பாலியல் வழக்குகளில் 14 நாளில் தண்டனை ஆந்திர சட்டசபையில் நிறைவேறியது மசோதா

Updated : டிச 15, 2019 | Added : டிச 13, 2019 | கருத்துகள் (8+ 5)
Advertisement
பாலியல் வழக்குகளில் 14 நாளில் தண்டனை  ஆந்திர சட்டசபையில் நிறைவேறியது மசோதா

அமராவதி : பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளை, 14 நாட்களுக்குள் விசாரித்து தண்டனை வழங்க வழி செய்யும் சட்ட திருத்த மசோதா, ஆந்திர சட்டசபையில், நேற்று நிறைவேறியது.

ஆந்திராவில், முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில், ஒய்.எஸ்.ஆர்.காங்., ஆட்சி நடக்கிறது.'என்கவுன்டர்'தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாதை சேர்ந்த, கால்நடை பெண் மருத்துவர், சமீபத்தில், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, எரித்து கொல்லப்பட்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நான்கு குற்றவாளிகள், சமீபத்தில், போலீஸ், 'என்கவுன்டரில்' சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளில், விசாரணையை விரைவாக முடித்து, தண்டனை வழங்க வழிசெய்யும் மசோதா, ஆந்திர சட்டசபையில் நேற்று நிறைவேறியது.இந்த புதிய மசோதாவுக்கு, கால்நடை பெண் மருத்துவரின் நினைவாக, 'ஆந்திர பிரதேச திஷா சட்டம்' என பெயரிடப்பட்டுள்ளது.இந்த சட்ட திருத்தத்தின்படி, பாலியல் குற்றங்களில், வழக்குப்பதிவு செய்யப்பட்ட நாளில் இருந்து, ஏழு வேலை நாட்களுக்குள், போலீஸ் விசாரணை நடத்தி முடிக்கப்பட வேண்டும்.

அதன் பின், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நாளில் இருந்து, 14 வேலை நாட்களுக்குள், நீதிமன்ற விசாரணை முடிவடைந்து, தீர்ப்பு வழங்கப்பட வேண்டும்.தீர்ப்பை எதிர்த்து செய்யப்படும் மேல்முறையீட்டு மனு மீது, ஆறு மாதங்களுக்குள் இறுதி தீர்ப்பு அளிக்கவும், இந்த மசோதா வகை செய்கிறது.


அதிகாரம்


மேலும், பாலியல் வழக்குகளை விசாரிக்க, மாவட்டம் தோறும் கூடுதல் சிறப்பு நீதிமன்றங்கள் திறக்கவும், புதிதாக ஒரு மசோதா, நேற்று நிறைவேற்றப்பட்டது. இந்த வழக்குகளை விசாரிக்க, டி.எஸ்.பி., அந்தஸ்தில் உள்ள அதிகாரியின் தலைமையில், போலீஸ் குழுவை உருவாக்கவும், புதிய மசோதா அதிகாரம் அளிக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து (8+ 5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
14-டிச-201911:40:05 IST Report Abuse
Lion Drsekar மக்களுக்கு நல்லது செய்தால் உச்சநீதிமன்றம் செல்வார்கள் ? வந்தே மாதரம்
Rate this:
Share this comment
Cancel
svs - yaadum oore,இந்தியா
14-டிச-201909:35:55 IST Report Abuse
svs ரௌடிகள் மந்திரிகளாய் உலா வரும் நாட்டில் இந்த சட்டம் செல்லாததுதான் ...மக்கள் திருந்தும் வரை விடிவு காலம் கிடையாது .....
Rate this:
Share this comment
Cancel
blocked user - blocked,மயோட்
14-டிச-201908:41:43 IST Report Abuse
blocked user வேகமாக விசாரிப்பதை விட விவேகமாக விசாரிக்க வேண்டும். பாலியல் குற்றவாளிகளை வெளியே விடக்கூடாது. பாதிக்கப்பட்டவர்களுக்கு திரும்பவும் பிரச்சினை கொடுத்தால் சாகும் வரை தூக்கில் தொங்கவைக்கப்படுவார்கள் என்பதை உறுதி செய்யவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X