயும் கலாய்ப்பாங்களே நீரும் அப்படியேதான்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X