பெண்கள் பாதுகாப்பிற்கு திஷா சட்டம்; ஆந்திராவில் நிறைவேற்றம்

Updated : டிச 13, 2019 | Added : டிச 13, 2019 | கருத்துகள் (3)
Advertisement

ஐதராபாத் : ஆந்திர சட்டசபையில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை குறைப்பதற்கும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு அளிப்பதற்கும் அம்மாநில அரசு 2 புதிய சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.






ஐதராபாத்தில் பெண் டாக்டர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதை கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்தன. இதையடுத்தும் பல்வேறு பாலியல் வன்முறைகளும் பலாத்காரம் போன்ற கொடுமைகளும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. எனவே பெண்கள் மற்றும் குழந்தைகளை பாலியல் பிரச்னைகளிலிருந்து பாதுகாக்கவும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்குவது குறித்தும் ஆந்திர மாநில சட்டசபையில் 2 புதிய சட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. பெண்களுக்கு எதிரான குறிப்பிட்ட குற்றங்களில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்குவதையும், குற்றம் செய்த 21 நாட்களுக்குள் இதுபோன்ற வழக்குகளில் விசாரணையை விரைவுபடுத்துவதையும் இந்த சட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.




ஆந்திர மாநில திஷா சட்டம் - பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குறிப்பிட்ட குற்றங்களுக்கான ஆந்திர சிறப்பு நீதிமன்றங்கள் 2019, மற்றும் ஆந்திர திஷா சட்டம் - குற்றவியல் சட்டம் (ஆந்திர திருத்தம்) 2019 ஆகிய இரண்டு மசோதாக்களை சட்டமன்றம் ஏகமனதாக நிறைவேற்றியது. முன்னதாக இந்த சட்டங்களை மாநில உள்துறை அமைச்சர் சுச்சாரிதா அறிமுகப்படுத்தினார்.





மசோதாவின் உள்ளடக்கங்களைப் படிக்கும் போது முதல்வர் ஜெகன் கூறுகையில்,
“சம்பவம் நடந்ததிலிருந்து, நான் கலக்கம் அடைந்தேன். எனது அமைச்சரவை சகாக்கள், எனது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுடன் பல நாட்களாக கலந்துரையாடி வருகிறேன். நான் யோசிக்கத் தொடங்கினேன், மிருகங்களாக மாறிய ஆண்களால் மகள் துன்புறுத்தப்பட்டு கொல்லப்பட்ட ஒரு தந்தையாக நான் இருந்தால், நான் எப்படி நடந்துகொள்வேன்? இதுபோன்ற குற்றங்கள் நம் மாநிலத்தில் நடக்காது என்பதை உறுதிப்படுத்த விரும்புகிறேன், அதனால்தான் இந்த சட்டத்தை நாங்கள் கொண்டு வந்துள்ளோம்,” என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.Baliah Seer - Chennai,இந்தியா
13-டிச-201923:08:14 IST Report Abuse
S.Baliah Seer எங்கள் பகுதியில் குடியிருப்பு சாலையில் ஒரு சிறுவன் பைக் மோதி உயிரிழந்தான்.அடுத்த நாளே அந்த இடத்தில் வேகத்தடை போட்டார்கள்.அந்த வேகத்தடை முறைப்படி போடப்படவில்லை.ஒரு மாதம் கழித்து அந்த வேகத்தடை காணாமல் போய்விட்டது.இந்த சட்டங்களும் அது போலத்தான்.
Rate this:
Share this comment
Cancel
M.Guna Sekaran - Madurai,இந்தியா
13-டிச-201922:17:13 IST Report Abuse
M.Guna Sekaran சூப்பர் குற்றவாளி பக்கத்து மாநிலத்துக்கோ வெளிநாட்டுக்கோ ,இல்லை பணத்துக்காக வேறு நபர் ஒப்புக்கு கொண்டல் என்ன செய்யும் அரசு ,மத்திய அமைச்சரும் சேர்த்து கொண்டாள் ........
Rate this:
Share this comment
Cancel
Krishna - bangalore,இந்தியா
13-டிச-201922:08:32 IST Report Abuse
Krishna There are Too Many False Cases (atleast 50%) & Extreme Harassments in India especially against Men With “Always Adverse Anti-Men Propaganda & Actions” by News Hungry Media, Case Hungry Police & Courts, Vested “AntiMen & Women Fanatics” & Vote-Hungry Politicians which are Grave Misuses-Terrorism Against Constitutional Guarantees of Fundamental Rights. Hence, Media-Police- Rulers-Courts Not Punishing Such False Complainants, Must Be Stripped of Citisenship & Banned from Any Public-Social Services Being Anti-People & as People are Losing Faith. Anti-Men Parties Must Remember that Men-folk are already Uniting & Acting-Remember that Congress was Defeated Just Because of Its Anti-Men Pro women Laws-Rules Etc & Not Because of Corruption etc as Every Parties are Cheap & Dirty incl. Heavy Corruption).
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X