குடிசை மாற்று வாரிய பணிகள் ஆய்வு: துணை முதல்வர் ஆய்வு

Added : டிச 13, 2019
Advertisement
சென்னை: தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின், வீட்டுவசதி திட்டப் பணிகள் குறித்து, துணை முதல்வர் பன்னீர்செல்வம், நேற்று ஆய்வு செய்தார்.சென்னை, பெருநகர் வளர்ச்சிக் குழும அலுவலக கூட்டரங்கில், குடிசை மாற்று வாரியம் ஆய்வுக் கூட்டம், நேற்று நடந்தது. துணை முதல்வர் பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். பிரதமரின், அனைவருக்கும் வீடு திட்டத்தின்கீழ், கட்டி முடிக்கப்பட்டு உள்ள

சென்னை: தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின், வீட்டுவசதி திட்டப் பணிகள் குறித்து, துணை முதல்வர் பன்னீர்செல்வம், நேற்று ஆய்வு செய்தார்.

சென்னை, பெருநகர் வளர்ச்சிக் குழும அலுவலக கூட்டரங்கில், குடிசை மாற்று வாரியம் ஆய்வுக் கூட்டம், நேற்று நடந்தது. துணை முதல்வர் பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். பிரதமரின், அனைவருக்கும் வீடு திட்டத்தின்கீழ், கட்டி முடிக்கப்பட்டு உள்ள வீடுகள், முன்னேற்றத்தில் உள்ள வீடுகள் குறித்து, அதிகாரிகளுடன், அவர் ஆலோசனை நடத்தினார்.

பயனாளிகள் தாமாக வீடு கட்டும் திட்டம் குறித்தும் கேட்டறிந்தார். திட்டப் பணிகளை, விரைவாக செயல்படுத்த, துரித நடவடிக்கை எடுக்கும்படி, அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.ஆய்வுக் கூட்டத்தில், வீட்டுவசதித் துறை முதன்மை செயலர் ராஜேஷ் லக்கானி, சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமத்தின் உறுப்பினர் செயலர் மற்றும் குடிசை மாற்று வாரிய மேலாண் இயக்குனர் கார்த்திகேயன், வீட்டுவசதி வாரிய செயலர் கணேசன் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X