சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கோவை; சிறுமி திருமணம் தடுப்பு

Updated : டிச 13, 2019 | Added : டிச 13, 2019
Advertisement

கோவை : கோவை மாவட்டம் வேடபட்டி அடுத்த நாகராஜபுரம் கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுமிக்கு திருமணம் நடக்க உள்ளதாக சமூக பாதுகாப்பு துறையின் கீழ் உள்ள 'ஒன் ஸ்டாப்' நிர்வாகிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, ஒன் ஸ்டாப் ஒருங்கிணைப்பாளர் பிரியங்கா தலைமையிலான அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். அதில், 14 வயது சிறுமிக்கு நாளை(டிச.,14) திருமணம் நடக்க இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து, அதிகாரிகள், அந்த திருமணத்தை நிறுத்தி, சிறுமியின் பெற்றோர்களை, மணமகனின் பெற்றோர்கள் சமூக நலத்துறை அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர், 18 வயது நிரம்பாமல், திருமணம் செய்து கொடுக்க மாட்டோம் என எழுதி வாங்கினர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X