கோர்ட் செய்தி

தமிழ்நாடு

மகாபாரதம் சர்ச்சை கருத்து: வழக்கு ரத்து கோரி கமல் மனு உயர்நீதிமன்றம் ஒத்திவைப்பு

Updated : டிச 15, 2019 | Added : டிச 13, 2019 | கருத்துகள் (19)
Advertisement
மகாபாரதம் சர்ச்சை கருத்து: வழக்கு ரத்து கோரி கமல் மனு உயர்நீதிமன்றம் ஒத்திவைப்பு

மதுரை : மகாபாரதம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக வள்ளியூர் நீதிமன்றத்தில் தனக்கு எதிராக தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக்கோரி கமல் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஒத்திவைத்தது.

கமல் பேட்டி 2017 மார்ச் 12ல் ஒரு 'டிவி'யில் ஒளிபரப்பானது. அதில் பெண்களுக்கு எதிராக, குறிப்பாக திரையுலகில் உள்ள பெண்களுக்கு எதிராக வன்முறை அதிகரித்துள்ளதே என கேள்வி இடம் பெற்றது.அதற்கு கமல், 'எங்கே இருந்து வந்தது இதுன்னா..., ஏன் மகாபாரதத்தில் பெண்ணை வைத்து சூதாடியதை புத்தகமாக படித்துக் கொண்டிருக்கும் இந்த ஊரில் அது நிகழ்வதில் ஆச்சரியமில்லை' என்றார்.

இதுகுறித்து திருநெல்வேலி மாவட்டம் பழவூர் ஆதிநாதசுந்தரம் வள்ளியூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:பேட்டி மூலம் கமல், 'நான் ஒரு கடவுள் மறுப்பாளர். ஹிந்து மத பழக்கவழக்கங்களுக்கு எதிரானவர்' என கூறியுள்ளார். சம்பந்தமின்றி மகாபாரதத்தை இழிவுபடுத்த வேண்டும் என்ற தவறான நோக்கில், பிறரின் மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாக கருத்து தெரிவித்துள்ளார். மகாபாரதம் இந்தியாவின் இருபெரும் காப்பியங்களில் ஒன்று. அதை லட்சக்கணக்கானோர் வாழ்வியல் பாடமாக பேற்றி, பின்பற்றுகின்றனர்.

கமலுக்கு உரிய தண்டனை விதித்து, எனக்கு இழப்பீடு வழங்கவும், இவ்வழக்கின் தன்மைக்கு ஏற்ப இதர பரிகாரம் கிடைக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு ஆதிநாதசுந்தரம் மனு செய்தார். கமல், 'அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள பேச்சு சுதந்திரத்திற்குட்பட்டே கருத்தை வெளிப்படுத்தினேன். எவ்வித உள்நோக்கமும் இல்லை. யாரையும் புண்படுத்தும் வகையில் கருத்து தெரிவிக்கவில்லை.

என் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும். வள்ளியூர் நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து விலக்களிக்க வேண்டும். உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளவரை, கீழமை நீதிமன்ற விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்' என உயர்நீதிமன்றக் கிளையில் 2017 ல் மனு தாக்கல் செய்தார்.2017 மே 4 ல் தனிநீதிபதி, 'மனுதாரருக்கு எதிரான கீழமை நீதிமன்ற விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. மனுதாரர் கீழமை நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து விலக்களிக்கப்படுகிறது' என உத்தரவிட்டார்.

நேற்று நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார்.கமல் தரப்பில்,'பட்டிமன்றம் உட்பட பல்வேறு பொது விவாதங்களில் மகாபாரதம் குறித்து பேசப்படுகிறது. மகாபாரதத்தை இழிவுபடுத்தும் வகையில் பேசவில்லை,'' என தெரிவிக்கப்பட்டது.ஆதிநாதசுந்தரம் தரப்பில், 'கமலின் கருத்தில் உள்நோக்கம் உள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில் கவனம் தேவை' என தெரிவிக்கப்பட்டது. மேலும் வாதிட அவகாசம் அளித்து விசாரணையை ஜனவரி முதல் வாரத்திற்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

Advertisement


வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
16-டிச-201916:42:29 IST Report Abuse
Endrum Indian எலே படித்ததை அப்படியே அர்த்தம் கொள்பவன் அறிவிலி அவன் ஈ வே ரா வழியில் செல்பவன் இதுக்குத்தான் நல்ல குருவிடம் பயில வேண்டும் என்று சொல்வது. வெறும் புத்தகத்தை படித்தது அதில் உள்ள அர்த்தத்தை அப்படியே கொள்வது அறிவீனம் அதுவும் நம்ம இதிகாச , புராண, உபநிஷத்துக்கள். சூரியன் உறவு கொண்டு குந்தி கர்ணனனை பெற்றாள். இதுக்கு ஈ வே ரா மாதிரி ஆட்கள் உடனே என்ன சொல்லும் என்ன பாலியல் கொடுமை அந்த காலத்தில்????அதன் உள் அர்த்தம் உணர். இவ்வளவு பெரிய உலகிலேயே முதன்மை என்று சொன்னவருடன் திருமணத்திற்கு முன்னே உடல் உறவு ??? தவறு புரிந்து அந்த குழந்தையை ஆறில் விடுதல்???அந்த குழந்தை அனாதையாக இருத்தல் ............ஆகவே நல்ல விதமாக இல் வாழ்க்கை நடத்து நல்லதே நடக்கும். இது தான் அதன் உயரிய அர்த்தம். இப்பாய்டு இதிகாச புராண உபநிஷத்துகளில் சொன்னதை அப்படியே எடுத்துக் கொள்ளாமல் அதில் புதைந்து கிடைக்கும் உண்மையை அறிய வேண்டும் என்று சொல்வது ......"எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு" திருக்குறளை அறியாதவர்கள் எல்லாம் வெறும் உளறுவாயர்கள்.
Rate this:
Share this comment
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
15-டிச-201906:00:00 IST Report Abuse
meenakshisundaram இந்த 'ஹிந்து மற்றும் பிராமண எதிர்ப்பாளர்கள் (இப்படி ஒரு கூட்டமே இருக்கு ) எதையுமே அரையும் குறையுமா படிச்சுட்டு புரிஞ்சிக்க வேண்டியதை புரிஞ்சுக்காமே வேறு எதையோ புரிஞ்சிக்கின்னு கூவுவதுதான் வேடிக்கை.ஆமா இவங்க எதுக்கு எதுக்கெடுத்தாலும் உதாரணமா புராணங்களை காட்டுறாங்கோ?
Rate this:
Share this comment
Cancel
14-டிச-201921:59:44 IST Report Abuse
kulandhai Kannan முரண்பாடுகளின் மொத்த உருவம் கமல். தன் மகள்களுக்கு ஸ்ருதி, அக்ஷரா என்று பெயர் வைத்துவிட்டு , இளவேனில் என்ற விளையாட்டு வீராங்கனைக்கு தூய தமிழ் பெயர் வைத்ததற்கு அவரின் பெற்றோரை பாராட்டுவார். வாயை திறந்தாலே உளறல்தான்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X