மன்னிப்பு கேட்பதா...? நானா...?: ராகுல் மறுப்பு

Updated : டிச 13, 2019 | Added : டிச 13, 2019 | கருத்துகள் (67)
Advertisement

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: 'ரேப் இன் இந்தியா' என்று பேசியது குறித்த விவகாரத்தில், மன்னிப்பு கேட்க மாட்டேன் என காங்கிரஸ் எம்.பி., ராகுல் கூறியுள்ளார்.





ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடந்த பிரசார கூட்டத்தில், காங்கிரஸ் எம்.பி., ராகுல், 'ரேப் இன் இந்தியா' என பேசியதாக லோக்சபாவில் பா.ஜ., பெண் எம்.பி.,க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால், லோக்சபா ஒத்திவைக்கப்பட்டது. ஸ்மிருதி இரானி பேசும் போது, வரலாற்றில் முதல்முறையாக பெண்களை பலாத்காரம் செய்ய வேண்டும் என தலைவர் ஒருவர் பேசினார். அவரை தண்டிக்க வேண்டும் எனக்கூறினார்.
இந்த விவகாரம் குறித்து விளக்கமளிக்க ராகுல் முயன்ற போது, அவருக்கு அனுமதி வழங்கப்படவில்லை.





இதன் பின்னர் பார்லிமென்ட் வளாகத்தில், ராகுல் நிருபர்களிடம் கூறியதாவது: நான் மன்னிப்பு கேட்க மாட்டேன். நான் என்ன கூறினேன் என்பதை தெளிவுபடுத்திக் கொள்கிறேன். 'மேக் இன் இந்தியா' குறித்து பிரதமர் பேசி வருகிறார். ஒருவர் செய்தி தாளை படிக்கும் போது, மேக் இன் இந்தியா குறித்து செய்தியை பார்த்தது உண்டா? ஆனால், செய்தி தாள்களில், என்ன மாதிரியான செய்திகள் வருகின்றன? நிறைய பலாத்கார செய்திகள் தான் வருகின்றன. என்று தான் நான் பேசினேன். குடியுரிமை மசோதா காரணமாக வடகிழக்கு மாநிலங்களில் நடந்து வரும் போராட்டத்தை திசைதிருப்பவே பா.ஜ.,வும் பிரதமர் மோடியும் முயற்சிக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (67)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
karutthu - nainital,இந்தியா
14-டிச-201910:07:38 IST Report Abuse
karutthu உங்களால் உங்கள் கட்சிக்கு தான் அவமானம் .உங்கள் பிடிவாதத்தால் கட்சியின் மதிப்பு போய்விட்டது தேர்தலில் நின்றால் நீங்கள் தோல்வி அடைவீர்கள் .உங்கள் பேச்சை இந்த நாடே கவனித்துள்ளது . மஹா கேவலம்
Rate this:
Share this comment
Cancel
14-டிச-201900:25:15 IST Report Abuse
S.V ராஜன்(தேச பக்தன்...) இவனின் தாயும் தமக்கையும் இந்த திட்டத்தில் சேர்ந்து உள்ளார்கள் போல..
Rate this:
Share this comment
Cancel
சீனு, கூடுவாஞ்சேரி ராஹுலின் பேச்சு ஊர்புரத்தில் காம்பவுண்ட் சுவற்றின் மேல் மாவாவை வாயிலில் அடக்கிக்கொண்டு வீட்டுக்கு அடங்காத ஒரு சில சிறுசுகள் வருவோர் போவோரை கிண்டல் அடித்துக்கொண்டிருக்கும். அந்த ரகத்தை சேர்ந்தது மோடியையும் அவரது மேக் இன் இந்தியாவையும் பற்றிய திமிர் பேச்சு.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X