சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கணவனை கொன்ற மனைவி கைது

Added : டிச 13, 2019 | கருத்துகள் (7)
Share
Advertisement
நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே, கணவனை கொன்று நாடகமாடிய மனைவியை, போலீசார் கைது செய்தனர்.நாகர்கோவில் அருகே கரியமாணிக்கபுரத்தைச் சேர்ந்தவர், அய்யப்பன், 52; தச்சு தொழிலாளி. மது பழக்கம் உண்டு. இவரது மனைவி கிருஷ்ணவேணி, 45; இரண்டு மகள்கள் உள்ளனர்.தன் உறவினருக்கு, மூத்த மகளை திருமணம் செய்து கொடுக்க, அய்யப்பன் முடிவு செய்தார். ஆனால், மூத்த மகள், வேறு ஒருவரை காதல் திருமணம் செய்து
 கணவனை கொன்ற மனைவி கைது

நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே, கணவனை கொன்று நாடகமாடிய மனைவியை, போலீசார் கைது செய்தனர்.

நாகர்கோவில் அருகே கரியமாணிக்கபுரத்தைச் சேர்ந்தவர், அய்யப்பன், 52; தச்சு தொழிலாளி. மது பழக்கம் உண்டு. இவரது மனைவி கிருஷ்ணவேணி, 45; இரண்டு மகள்கள் உள்ளனர்.தன் உறவினருக்கு, மூத்த மகளை திருமணம் செய்து கொடுக்க, அய்யப்பன் முடிவு செய்தார். ஆனால், மூத்த மகள், வேறு ஒருவரை காதல் திருமணம் செய்து கொண்டார். கல்லுாரியில் படிக்கும் இரண்டாவது மகளை, உறவினருக்கு திருமணம் செய்து கொடுக்க முயன்றார்; அவரும் ஒப்புக் கொள்ளவில்லை.

இதனால், தினமும் வீட்டில் தகராறு செய்து வந்தார். நேற்று முன்தினம் ஏற்பட்ட தகராறில், அய்யப்பன்கட்டையால் மனைவியை அடிக்க முயன்றார். அதை பறித்து, அவர் திருப்பி அடித்ததில், தலையில் பலத்த காயம் ஏற்பட்டு இறந்தார்.பின், யாரோ கணவரை கொலை செய்து விட்டதாக, கிருஷ்ணவேணி நாடகமாடினார். ஆனால், போலீஸ் விசாரணையில் உண்மையை ஒப்புக் கொண்டதை அடுத்து, கைது செய்யப்பட்டார்.

Advertisement


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
20-டிச-201916:23:04 IST Report Abuse
Lion Drsekar ஸ்வர்கம் என்றால் என்ன நரகம் என்றால் என்ன என்றால் திருமணம் செய்துகொள் என்பார்கள்? வந்தே மாதரம்
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
19-டிச-201909:38:35 IST Report Abuse
Bhaskaran கொலையும் செய்வாள் பத்தினி. தமிழ்நாட்டில் அடிக்கடி நிரூபிக்க படுகிறது
Rate this:
Rajesh - Chennai,இந்தியா
20-டிச-201902:01:16 IST Report Abuse
Rajeshகுடிக்கும் மனநோயாளிகளினால், பத்தினிகள் கொலையும் செய்ய துணிகிறார்கள். யார் கண்டார் அந்த கணவன் [கயவன்] குடித்துவிட்டு சொந்தக்குழந்தைகளுக்கே பாலியல் தொல்லை கொடுத்திருக்கலாம்.........
Rate this:
Sivak - Chennai,இந்தியா
20-டிச-201920:47:22 IST Report Abuse
Sivakஅடேய் ஒருத்தி கொலை பண்ணிட்டு பொய் வேற சொல்லிருக்கா? அவளை விட்டுட்டு அவன் குடிகாரன் .. வயசான குழந்தைகளை பாலியல் தொல்லை குடுத்தான் .. அப்படி செய்தில இல்லாததை எல்லாம் நீங்களெல்லாம் குவாட்டர் அடிச்சிட்டு கருத்து வாந்தி எடுக்கீறீங்க... ஒரு ஆம்பள நல்லவனாவே இருக்க மாட்டானா ? பொம்பளைங்க எல்லாரும் நல்லவங்களா ?? தூ நீங்களெல்லாம் என்ன ஜென்மம் ......
Rate this:
Cancel
மூல பத்திரம் - ரோம், ,இத்தாலி
16-டிச-201917:58:51 IST Report Abuse
மூல பத்திரம் பாவம் அந்த பெண் குழந்தை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X