சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சேலத்தில் ஓடும், 'ஸ்கூட்டி'க்கு சென்னை போலீஸ் அபராதம்

Updated : டிச 14, 2019 | Added : டிச 13, 2019 | கருத்துகள் (5)
Advertisement
 சேலத்தில் ஓடும், 'ஸ்கூட்டி'க்கு சென்னை போலீஸ் அபராதம்

சேலம்: சென்னையில், 'ஹெல்மெட்' அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டியதாக, சேலத்தில் ஓடும், 'ஸ்கூட்டி'க்கு, போலீசார் அபராதம்விதித்து, கடிதம் அனுப்பியுள்ளனர்.

சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டியைச் சேர்ந்த பாலாஜியின் மனைவி கார்த்திகா, 36. ஆசிரியர் பயிற்சி முடித்து, வீட்டில் இருந்து வரும் இவர், 'ஸ்கூட்டி பெப்' இருசக்கர வாகனத்தை பயன்படுத்துகிறார்.இவருக்கு, சில நாட்களுக்கு முன், சென்னை, மணலி போக்குவரத்து போலீஸ் எஸ்.ஐ., ஒரு கடிதம் அனுப்பினார். அதில், 'கடந்த, 3ம் தேதி, மணலி, 200 அடி சாலையில், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியதால், உங்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. 'அதற்கான அபராதம், 100 ரூபாயை, குறிப்பாணை பெற்ற, 24 மணி நேரத்தில் செலுத்த வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைப் பார்த்து, கார்த்திகா உள்ளிட்ட குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.

கார்த்திகா குடும்பத்தினர் கூறியதாவது:நாமக்கல் மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட ஸ்கூட்டியை, மூன்று ஆண்டுகளுக்கு முன், வேறு ஒருவரிடம் வாங்கினோம். பின், கார்த்திகா பெயருக்கு மாற்றி, சேலம் மாவட்டத்தில் தான் ஓட்டி வருகிறார்.இந்த ஸ்கூட்டரை, சென்னைக்கு எடுத்துச் சென்றதில்லை. எங்கள் வாகனத்தின் பதிவெண்ணை பயன்படுத்தி, வேறு வாகனம் இயக்கப்படுகிறதா என, சந்தேகம் எழுகிறது.இது குறித்து, போலீசார் விசாரிக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
14-டிச-201912:04:39 IST Report Abuse
Bhaskaran காவல் துறையின் உள்ளாடை கிழியுது
Rate this:
Share this comment
Cancel
14-டிச-201907:42:55 IST Report Abuse
ஆப்பு சும்மாவா? ஸ்காட்லாந்து யார்டு போலூசில்லே... கைலாசத்துல ஸ்கூட்டி ஓடுனாலும் அபராதம் சென்னையிலிருந்தே வசூலிப்பாங்க.
Rate this:
Share this comment
Cancel
chennai sivakumar - chennai,இந்தியா
14-டிச-201907:20:16 IST Report Abuse
chennai sivakumar Recently i had been to Rajasthan,jaipur, Udaipur,Jaisalmer, Jodhpur, Ajmer etc. Except for some pwrsonsin Jaipur ( probably capital of Rajasthan) all other places no one, i repeat no one was wearing the helmet. I stood in a prominent spot say like Mount road and observed for 1 hour in the peak traffic. Result is zero. I felt our police is too strict ( though it is their job). One india one rule doesn't apply?
Rate this:
Share this comment
atara - Pune,இந்தியா
18-டிச-201909:07:17 IST Report Abuse
ataraThis is also based on per hour based Road accident case The place you marked are Tyre 3 Cities , the Traffic Density based Road accident increases. Have your seen Begges in the places in local bus , comparing to Chennai when you travel in Trains. So compare Metro city vs your local home in Village....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X