பொது செய்தி

இந்தியா

இந்தியாவில் தங்கம் கடத்தல் அதிகரிக்க காரணம் என்ன?

Updated : டிச 13, 2019 | Added : டிச 13, 2019 | கருத்துகள் (21)
Share
Advertisement

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி : வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு கடத்தப்படும் தங்கத்தின் அளவு அதிகரித்து வருவதற்கு தங்கத்தின் மீதான சுங்க வரி உயர்த்தப்பட்டதே காரணம் என சர்வதேச தங்க கவுன்சிலின் மேலாண் இயக்குனர் சோமசுந்தரம் தெரிவித்துள்ளார்.latest tamil newsஜூலை மாதத்தில் இறக்குமதி செய்யப்படும் தங்கத்திற்கான வரியை மத்திய அரசு அதிகரித்தது, செப்டம்பர் மாதம் முதல் வரலாறு காணாத அளவிற்க தங்கம் விலை உயர்ந்தது ஆகியனவே சட்ட விரோதமாக இந்தியாவிற்கு தங்கம் கடத்தப்படுவது அதிகரித்ததற்கான காரணம். பைகள், உடைகள், ஆசன வாய் ஆகியவற்றில் மறைத்து தங்கம் கடத்தியதாக இந்த ஆண்டில் ஏராளமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் ஒரே விமானத்தில் வந்த 30 பயணிகளிடம் இருந்து 7.5 கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.


latest tamil news


இந்தியாவில் இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டதால் செப்., மாதத்தின் துவக்கத்தில் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.39,885 ஐ எட்டியது. இந்த ஆண்டு மட்டும் இந்தியாவிற்கு கடத்தி வரப்பட்ட தங்கத்தின் அளவு 30 முதல் 40 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், இந்த ஆண்டு 140 டன் தங்கம் சட்ட விரோதமாக கடத்தி வரப்பட்டுள்ளதாகவும் இந்திய நகை விற்பனை கழக தலைவர் அனந்த பத்மநாதபன் தெரிவித்துள்ளார். 2020 ம் ஆண்டில் இது இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


latest tamil newsஇந்தியாவில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி அதிகரிக்கப்படும் எல்லாம் கடத்தல் தங்கத்தின் அளவும் அதிகரிப்பதாக கூறப்படுகிறது. 2013 ல் இறக்குமதி வரி 3 மடங்கு அதிகரிக்கப்பட்டதன் காரணமாக 2014 ல் 225 டன் தங்கம் கடத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு செப்., மற்றும் அக்டோபர் மாதங்களில் மட்டும் 2018 ம் ஆண்டை விட 40 சதவீதம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருவாய் புலனாய்வு இயக்குனரக இணையத்தள புள்ளிவிபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனா, தைவான், ஹாங்காங், நேபாளம், பூடான், மியான்மர் ஆகிய நாடுகளில் இருந்தே இந்தியாவிற்கு அதிக அளவில் தங்கம் கடத்தப்படுவதாக கூறப்படுகிறது. இந்திய அரசு இறக்குமதி வரியை குறைத்தால் தங்கம் கடத்தப்படுவது குறைய வாய்ப்புள்ளதாகவும் தங்க விற்பனை சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
14-டிச-201904:38:49 IST Report Abuse
J.V. Iyer கடைசியில் மக்களுக்கு கிடைப்பது மிகவும் மட்டமான தங்கம் (17 காரட்). கொள்ளை விலை. இதெல்லாம் மக்களுக்கு தெரியாது. பாவம் ஏமாறுகிறார்கள்.
Rate this:
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
13-டிச-201919:58:25 IST Report Abuse
தமிழ்வேல் இதை பல முறை எழுதினேன். மன்மோகன் சிங், ப சி காலத்தில் தங்கத்தின் மீது வரியை அதிகரிக்கும்போது பாஜக இதனால்தான் கடத்தல் தங்கம் அதிகமாகின்றது என்று உறுமியது. அதை பலமுறை கூறினேன்..
Rate this:
Cancel
13-டிச-201919:06:31 IST Report Abuse
மும்பை நாநா எல்லாம் ஆப்பிரிக்காவில் இருந்து துபாய், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை வழியாக கடத்தல் நடைபெறுகிறது.இங்குள்ள கஸ்டம்ஸ் அதிகாரிகள் சிலர் கூட்டாளிகள்.விலையில் 15 சதவீதம் நிகர லாபம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X