டில்லியில் போலீசாருடன் மாணவர்கள் மோதல்

Updated : டிச 13, 2019 | Added : டிச 13, 2019 | கருத்துகள் (25)
Advertisement
Delhi, JamiaStudents, CitizenshipAct, CAB, Protest, டில்லி, ஜாமியா, பல்கலை, மாணவர்கள், போராட்டம், போலீஸ், மோதல்

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பார்லி., வளாகத்தை முற்றுகையிட முயன்ற ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலை., மாணவர்கள், போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். அப்போது, போலீசாருடன் மோதலில் ஈடுபட்ட 50 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

குடியுரிமை திருத்த சட்டம் இரு அவைகளிலும் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. இதனை எதிர்த்து அசாம், மேற்குவங்கம், டில்லி உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டம் வெடித்தது. போராட்டத்தை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக துணை ராணுவத்தினர் வரவழைக்கப்பட்டனர். இந்நிலையில், டில்லியில், ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலை.,யை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பார்லி.,யை முற்றுகையிட முயன்று பேரணியில் ஈடுபட்டனர்.





டில்லி போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது ஏற்பட்ட வன்முறையில், மாணவர்கள், போலீசார் மீது தாக்கியதாக கூறப்படுகிறது. போலீசார் தரப்பில் கண்ணீர் புகைக்குண்டுகள் வீசப்பட்டன. மாணவர்கள் சிலர், போலீசார் மீது கற்களை வீசினர். போலீசாருடன் மோதலில் ஈடுபட்டதாக 50 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் பதர்பூர் காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.

Advertisement




வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
blocked user - blocked,மயோட்
14-டிச-201907:40:11 IST Report Abuse
blocked user இவர்கள் படித்து பெற்றோர் முதற்கொண்டு யாருக்கும் பயன் இல்லை, ஆகவே இவர்களை மொத்தமாக வீட்டுக்கு அனுப்பி கூலி வேலை செய்ய அனுப்பவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
sekar ng -  ( Posted via: Dinamalar Android App )
14-டிச-201907:19:02 IST Report Abuse
sekar ng அரசு உதவிபெறும் தேசத்ரோகி மாணவர்கள்.
Rate this:
Share this comment
Cancel
14-டிச-201900:32:29 IST Report Abuse
நக்கல் CABஐ விட ஒரு பெரிய குண்டாக எதையாவது இப்பொழுது போடப்போகிறார் ஷா... அப்போ எல்லோரும் இதுவே தேவலை என்று அடங்கப்போகிறார்கள்.... இது நடக்கும்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X