7 அமைச்சர்களுக்கு 56 இலாக்கா : உத்தவ் அரசு அதிரடி

Updated : டிச 13, 2019 | Added : டிச 13, 2019 | கருத்துகள் (7)
Advertisement

இந்த செய்தியை கேட்க

மும்பை : மஹாராஷ்டிராவில் ஆட்சி பொறுப்பேற்ற 2 வாரங்களுக்கு பிறகு, அமைச்சர்களுக்கு இலாக்காக்களை ஒதுக்கி உள்ளார் முதல்வர் உத்தவ் தாக்கரே.






நீண்ட போராட்டம் மற்றும் குழப்பத்திற்கு பிறகு நவ.,28 ம் தேதியன்று சிவசேனா தலைமையில் தேசியவாத காங்., காங்., ஆகிய 3 கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தன. அதன் பிறகு தொடர்ந்து இலாக்கா ஒதுக்கீடு தொடர்பாக 3 கட்சிகள் இடையே தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வந்தது. 2 வார பேச்சுவார்த்தைக்கு பிறகு தற்போது இலாக்கா ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 7 அமைச்சர்களுக்கு 56 இலாக்காக்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.





சிவசேனாவுக்கு உள்துறை மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை, தேசியவாத காங்.,க்கு நிதித்துறையுடன் வீட்டுவசதி வாரியம் மற்றும் கிராமப்புற வளர்ச்சித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. காங்.,க்கு வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித்துறை துறை ஒதுக்கப்பட்டுள்ளது. தற்காலிகமாக 7 அமைச்சர்களிடம் 56 இலாக்காக்கள் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், டிச.,16 ம் தேதி துவங்கி ஒரு வாரம் நடக்க உள்ள மஹா., சட்டசபை குளிர்கால கூட்டத் தொடரின் போது, டிச.,22 அல்லது 23 ம் தேதி அமைச்சரவை விரிவாக்கம் நடைபெறும் என கூறப்படுகிறது.





288 உறுப்பினர்களைக் கொண்ட மஹா., சட்டசபையில் இதுவரை 43 அமைச்சர்களுக்கு மேல் இருந்தது இல்லை. முந்தைய பா.ஜ., ஆட்சியின் போது முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தன்வசம் வைத்திருந்த உள்துறை மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறைகளை உத்தவ் தாக்கரே வைத்துக் கொள்ளவில்லை. அதற்கு பதிலாக தேசியவாத காங்.,ஐ சமாதானப்படுத்தி, அவர்களிடம் ஒப்படைத்துள்ளார்.

சுகாதாரம், நிதி, திட்டங்கள், வீட்டுவசதி, கூட்டுறவு உள்ளிட்ட துறைகள் தேசியவாத காங்.,ன் ஜெயந்த் பட்டேலுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இது தவிர கிராம வளர்ச்சித்துறை, நீர் வளத்துறை, மாநில வரித்துறை உள்ளிட்ட துறைகளும் தேசிய வாத காங்.,க்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. வருவாய், மின்சாரம், மருத்துவ கல்வி, பள்ளி கல்வி உள்ளிட்ட துறைகள் காங்.,க்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
13-டிச-201916:31:53 IST Report Abuse
Endrum Indian அடப்பாவிகளா 56 இலாக்காவா? மொத்த சீட்டு 250 என்று வைத்துக்கொண்டால் அப்போ 130 எம் எல் ஏ இருந்தால் ஆண்டுக்கு ஒரு முறை எல்லோருக்கும் 5 வருடங்களில் மந்திரி பதவி கொடுத்து விடலாம் போல இருக்கின்றது. Home, Finance, Infrastructure, Security, General affairs - இந்த ஐந்து இலாக்காக்கள் இருந்தால் போதுமே மாநிலத்தை நன்கு ஆட்சி செய்யலாம்????
Rate this:
Share this comment
Cancel
Ravi - Chennai,இந்தியா
13-டிச-201915:41:30 IST Report Abuse
Ravi இன்னும் எத்தனை நாள் பார்ப்போம் .
Rate this:
Share this comment
Cancel
RAMESH - CHENNAI,இந்தியா
13-டிச-201915:39:44 IST Report Abuse
RAMESH Hukummm.. சும்மா ஒரு துறை ஓதுக்கினாலே கோடி கணக்கில் அடிபனுவங்க எப்போ ஆளுக்கு மூணு ந கேட்கவெ வேண்டாம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X