சக்திவாய்ந்த 100 பெண்கள் பட்டியலில் நிர்மலா

Updated : டிச 13, 2019 | Added : டிச 13, 2019 | கருத்துகள் (62)
Advertisement

இந்த செய்தியை கேட்க

நியூயார்க் : போர்ப்ஸ் வெளியிட்டுள்ள உலகின் சக்திவாய்ந்த 100 பெண்களின் பட்டியலில் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முதல் முறையாக இடம்பிடித்துள்ளார்.





உலகின் சக்திவாய்ந்த 100 பெண்களின் பட்டியலை போர்ப்ஸ் நிறுவனம் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2019 ம் ஆண்டில் அரசு தலைமை பொறுப்பு, தொழில்துறை, மீடியா உள்ளிட்ட துறைகளில் தலைசிறந்து விளங்கும் 100 சக்தி வாய்ந்த பெண்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல் முதலிடத்தில் உள்ளார். இவரைத் தொடர்ந்து ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைவர் கிறிஸ்டைன் லகர்டி 2வது இடத்திலும், அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் தலைவர் நான்சி பெலோசி 3வது இடத்திலும் உள்ளனர். இந்த பட்டியலில் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா 29 வது இடத்தில் உள்ளார்.




இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முதல் முறையாக பட்டியலில் இடம்பிடித்துள்ளார். இந்த பட்டியலில் 34 வது இடத்தில் உள்ள நிர்மலா, இந்தியாவின் முதல் முழுநேர பெண் நிதியமைச்சர் மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் என்ற பெருமையை பெற்றவர். இதே போன்று எச்சிஎல் கார்ப்பரேஷன் சிஇஓ நடார் மல்கோத்ரா (54), இந்தியாவின் பணக்கார பெண்மணியாக கருதப்படும் மசூம்தர் ஷா (65) ஆகியோரும் இந்த பட்டியலில் உள்ளனர்.





பில்கேட்சின் மனைவி மெலிண்டா கேட்ஸ் (6), ஐபிஎம் சிஇஓ ஜின்னி ரோமட்டி (9), பேஸ்புக் சிஓஓ ஷெரில் சண்ட்பர்க் (18), நியூசி., பிரதமர் ஜசிந்தா ஆர்டன்(38), அமெரிக்க அதிபர் டிரம்பின் மகள் இவங்கா டிரம்ப்(42), செரினா வில்லியம்ஸ் (81), பருவநிலை மாற்ற ஆர்வலர் கிரிட்டா துன்பர்க் (100) ஆகியோரும் இப்படியலில் இடம்பெற்றுள்ளனர். இந்த பட்டியலில் தொடர்ந்து 9 ஆண்டுகளாக ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (62)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sudhapriyan - Chennai,இந்தியா
14-டிச-201906:10:32 IST Report Abuse
sudhapriyan சும்மா இருந்த எல்லோரையும் வங்கியில் பணம் போட வைத்து , பின்னர் அவர்களுடைய கணக்கில் பணம் குறைவாக உள்ளது என்று பணத்தை எடுத்துக்கொண்டு , இதை மூலம் அரசாங்கத்துக்கு இவ்வளவு லாபம் என்று காட்டி அவர்கள் வயித்தெரிச்சல் என்னை ஒன்றும் செய்யாது என்று இருக்கும் இவர் சக்திவாய்ந்தவர்தான் ...
Rate this:
Share this comment
Cancel
Srivatsava -  ( Posted via: Dinamalar Android App )
14-டிச-201905:15:17 IST Report Abuse
Srivatsava சக்தி வாய்ந்தவர் தான். இல்லையேல் 8 வளற்ச்சியில் இருந்த நாட்டின் பொருளாதாரத்தை அதில் பாதியாக 4 ஆக இவரைவிட்டால் யாரால் கொண்டு வர முடியும்.
Rate this:
Share this comment
Cancel
Nepolian S -  ( Posted via: Dinamalar Android App )
14-டிச-201904:02:58 IST Report Abuse
Nepolian S என்னத்த செஞ்சாருன்னு 34 வது இடம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X