சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குழந்தை தொழிலாளர் ஆசிரியர் முயற்சியால் மீட்பு

Added : டிச 13, 2019
Share
Advertisement
கோவை: கோவை அருகே தனியார் மில்லில் வேலைக்கு சேர்க்கப்பட்ட இரு சிறுமியர், மீட்கப்பட்டனர்.திருவாரூர் மாவட்டம், குடவாசலைச் சேர்ந்தவர் காளியப்பன். இவரது, 14, 13 வயது மகள்கள், அப்பகுதியில், அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தனர். இரு வாரங்களாக, சிறுமியர் பள்ளிக்கு வரவில்லை. ஆசிரியர்கள் விசாரித்ததில், இரு சிறுமியரை யும், அவரது பாட்டி, கோவை மாவட்டம், அன்னுார் அருகே
 குழந்தை தொழிலாளர் ஆசிரியர் முயற்சியால் மீட்பு

கோவை: கோவை அருகே தனியார் மில்லில் வேலைக்கு சேர்க்கப்பட்ட இரு சிறுமியர், மீட்கப்பட்டனர்.

திருவாரூர் மாவட்டம், குடவாசலைச் சேர்ந்தவர் காளியப்பன். இவரது, 14, 13 வயது மகள்கள், அப்பகுதியில், அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தனர். இரு வாரங்களாக, சிறுமியர் பள்ளிக்கு வரவில்லை. ஆசிரியர்கள் விசாரித்ததில், இரு சிறுமியரை யும், அவரது பாட்டி, கோவை மாவட்டம், அன்னுார் அருகே திப்பநாயக்கன் பாளையத்தில் உள்ள மகா மேரு ஸ்பின்னிங் மில்லில், வேலைக்கு சேர்த்தது தெரிந்தது.இது குறித்து, ஆசிரியர்கள், கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர். கோவை மாவட்ட நிர்வாகம், சம்பந்தப்பட்ட மில்லில் சோதனை நடத்தி, சிறுமியரை மீட்க நடவடிக்கையில் இறங்கியது.மில் நிர்வாகம், வேலைக்கு சேர்த்த சிறுமியருக்கு, அட்வான்ஸ் தொகையாக, 15 ஆயிரம் ரூபாயை அவர்களது பாட்டியிடம் வழங்கியிருந்தது. சிறுமியரின் ஆதார் கார்டை கொண்டு வரும்படி கூறியிருந்தது.

ஆனால், அவர்கள் ஆதார் கார்டு தரவில்லை.வருவாய் துறையினர், அந்த சிறுமியின் குடும்பத்தாரிடம், பணத்திற்காக பள்ளியில் படித்து வந்த சிறுமியரை, வேலைக்கு சேர்த்தது குறித்து எச்சரித்தனர். நேற்று அந்த சிறுமியரின் பாட்டி, மில்லுக்கு வந்து சிறுமியரை தங்கள் ஊருக்கு அழைத்து சென்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X