எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

வனத்துறைக்கு ரூ.13 கோடி ஒதுக்கீடு

Updated : டிச 14, 2019 | Added : டிச 13, 2019
Advertisement
 வனத்துறைக்கு ரூ.13 கோடி ஒதுக்கீடு

தமிழகத்தில், 71 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தில், வனத்துறையின் பங்காக, ஏழு லட்சம் நாற்றுகளை உருவாக்க, 13 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதன் முதல் தவணையாக, 6.7 கோடி ரூபாயை விடுவிக்க, அரசு உத்தரவிட்டுள்ளது.மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின், 71வது பிறந்த நாளை முன்னிட்டு, தமிழகம் முழுவதும், 71 லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கான திட்டம் அறிவிக்கப்பட்டது. ஜெயலலிதா பிறந்த நாளான, பிப்., 24ல், இத்திட்டம் துவக்கப்பட்டது.வனத்துறை சார்பில், ஏழு லட்சம்; ஊரக வளர்ச்சி துறை சார்பில், 64 லட்சம் மரக்கன்றுகளை நட, முடிவு செய்யப்பட்டது.

இதன்படி, வனத்துறையின் பங்கான, ஏழு லட்சம் மரக்கன்றுகளுக்கான நாற்றுகளை உருவாக்க, வனத்துறை முடிவு செய்தது. இதற்கு, 15 கோடி ரூபாய் செலவாகும் என, மதிப்பிடப்பட்டது. இதில், 13 கோடி ரூபாய் வரை வழங்க, அரசு ஒப்புக் கொண்டது. இதில், முதல் தவணையாக, 6.7 கோடி ரூபாயை வனத்துறைக்கு விடுவிப்பதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை முதன்மை செயலர் ஷம்பு கல்லோலிகர் பிறப்பித்துள்ளார். இரண்டாவது தவணை தொகை, விரைவில் விடுவிக்கப்படும் என, தெரிகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X