அரசியல் செய்தி

தமிழ்நாடு

'மலேஷிய தமிழர்களுக்காக தி.மு.க., குரல் கொடுக்கும்': ஸ்டாலின்

Updated : டிச 15, 2019 | Added : டிச 13, 2019 | கருத்துகள் (77)
Share
Advertisement
Stalin, Malaysia,திமுக, குரல், தமிழர், கருணாநிதி, மரியாதை, ஸ்டாலின்

சென்னை; ''மலேஷிய தமிழர்களுக்கு, எந்த பிரச்னை களாக இருந்தாலும், நாங்கள் முதல் குரல் கொடுப்போம்,'' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பேசினார்.

கவிஞர் வைரமுத்து ஏற்பாட்டில், மலேஷியஎழுத்தாளர் சங்கத் தலைவர் ராஜேந்திரன் தலைமையில், தமிழ் படைப்பாளிகள், 40 பேர், சென்னை, அறிவாலயத்தில், ஸ்டாலினை நேற்று சந்தித்தனர்.அவர்கள் அனைவருக்கும், 'நிறைந்து வாழும் கலைஞர் நினைவு மலர்' என்ற புத்தகத்தை, நினைவுப் பரிசாக, ஸ்டாலின் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், ஸ்டாலின் பேசியதாவது:கருணாநிதி, மலேஷிய நாட்டில் உள்ள தமிழர்களுக்கு, எப்படி பக்கபலமாக இருந்தாரோ, அவர் வழியில், நானும் என்றைக்கும், உங்களுக்கு பக்கபலமாக இருப்பேன். உங்களுக்கு ஏற்படக்கூடிய, எந்த பிரச்னையாக இருந்தாலும், அதற்கு முதல் குரல் கொடுக்கும் கட்சியாக, தி.மு.க., இருக்கும். ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும், எப்படி மக்கள் பணி ஆற்றுவதில், தி.மு.க., ஒரு முன்னோடியாக இருக்கிறதோ, அதுபோல், உலகெங்கும் உள்ள தமிழர்களுக்காக, நாங்கள் துணை நிற்போம்.

ஒரு நாளைக்கு, 10 ஆயிரம் பேர், சென்னை, மெரினாவில் உள்ள, கருணாநிதி நினைவிடத்திற்கு வந்து,மரியாதை செலுத்தி வருகின்றனர்.இதுவரைக்கும் எந்த தலைவருக்கும், இப்படிஒரு சிறப்பு இருந்ததில்லை. அவர் மறைந்தாலும், நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (77)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.V.SRINIVASAN - Chennai,இந்தியா
18-டிச-201912:26:17 IST Report Abuse
S.V.SRINIVASAN இலங்கை தமிழர்களுக்கு குரல் கொடுத்து லட்ச கணக்கான இலங்கை தமிழர்களை கொன்று குவித்தாகி விட்டது. அடுத்து மலேசியா தமிழர்கள். அவர்களை விட்டுடுப்பா.
Rate this:
Cancel
TAMILAN - new jerssy,யூ.எஸ்.ஏ
15-டிச-201923:30:43 IST Report Abuse
TAMILAN தமிழ் நாட்டு மக்கள் பணத்தில் உண்டான தமிழர் அண்ணா வளர்த்த கட்சியை குடும்ப கட்சி ஆக்கியது மட்டுமில்லாமல் தனது இனமான தெலுங்கர்களுக்கு முக்கியத்துவம் குடுத்து விட்டு , இலங்கை தமிழர்களை கொன்று விட்டு , தமிழ் தலைவர் பிரபாகரன் வெற்றி பெற்றால் தமிழர்கள் தலைநிமிர்ந்து விடுவார்கள் என்றும், பிரபாகரனைப்பார்த்து தமிழர்கள் பெருமை கொள்வார்கள் , தமிழ் தேசியம் மலர்ந்தால் தெலுங்கர்கள் நாம் தமிழ் நாட்டில் தமிழர் போல் நடித்து காலத்தை ஓட்ட முடியாது என்றும் தெரிந்து கொண்டு பிரபாகரனுடன் சேர்த்து அப்பாவி தமிழர்களை கொன்ற நீங்கள். அடடா என்னே நடிப்பு.
Rate this:
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
15-டிச-201905:56:17 IST Report Abuse
meenakshisundaram அப்போ அமெரிக்காவில் உள்ள தமிழர்களுக்கு யார் குரல் கொடுப்பானுங்க?-பரிசுத்த 'பொழுது போக்கு 'அரசியல்னா அது இதுதான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X