கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பாத்திமா மரணம்: சிபிஐ கோரிய மனு தள்ளுபடி

Updated : டிச 13, 2019 | Added : டிச 13, 2019 | கருத்துகள் (10)
Advertisement
fathima, chennai highcourt, high court, sucide, chennai IIT, cbi, பாத்திமா லத்தீப், சென்னை ஐகோர்ட், சென்னை உயர்நீதிமன்றம், ஐகோர்ட், உயர்நீதிமன்றம், சிபிஐ, சி.பி.ஐ., தற்கொலை, சென்னை ஐஐடி, ஐஐடி,

சென்னை: பாத்திமா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுவது குறித்து தமிழக அரசே முடிவெடுக்கலாம் என சென்னை ஐகோர்ட் பரிந்துரை செய்துள்ளது.

சென்னை ஐஐடியில் படித்துவந்த கேரளாவை சேர்ந்த மாணவி பாத்திமா லத்தீப் , கடந்த நவ.,9 ல் விடுதியில் தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக விடுதி காப்பாளர் அளித்த புகாரின் அடிப்படையில், கோட்டூர்புரம் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணைக்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில், இந்திய தேசிய மாணவர்கள் சங்கம் சார்பில், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், ' சென்னை ஐஐடியில் கடந்த 2018 ம் ஆண்டு முதல் இதுவரை 5 மாணவர்கள் இதேபோன்று மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர். தொடர்ச்சியாக இத்தகைய மரணங்கள் நிகழ்வதாலும், பாத்திமா மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாலும் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும்' எனக்கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட், மனுவை தள்ளுபடி செய்ததுடன், பாத்திமா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுவது குறித்து தமிழக அரசு முடிவு செய்யலாம். சரியாக படிக்காத மாணவர்களை, ஊக்குவித்து படிக்க வைக்கும் கடமை, பேராசிரியர்களுக்கு உண்டு. சென்னை ஐஐடி மட்டுமல்லாமல், மற்ற ஐஐடிக்களில் படிக்கும் மாணவர்களின் தற்கொலைகளையும் தடுக்க தீர்வு காண வேண்டும். இளம் மாணவர்கள் தற்கொலைகளை தடுக்க கூடிய நிரந்தர தீர்வை காண வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. மாணவர்களுக்கு உளவியல் ரீதியாக ஆலோசனை வழங்க இதுவே சரியான நேரம் என தீர்ப்பில் கூறியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
13-டிச-201919:26:19 IST Report Abuse
கல்யாணராமன் சு. \\சரியாக படிக்காத மாணவர்களை, ஊக்குவித்து படிக்க வைக்கும் கடமை, பேராசிரியர்களுக்கு உண்டு .......\\ .... இந்த கருத்தின் அர்த்தம் எனக்கு புரியவில்லை ......... ஆசிரியர்கள் சொல்வதை கேட்கும் கடமையும் மாணவர்களுக்கும் உண்டல்லவா? . அதை எப்படி செய்யவைப்பது ? இந்த நீதிபதிகளும் ஒரே மாதிரியான குற்றங்களுக்கு ஒரே மாதிரியான தண்டனைகளா கொடுக்கிறார்கள்? குற்றம் செய்தவரின் நிலை, பின்னணி, குற்றம் செய்ததின் காரணம் என்று பலவாறான காரணிகளையும் ஆய்கிறார்கள் அல்லவா? அதே போலத்தான் , ஆசிரியர்களும் ........ எல்லாவிதத்திலும் அவர்களையே குற்றவாளிகளாக பார்ப்பது, ஆசிரியர் வேலைக்கு வருபவர்களை தயங்க வைக்கும் ..........
Rate this:
Share this comment
Cancel
Darmavan - Chennai,இந்தியா
13-டிச-201915:17:36 IST Report Abuse
Darmavan இந்த மாதிரி தெளிவாக எல்லா தீர்ப்பும் இருந்தால் நல்லது.படிப்பில் திறமை காட்ட முடியாத பிள்ளைகள் IIT யில் சேராமலிருப்பது நல்லது.இந்த மாதிரி பிளாக் மெயில் /மத அரசியல் தண்டிக்கப்பட வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
Suri - Chennai,இந்தியா
13-டிச-201914:40:39 IST Report Abuse
Suri ஒருவேளை பாத்திமாவிற்கு பதில் திருபுரசுந்தரி சுந்தரேசன் தற்கொலை புரிந்திருந்தால் வேறு வகையான தீர்ப்பு வந்திருக்குமோ?? அப்படிப்பட்ட திரிபுர சுந்தரி என்ற மாணவியாகவும் விரிவுரையாளர் ஜான் இல்லை லதீப் என்ற பேராக இருந்திருந்தால்????????
Rate this:
Share this comment
கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா
13-டிச-201919:45:28 IST Report Abuse
கதிரழகன், SSLCமீதி நாலு தற்கொலை. அவிங்க பேரை கூட சொல்ல மாட்டாங்க....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X