பிரிட்டன் தேர்தல்: 15 இந்திய வம்சாவளி எம்.பி.,க்கள் வெற்றி| New record as 15 Indian-origin MPs elected to House of Commons | Dinamalar

பிரிட்டன் தேர்தல்: 15 இந்திய வம்சாவளி எம்.பி.,க்கள் வெற்றி

Updated : டிச 13, 2019 | Added : டிச 13, 2019 | கருத்துகள் (11)
Share
New record, Indian-origin, MP, elect, பிரிட்டன், தேர்தல், இந்திய வம்சாவளி, எம்.பி.,

இந்த செய்தியை கேட்க

லண்டன் : பிரிட்டன் பொது தேர்தலில், இந்திய வம்சாவளியை சேர்ந்த 15 எம்.பி.,க்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
இதில், கன்சர்வேட்டிவ் மற்றும் தொழிலாளர் கட்சி சார்பில் 7 பேரும், லிபரெல் ஜனநாயக கட்சி சார்பில் ஒருவரும் வெற்றி பெற்றனர். கடந்த முறை கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் 5 இந்திய வம்சாவளி எம்.பி.,க்கள் வெற்றி பெற்ற நிலையில், இந்த முறை 7 பேர் வெற்றி பெற்றுள்ளனர். ஆனால், தொழிலாளர் கட்சி சார்பில், வெற்றி பெற்ற இந்திய வம்சாவளி எம்.பி.,க்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
கடந்த 1892 ல், பின்சுபரி மத்திய தொகுதியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த தாதாபாய் நவுரோஜி வெற்றி பெற்றார். அது முதல், இந்திய வம்சாவளியினர் பிரிட்டன் தேர்தலில் வெற்றி பெற்றனர். ஆனால், இந்த முறை, இந்திய வம்சாவளி எம்.பி.,க்கள் அதிகம் பேர் வெற்றி பெற்றனர்.

இந்த தேர்தலில், கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில், ககன் மொகிந்திரா கிளாரி கவுடின்கோ (புதியவர்கள்) , பிரிதி படேல், அலோக் சர்மா, ஷைலாஷ் வரா, சுலா பிரவர்மன், மற்றும் ரிஷி சுனக்( கடந்த முறையும் எம்.பி.,க்களாக இருந்தவர்கள்) ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். தொழிலாளர் கட்சி சார்பில் நவிந்து மிஸ்ரா( புதியவர்), விரேந்திர சர்மா, தன்மன்ஜித் சிங், சீமா மல்கோத்ரா, ப்ரீத் கவுர் கில், லிசா நந்தி, வலரீ வஸ்( கடந்த முறையும் எம்.பி.,க்களாக இருந்தவர்கள்) ஆகியோர் வெற்றி பெற்றனர்.


latest tamil news
லெசெஸ்டர் கிழக்கு தொகுதியில், கடந்த 1987 முதல் தொழிலாளர் கட்சியின் கெயித் வஸ் வெற்றி பெற்று வருகிறார். ஆனால், இந்த முறை, இந்திய வம்சாவளியினரின் பிரசாரம் காரணமாக கன்சர்வேட்டிவ் கட்சியின் பூபென் தேவ் வெற்றி பெற்றார். அலின் தொகுதியில் போட்டியிட்ட கன்சர்வேட்டிவ் கட்சியின் சஞ்சய் சென்னை, தொழிலாளர் கட்சியின் மார்க் டமி , குறைந்தளவு ஓட்டுவித்தியாசத்தில் தோற்கடித்தார்.
சென்னுக்கு ஆதரவாக 18,058 ஓட்டுகளும், டமிக்கு ஆதரவாக 18,271 ஓட்டுகளும் கிடைத்தன.காஷ்மீர் தொடர்பான தொழிலாளர் கட்சியின் நிலைப்பாட்டை கண்டித்து, அக்கட்சிக்கு எதிராக , பிரிட்டனில் வசிக்கும் 15 லட்சம் இந்திய வம்சாவளியினர் சமூக வலைதளங்களில் பிரசாரம் செய்தனர்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X