நிர்பயா வழக்கு டிச., 18 க்கு ஒத்திவைப்பு

Added : டிச 13, 2019 | கருத்துகள் (4)
Share
Advertisement

புதுடில்லி: நிர்பயா குற்றவாளிகளை உடனடியாக தூக்கில் போட வேண்டும் எனக்கூறி, அவரின் பெற்றோர் தொடர்ந்த வழக்கு விசாரணை டிச.,18 க்கு டில்லி கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
குற்றவாளி தாக்கல் செய்த சீராய்வு மனு மீதான விசாரணை, டிச., 17 ல் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வருவதாகவும், அதற்கு பின்னர் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என நீதிபதி சதிஷ் குமார் அரோரா தெரிவித்தார். டிச., 18 பிற்பகல் 2 மணிக்கு, இந்த மனு மீதான விசாரணை நடத்தப்பட உள்ளது.

இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, அரசு வழக்கறிஞர், குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனைக்கான வாரன்ட் பிறப்பிக்க வேண்டும் என்றார்.

குற்றவாளிகள் தரப்பில் ஆஜரான விரிந்தா குரோவர், சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு மீதான விசாரணை முடியும் வரை காத்திருக்க வேண்டும் என தெரிவித்தார்.

இது தொடர்பாக நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி கூறுகையில், குற்றவாளிகளின் தூக்கு தண்டனையை நிறைவேற்ற 7 ஆண்டுகளாக காத்திருந்த நாங்கள், இன்னும் ஒரு வாரம் காத்திருப்போம். டிச., 18 அன்று, குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனைக்கான வாரன்ட் வரும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா
13-டிச-201919:43:16 IST Report Abuse
கதிரழகன், SSLC இந்த மாதிரி வாய்தா கேக்குற வக்கீல் வழக்கு விசாரணைக்கு வரும் வரை கைதிகளோடு ஜெயிலுல களி திண்ணனும் ன்னு சட்டம் போடணும்.
Rate this:
Cancel
spr - chennai,இந்தியா
13-டிச-201917:47:06 IST Report Abuse
spr இந்தியாவில் உள்ள சிறந்த வழக்கறிஞர்கள் அனைவருமே மனசாட்சியை அடகு வைத்த மஹான்கள் தான் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வாதாடுவது ஒருவகையில் அவர்கள் பிழைப்பு ஆனால் சந்தேகத்துக்கு இடமின்றி பலமுறை குற்றம் நிரூபித்த பின்னரும் காசுக்காக குற்றவாளிகள் என்று தீர்மானமாகத் தெரிந்தும் அவர்களுக்காக வாதாட முன்வரும் இவர்களே கேடு கெட்டவர்கள்
Rate this:
Cancel
Subburamu Krishnaswamy - Coimbatore,இந்தியா
13-டிச-201914:05:27 IST Report Abuse
Subburamu Krishnaswamy The mercy petition to the President of India is the last resort for convicts. After the President of India has rejected the clemency petition, why the Supreme court is interfering? The criminals might have applied the curative petition before submitting the mercy petition to the President. They are doing the mockery of Justice. Supreme court must change the procedure, they should not entertain after the disposal of the case by the President of India.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X