டிரம்பின் விமர்சனத்துக்கு பதிலடி கொடுத்த கிரேட்டா

Updated : டிச 13, 2019 | Added : டிச 13, 2019 | கருத்துகள் (12)
Advertisement
டிரம்ப், விமர்சனம், பதிலடி, கிரேட்டா

இந்த செய்தியை கேட்க

லண்டன்: பருவநிலை மாற்றத்திற்கு எதிராக போராடி வரும் சுவீடனை சேர்ந்த கிரெட்டா துன்பெர்க், தன் மீதான அமெரிக்க அதிபர் டிரம்பின் விமர்சனத்துக்கு வித்தியாசமான முறையில் பதிலடி கொடுத்துள்ளார்.





ஆண்டுதோறும் சிறப்புமிக்கவர்களின் புகைப்படங்களை அட்டைப்படத்தில் வெளியிட்டு டைம் இதழ் பெருமைப்படுத்தி வருகிறது. அந்த வகையில் பருவநிலை மாற்றத்திற்கு எதிராக போராடிய சுவீடனை சேர்ந்த 16வது சிறுமி கிரேட்டா தன்பர்க்கின் படத்தை இந்த ஆண்டின் சிறந்த நபராக தேர்ந்தெடுத்த டைம் இதழ், 'இளைஞர்களின் சக்தி' என அட்டையில் வெளியிட்டு கவுரவப்படுத்தியது. இதற்கு பலரும் தொடர்ந்து கிரேட்டாவிற்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில், கிரேட்டாவிற்கு அளிக்கப்பட்ட கவுரவத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப், விமர்சித்துள்ளார்.





டிரம்ப் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், இது அபத்தமானது. கிரேட்டா, தனது கோபத்தை கையாள்வது குறித்து செயலாற்ற வேண்டும். பின்னர், அவர் தனது நண்பருடன் இணைந்து நல்ல பழைய திரைப்படத்திற்கு செல்லுங்கள், என பதிவிட்டிருந்தார். டிரம்பின் இந்த பதிவிற்கு பலரும் விமர்சனத்தை பதிவிட்டாலும், கிரேட்டா, வேறு விதமாக பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பயோ என்னும் சுயவிவரத்தில் கிரேட்டா பதிவிட்டுள்ளதாவது: இளம்பருவப் பெண், தனது கோபத்தை கையாள்வது குறித்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறாள். தற்போது, தனது நண்பருடன் நல்ல பழைய படத்தை பார்த்துக்கொண்டிருக்கிறாள், என பதிவிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
15-டிச-201906:41:14 IST Report Abuse
Natarajan Ramanathan ஒரு பெண்சிங்கம் பல நரிகளை ஊளையிட வைத்துக் கொண்டிருந்தது...... தமிழர் நீதிக்கு எப்போதும் ஜெ. நினைப்பு.
Rate this:
Share this comment
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
14-டிச-201920:37:19 IST Report Abuse
Natarajan Ramanathan இந்த கிரேட்டா பேசியது அபத்தமாகவே இருந்தது. அப்படி கொண்டாட பெரிதாக ஒன்றுமில்லை.
Rate this:
Share this comment
Cancel
Subramanian Arunachalam - CHENNAI,இந்தியா
14-டிச-201920:06:48 IST Report Abuse
Subramanian Arunachalam இந்த பெண் ஓரு அராத்து போல் நடக்கிறது .நம் தமிழ் நாட்டில் உள்ள பல பெண் அராத்துகளுடன் கூட்டணி அமைத்து சபரி மலைக்கு செல்லலாம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X