அவையில் இருக்க ராகுலுக்கு உரிமையில்லை; ராஜ்நாத்சிங்

Updated : டிச 13, 2019 | Added : டிச 13, 2019 | கருத்துகள் (41)
Advertisement
Rahul, MakeinIndia, RajnathSingh, Loksabha, RapeinIndia, RahulGandhi, ராகுல்,ராகுல்காந்தி, மேக்இன்இந்தியா, ராஜ்நாத்சிங், ரேப்இன்இந்தியா, மக்களவை, லோக்சபா

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: மேக் இன் இந்திய திட்டத்தை மோசமாக சித்தரித்த ராகுல், அவையில் இருக்க உரிமையில்லை என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

ஜார்கண்ட் மாநிலத்தில் நடந்த தேர்தல் பொதுக்கூட்டத்தில் முன்னாள் காங்., தலைவர் ராகுல் பேசுகையில், பிரதமர் மோடி 'மேக் இன் இந்தியா' திட்டத்தை அறிவித்தார். ஆனால் எங்கு பார்த்தாலும், 'ரேப் இன் இந்தியா' என மாறி வருகிறது. உ.பி.,யில் பா.ஜ., எம்எல்ஏ., ஒருவர் பெண்ணை பலாத்காரம் செய்தார். இது குறித்து மோடி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. பெண்களை படிக்க வைப்போம், பாதுகாப்போம் என்ற மோடி, பாஜ.,வினரிடம் இருந்து தான் பாதுகாக்க வேண்டும் என தெரிவிக்கவில்லை, என பேசினார்.





ராகுலின் இந்த பேச்சுக்கு பா.ஜ., கடும் எதிர்ப்பு தெரிவித்தது. லோக்சபா இன்று (டிச.,13) கூடியதும் பா.ஜ., பெண் எம்.பி.,க்கள் ராகுலுக்கு எதிராக கோஷமிட்டு அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டது. அதேபோல், ராஜ்யசபாவிலும், ராகுலுக்கு எதிராக அமளியில் ஈடுபட்டனர். இதற்கு அவைத்தலைவர் வெங்கையா நாயுடு, அவையில் உறுப்பினராக இல்லாத ஒருவரின் பெயரை உச்சரிக்கக்கூடாது, என்றார். பின்னர் அமளி முடிந்ததும் மறுதேதி குறிப்பிடாமல் அவை ஒத்திவைக்கப்பட்டது.






உரிமை இல்லை


இது குறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது:
ராகுலின் பேச்சு லோக்சபாவை மட்டும் வேதனைப்படுத்தவில்லை. ஒட்டுமொத்த நாட்டையும் வருத்தப்பட வைத்துள்ளது. இதுபோன்ற உறுப்பினர் அவையில் இருப்பதற்கு எந்தவித தார்மீக உரிமையும் இல்லை. மேக் இன் இந்தியா என்ற கருத்தை மோசமாக சித்தரிப்பதை ஏற்க முடியாது. ராகுல் தனது கருத்துக்கு பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும். இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா
14-டிச-201920:21:08 IST Report Abuse
Swaminathan Chandramouli புதிய செய்தி : ராகுல் தான் ராகுல் சாவர்க்கர் இல்லை மன்னிப்பு கேட்பதற்கு " நான் ராகுல் காந்தி என்று ஆணவமாக . திமிருடன் ஸ்ரீ சவர்க்காரைஅவமான படுத்தும் விதமாக பேசினார் ஆனால் காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் மஹாராஷ்ரா முதல்வர் உத்தவ் தாக்ரே ராகுலுக்கு தக்க பதிலடி கொடுத்தார் எப்படி ? ராகுல் காந்தி வீர் சவர்க்காரை அவமானப்படுத்தும் முறையில் பேசியதை பொறுத்து கொள்ளமாட்டோம் நாங்கள் இன்னும் நேருவுக்கு மரியாதை கொடுக்கிறோம் அதனை கெடுத்துக்கொள்ளவேண்டாம் என்று மிகுந்த கோபத்தோடு ராகுலுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் வெகு விரைவில் மஹாராஷ்ட்ரா முக்கூட்டணி ராகுலின் ஆணவப்பேச்சால் விரிசல் கண்டு விடும்
Rate this:
Share this comment
Cancel
Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா
14-டிச-201911:49:26 IST Report Abuse
Swaminathan Chandramouli இந்த ஆளை முதலில் பாராளுமன்றத்தின் நடவடிக்கைகளில் இருந்து சஸ்பெண்ட் செய்யவேண்டும் . நாளுக்குநாள் இவரின் நடவடிக்கை முற்றி கொண்டே போகிறது அப்படி தான் மோடி ஜி ஐ பற்றி அசிங்கமாக பேசினார் , ஆனால் நமது நீதி மன்றங்கள் இவருக்கு எச்சரிக்கை செய்ததோடு சரி தண்டனை கொடுக்கவில்லை ஏன் இவர் பண்டைய UPA வின் ராஜகுமாரன் அதனால் நீதிமான்கள் கூட இவர் மேல் சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்க அச்சம் கொள்கிறார்கள் பல நீதிபதிகள் முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் அவர்கள் தயவால் பதவி பெற்றவர்கள் உண்ட வீட்டுக்கு துரோகம் செய்யமாட்டார்கள்
Rate this:
Share this comment
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
14-டிச-201905:52:43 IST Report Abuse
skv srinivasankrishnaveni திமுக லே மெஜாரிடியே தான் தான் என்பதுபோல ராசாவும் கனிமொழியும் தைதை என்று கூச்சல்போட்டுண்டுருக்குங்களே ஏதாச்சும் யாருக்கும் புரிஞ்சுதா பிஜேபி எதுசெய்தாலும் தப்புதானா இந்தக்கூடடானியேதான்பலவருஷமா ஆட்ச்சில் இருந்தாங்க என்ன செய்தாங்க ஒரு நிதிமந்திரியே பலமில்லியன் கொள்ளை அடிச்சுருக்கான் அதற்குத்தான் கூட்டு வச்சுருந்தாங்களோ இவ்ளோ வருஷமா எம்பி எம் எல் ஏ ன்னு பதவிலேயிருந்துட்டு இதுகளெல்லோரும் பலகோடிகளுக்கே அதிபதியான இருக்காங்களே அதை கேட்கப்போனாளா என்னாவும் கரப்ஷன் இல்லாத ஆட்ச்சிநடக்குது பொறுக்குமா இந்த பணம் பண்ணிகளுக்கெல்லாம் . அப்பாரு பலகோடிலே சேர்த்தார் ஒருநாயா பைசாவுகொண்டுபோலே சுடுகாட்டுக்குப் போனால் வெட்டியானுக்கும் சிலவு செய்யவேண்டும் என்றுதான் மெரினாலேயே புதைச்சானுக போராடிமன்றாடி மெரினா என்ன க்ரிஷ்ணாம்பேட்டையா பெசன்ட்நகர் சுடுகாடா பொதுஜனம் உலாவரும் இடம் தான் இந்த நால்வரின் ஆவியுமே சுத்திண்டுருக்காமா உண்மையா
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X