பாத்திமா மரணம்: சிபிஐ கோரிய மனு தள்ளுபடி| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பாத்திமா மரணம்: சிபிஐ கோரிய மனு தள்ளுபடி

Updated : டிச 13, 2019 | Added : டிச 13, 2019 | கருத்துகள் (10)
fathima, chennai highcourt, high court, sucide, chennai IIT, cbi, பாத்திமா லத்தீப், சென்னை ஐகோர்ட், சென்னை உயர்நீதிமன்றம், ஐகோர்ட், உயர்நீதிமன்றம், சிபிஐ, சி.பி.ஐ., தற்கொலை, சென்னை ஐஐடி, ஐஐடி,

சென்னை: பாத்திமா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுவது குறித்து தமிழக அரசே முடிவெடுக்கலாம் என சென்னை ஐகோர்ட் பரிந்துரை செய்துள்ளது.

சென்னை ஐஐடியில் படித்துவந்த கேரளாவை சேர்ந்த மாணவி பாத்திமா லத்தீப் , கடந்த நவ.,9 ல் விடுதியில் தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக விடுதி காப்பாளர் அளித்த புகாரின் அடிப்படையில், கோட்டூர்புரம் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணைக்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில், இந்திய தேசிய மாணவர்கள் சங்கம் சார்பில், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், ' சென்னை ஐஐடியில் கடந்த 2018 ம் ஆண்டு முதல் இதுவரை 5 மாணவர்கள் இதேபோன்று மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர். தொடர்ச்சியாக இத்தகைய மரணங்கள் நிகழ்வதாலும், பாத்திமா மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாலும் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும்' எனக்கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட், மனுவை தள்ளுபடி செய்ததுடன், பாத்திமா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுவது குறித்து தமிழக அரசு முடிவு செய்யலாம். சரியாக படிக்காத மாணவர்களை, ஊக்குவித்து படிக்க வைக்கும் கடமை, பேராசிரியர்களுக்கு உண்டு. சென்னை ஐஐடி மட்டுமல்லாமல், மற்ற ஐஐடிக்களில் படிக்கும் மாணவர்களின் தற்கொலைகளையும் தடுக்க தீர்வு காண வேண்டும். இளம் மாணவர்கள் தற்கொலைகளை தடுக்க கூடிய நிரந்தர தீர்வை காண வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. மாணவர்களுக்கு உளவியல் ரீதியாக ஆலோசனை வழங்க இதுவே சரியான நேரம் என தீர்ப்பில் கூறியுள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X