அமித்ஷாவின் வடகிழக்கு மாநில பயணங்கள் ரத்து

Updated : டிச 13, 2019 | Added : டிச 13, 2019 | கருத்துகள் (47)
Advertisement

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மேகாலயா மற்றும் அருணாச்சல பிரதேச பயணங்கள் ரத்து செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது.


மத்திய உள்துறை அமைச்சரான அமித்ஷா இரண்டு நாட்கள் அரசு பயணமாக (டிச.,15 மற்றும் டிச.,16) மேகாலயா மற்றும் அருணாச்சல பிரதேச மாநிலங்களுக்கு பயணம் செய்ய திட்டமிட்டிருந்தார். அதன்படி மேகாலயா மாநிலம் ஷில்லாங்கிற்கு அருகில் உள்ள போலீஸ் அகாடமியில் பாசிங் அவுட் அணிவகுப்பு நடக்கிறது. டிச.,15 அன்று இந்த அணிவகுப்பிலும் டிச.,16ல் அருணாச்சல பிரதேசத்தில் உள்ள தவாங்கில் ஒரு நிகழ்ச்சியிலும் அமித்ஷா பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது வட மாநிலங்களில் குடியுரிமை சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. வடகிழக்கு மாநிலங்களின் நுழைவு வாயிலாக அசாம் கருதப்படுகிறது. அசாமில் பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் போராட்டங்கள் மற்றும் வன்முறைகளைக் கட்டுப்படுத்த இராணுவம் பல மாவட்டங்களில் கொடி அணிவகுப்புகளையும் நடத்தியுள்ளது. கடந்த இரண்டு நாட்களில் ஷில்லாங்கில் பல வாகனங்கள் மற்றும் கடைகளை எதிர்ப்பாளர்கள் எரித்தனர்.

இதனால் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமித்ஷாவின் பயணம் ரத்து செய்யப்பட்டதாக மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன. பயணம் ஒத்திவைக்கப்பட்டதற்கான காரணம் அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிக்கப்படவில்லை.

அதேபோல், கவுகாத்தியில் நடைபெறவிருந்த உச்சி மாநாட்டில் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேயின் இந்தியா வர திட்டமிட்டிருந்தார். குடியுரிமை சட்ட மசோதா குறித்த போராட்டங்களால் பாதுகாப்பு கருதி அவரது பயணமும் ஒத்தி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (47)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
14-டிச-201917:08:12 IST Report Abuse
பச்சையப்பன் ஆஹா ஆஹா ஆஹா!! இதுவே எங்கள் இளவரசர் RAWKUL க்கு கிடைத்த மாபெரும் வெற்றி. அடுத்த ஆட்சி நமதே!!. அடுத்த முறை இந்திக்கார பீடாவாயன்கள் சரியாக அமுக்குவார்கள்..
Rate this:
Share this comment
Cancel
ganesh - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
14-டிச-201913:42:51 IST Report Abuse
ganesh In world India is the country the people 20% of hindu who supports illegal activities and screw other 80%of Hindu..how they supported mugals and British to kill their own people. Moreover amitsha of trip is good one to avoid unwanted things further.However lion always hide to attack.None of the line attack directly.
Rate this:
Share this comment
Cancel
Anand - chennai,இந்தியா
14-டிச-201913:07:43 IST Report Abuse
Anand அடடா...... மூர்க்கனுங்க என்னமா கருத்தை பதிவிட்டு அவனுங்களுக்குள்ளேயே சந்தோஷப்பட்டுக்கிறானுங்க
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X