குடியுரிமை மசோதாவிற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு!

Updated : டிச 15, 2019 | Added : டிச 13, 2019 | கருத்துகள் (10+ 115)
Advertisement
குடியுரிமை மசோதாவிற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு!

புதுடில்லி : பார்லிமென்டில் நிறைவேற்றபட்ட குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக, காங்., - திரிணமுல் காங்., சார்பில், உச்ச நீதிமன்றத்தில் நேற்று மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் போன்ற அண்டை நாடுகளில் சிறுபான்மையினராக இருந்து, நம் நாட்டுக்கு அகதிகளாக வந்துள்ள ஹிந்து, சீக்கியர் உள்ளிட்ட மதத்தினருக்கு, இந்தியக் குடியுரிமை வழங்குவதற்கான மசோதா, பார்லிமென்டின் இரு சபைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதாவுக்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், நேற்று முன்தினம் இரவு ஒப்புதல் அளித்தார்.


எதிர்பார்ப்பு


இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, வடகிழக்கு மாநிலங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. பல இடங்களில் வன்முறை வெடித்துள்ளது. இந்நிலையில், இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்., சார்பில், அந்த கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், 'நம் நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தின், 14வது பிரிவில், 'எந்த ஒரு நபருக்கும் சட்டத்தின் கீழ் சமமான உரிமையோ, பாதுகாப்பையோ வழங்குவதற்கு, அரசு மறுக்கக்கூடாது' என, கூறப்பட்டு உள்ளது.

'ஆனால், இந்த சட்ட விதிகளை மீறி, குடியுரிமை சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இதை ரத்து செய்ய வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது. இதேபோல், திரிணமுல் காங்., - எம்.பி., மகுவா மொய்த்ராவும், குடியுரிமை மசோதாவுக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை, அவசரமாக விசாரிக்கும்படி கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. இந்த மனுக்கள், வரும், 16ல் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மம்தா எதிர்ப்பு


மசோதா குறித்து, திரிணமுல் காங்., தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி கூறுகையில், ''குடியுரிமை சட்ட திருத்த மசோதா, சமத்துவத்துக்கு எதிரானது. எந்த சூழ்நிலையிலும், மேற்கு வங்க மாநிலத்தில், இந்த மசோதாவை நடைமுறைப்படுத்த மாட்டோம்,'' என்றார்.


அதிகாரமில்லை


'குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை அமல்படுத்த முடியாது' என, எதிர்க்கட்சிகள் ஆளும் மேற்கு வங்கம், பஞ்சாப், கேரளா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநில அரசுகள் அறிவித்துள்ளன. இது குறித்து, மத்திய உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறியதாவது:அரசியலமைப்பின் ஏழாவது அட்டவணை படி, மத்திய அரசின் பட்டியலின் கீழ், குடியுரிமை சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதியின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. எனவே, இந்த சட்டத்தை அமல்படுத்த முடியாது என, எந்த மாநில அரசும் கூற முடியாது; அதற்கான அதிகாரம், மாநில அரசுக்கு இல்லை. இவ்வாறு, அவர் கூறினார்.


மோடி - அபே சந்திப்பு ரத்து


பிரதமர் மோடியுடன், கிழக்காசிய நாடான ஜப்பானின் பிரதமர் ஷின்சோ அபே, அசாம் மாநிலம் கவுஹாத்தியில், வரும், 15 - 17 ஆகிய தேதிகளில், இரு தரப்பு பேச்சு நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. தற்போது அசாமில் வன்முறை நடப்பதை அடுத்து, இந்த சந்திப்பு தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. வெளியுறவு செய்தி தொடர்பாளர் ரவீஸ் குமார் கூறுகையில், ''இரு தரப்பு அதிகாரிகளும் நடத்திய பேச்சில், மோடி - அபே சந்திப்பு ரத்து செய்யப்படுவதாகவும், இரு தரப்புக்கும் ஏற்ற ஒரு தேதியில், இந்த சந்திப்பை, வேறு ஒரு நாளில் நடத்தவும் முடிவு எடுக்கப்பட்டது,'' என்றார்.


அசாமில் தொடரும் பதற்றம்


வட கிழக்கு மாநிலமான அசாமில், முதல்வர் சர்பானந்த சோனவால் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மாநிலம் முழுவதும் ஒரு வாரமாக, பெரும் வன்முறை நடந்து வருகிறது. மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் தடை உத்தரவு அமலில் இருந்தாலும், அதை மீறி, ஏராளமானோர் வீதிகளில் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

போக்குவரத்து முடங்கியுள்ளதால், ஏராளமானோர், விமான நிலையம், ரயில்வே ஸ்டேஷன்களை விட்டு வெளியேற முடியாமல் தவிக்கின்றனர். போராட்டக்காரர்கள், சாலைகளில் டயர்களை தீ வைத்து எரித்து, வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். வன்முறையை கட்டுப்படுத்த போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில், இருவர் பலியாகி உள்ளனர். கவுஹாத்தியில், நேற்று சில மணி நேரம் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டதை அடுத்து, அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதற்காக, ஏராளமான மக்கள், கடைகளில் குவிந்தனர்.

மற்றொரு வட கிழக்கு மாநிலமான மேகாலயாவிலும், பதற்றம் நிலவுகிறது. இதற்கிடையே, குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக, தொடர்ந்து, தீவிரமாக போராட்டம் நடத்தப் போவதாக, அசாம் மாநிலத்தை சேர்ந்த மாணவர் அமைப்புகள் அறிவித்துள்ளதால், வட கிழக்கு மாநிலங்கள் முழுவதும் பதற்றம் நிலவுகிறது.

அசாம் முதல்வர் சர்பானந்த சோனவால் கூறுகையில், ''போராட்டம் என்ற பெயரில், யாரும் வன்முறையில் இறங்கினால், மாநில அரசு, அதை வேடிக்கை பார்க்காது. வன்முறையில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, எச்சரித்துள்ளார். இதற்கிடையே, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, வட கிழக்கு மாநிலங்களுக்கு செல்லும், தன் பயணத்தை ரத்து செய்துள்ளார்.


ஐ.நா., கவலை


ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் ஆன்டோனியோ கட்டார்ஸ் கூறுகையில், ''குடியுரிமை மசோதா விவகாரத்தில் இந்தியாவில் நடக்கும் நிகழ்வுகளை கூர்ந்து கவனித்து வருகிறோம். மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்பது, ஐ.நா.,வின் அடிப்படை விதிகளில் ஒன்று. குடியுரிமை மசோதா விவகாரத்திலும், இந்த நடைமுறை பின்பற்றப்பட வேண்டும் என, ஐ.நா., விரும்புகிறது,'' என்றார். அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் கூறுகையில், ''இந்தியாவில், அதன் அரசியல் சட்டத்துக்கு உட்பட்டு, மத சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (10+ 115)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
14-டிச-201921:57:55 IST Report Abuse
tasmac tamilan vangura kasuku nalla kuvurada
Rate this:
Share this comment
Cancel
சத்தியம் - Bangalore,இந்தியா
14-டிச-201920:12:56 IST Report Abuse
சத்தியம் இந்து நாடக அறிவிக்க வேண்டும் என்று நீதி மன்றத்தில் வழக்கு தொடர வேண்டும் ....................
Rate this:
Share this comment
Cancel
Ashanmugam - kuppamma,இந்தியா
14-டிச-201917:54:15 IST Report Abuse
Ashanmugam குடியுரிமை சட்டம் மேல் முறையீடு வழக்கு தொடர்ந்தால், எடுத்த எடுப்பிலே உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து விடும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X